Published:Updated:

ஏர் பிரஷ் மேக் அப்...

பதினாறு மணி நேர பளபளா !

பிரீமியம் ஸ்டோரி

 ''அவ்ளோ நேரம் மேக் - அப் போட்டுட்டு ஃபங்ஷனுக்குப் போனா, ஒரு அரை மணி நேரம்கூட ஃபேஸ் ஃப்ரெஷ்ஷா இருக்க மாட்டேங்குது. நேரம் ஆக ஆக... எல்லாம் கரைஞ்சு, முகம் டல்லாயிடுது... சே!''

ஏர் பிரஷ் மேக் அப்...
 ##~##

- பெண்களின் பொதுப் புலம்பல் இது!

''இனி, அந்தக் கஷ்டம் இல்லை... ஏர் பிரஷ் மேக் - அப் (Airbrush make-up) இருக்கே!'' என்று நல்ல செய்தி சொல்கிறார் அடையாறு 'வி.எல்.சி.சி. ஸ்கின் அண்ட் ஹேர் சர்வீஸ்'-ன் ஏரியா ஹெட் பியூட்டிஷியன் பிந்திதா!

ஏர் பிரஷ் மேக் அப்...

சமீபத்தில் அவர்கள் நடத்திய 'மேக் - அப் வொர்க் ஷாப்’பில், பார்வையாளர்களுக்கு ஆச்சர்யம் தந்தது, இந்தச் செய்திதான். ஸ்டேஜில் நகைகள், முகச்சாயங்கள் எதுவுமின்றி வந்தமர்ந்த மாடல் கல்பனாவுக்கு 'ஏர் பிரஷ் மேக் - அப்’ போட்டு 'டெமோ’ காட்டிக் கொண்டே பேசினார் சீனியர் மேக்-அப் ஆர்ட்டிஸ்ட் அபூர்வா...

''வீட்டுல அவ்வளவு நேரமா நாம போட்டுட்டுப் போற மேக் - அப், ஃபங்ஷன்ல கொஞ்சம் நேரம்கூட தாக்குப் பிடிக்கறதில்ல. இன்னொரு பக்கம், பார்லர் போய் பண்ணிக்கற அலங்காரங்களும் இதுக்கு விதிவிலக்கில்ல. 'அதை டிரை பண்ணிப் பார்ப்போமா..?’, 'இதைப் போட்டுப் பார்ப்போமா’னு ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பியூட்டி புராடெக்ட் பொருட்களை உபயோகிச்சு முகத்தைக் கெடுத்துக்கறதுதான் மிச்சம். அதுக்கெல்லாம் தீர்வு இந்த புது மேக் - அப்தான்!'' என்றவர்,

''இந்த மேக் - அப்போட ஸ்பெஷல்... 16 மணி நேரத்திலிருந்து 20 மணி நேரம் வரைக்கும் முகத்தை அப்படியே ஃப்ரெஃஷ்ஷா வெச்சுருக்கும். வழக்கமா போடற மேக் - அப்ல பிரஷ், ஸ்பான்ச் அல்லது விரல்களால கிரீம், பவுடரை எடுத்து முகத்துல தடவுவோம். இந்த 'மேக் - அப்’-ல... 'ஏர் பிரஷ்’ உபகரணம் மூலமா ஃபவுண்டேஷன், கன்சீலர், பவுடர், ப்ளஷ்னு எல்லாத்தையும் முகத்துல 'ஸ்ப்ரே’ பண்ணு வோம். கிட்டத்தட்ட காருக்கு பெயின்ட் அடிக்கற ஸ்டைல்ல! முகப்பூச்சு எல்லாம் இப்படி ஒரு மிதமான அழுத்தத்தோட, அதேசமயம்... மென்மையா முகத்துல பரவற தால... திட்டுகள் இல்லாம நம்ம சருமத்தோட நிறத்துக்கு 'ஈவனா’ செட் ஆகும். ரொம்ப நேரம் தங்கும். முகப்பருக்களையும் இந்த ஒப்பனை நேர்த்தியா மறைக்கும். இந்த 'ஏர் பிரஷ் ஜெல்’-ல ஆய்வுக்கு உட்பட்ட சிலிக்கன் புராடக்ட் மற்றும் தண்ணீர் மட்டுமே சேர்க்கறதால... பக்க விளைவு பிரச்னையும் இல்ல.

ஏர் பிரஷ் மேக் அப்...
ம.மோகன்

இதுக்கான கிட், கடைகள்ல கிடைக்குது. ஆனாலும், அதை உபயோகிக்க அனுபவம் தேவைங்கறதால சில முறை பார்லர்ல... புரஃபஷனல்ஸ்கிட்ட போட்டு பழக்கப்பட்ட பிறகு, வீட்டுல முயற்சிக்கலாம்!'' என்று அபூர்வா முடித்தபோது அலங்காரமும் முடிந்திருந்தது கல்பனாவுக்கு... அழகாக!

மாடல்:  கல்பனா
படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு