Published:Updated:

குட்டீஸ் குறும்பு !

குட்டீஸ் குறும்பு !

மழலை இன்பம்                                                                                                                            வாசகிகள் பக்கம்

சீரியல்ல சீரியஸா காமெடி பண்றாங்களே!

குட்டீஸ் குறும்பு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 இரவு ஏழு மணி நியூஸ் பார்க்காவிட்டால் தலையே வெடித்துவிடும் எனக்கு. ஆனால், அன்று எங்கள் வீட்டு டி.வி-யில் ஏதோ சீரியல் ஓடிக் கொண்டிருந்தது. நியூஸ் சேனல் மாற்றுவதற்காக டென்ஷனுடன் நான் ரிமோட்டைத் தேடிக் கொண்டிருக்க, என் ஐந்து வயது பேரன் சுஜீத் திடீரென்று, ''அச்சச்சோ... ஆச்சி அங்க பாருங்க... அந்தக்கா நம்ம ரிமோட்டை வெச்சுக்கிட்டு போன் பேசுறாங்க!'' என்றான். ஸ்டார் விஜய்யின் 'மகாராணி’ சீரியலில் நடிகை சுஜிதா போனில் பேசிக் கொண்டிருந்தார். அந்த போன்... எங்கள் வீட்டில் இருக்கும் அதே (!) டாடா ஸ்கை ரிமோட்தான்! அதை அவர் அத்தனை லாகவமாகப் பிடித்து பேசிக் கொண்டிருந்தாலும் எங்கள் வீட்டு வாண்டு அது 'ரிமோட்தான்’ என்று கண்டுபிடித்து விட்டதோடு... ''ஐயே... அந்தக்கா ரிமோட்டைப் போய் போன்னு நெனைச்சி பேசுறாங்க பாருங்க...'' என்று கேலி செய்ய, அந்தக் காட்சி காமெடியாக இருந்தாலும், குழந்தைகள் எத்தனை ஷ்ரூடாக இருக்கிறார்கள் என்று வியந்தேன்!

- ஜே.சி.ஜெரினாகாந்த், சென்னை-16

அழகிய 'பன்னி’ மகள்!

குட்டீஸ் குறும்பு !

நாங்கள் பெங்களூருவுக்கு மாற்றலாகி வந்த புதிதில் நானும் பக்கத்து வீட்டுத் தோழியும் குடும்பத்துடன் பக்கத்திலுள்ள பார்க்குக்கு சென்றிருந்தோம். அங்கு ஓடி விளையாடிக் கொண்டிருந்த என் ஐந்து வயது மகள் காவ்யா சிறிது நேரத்தில் எங்களிடம் வந்து, ''அம்மா... அங்க உட்கார்ந்திருக்கற அங்கிளும், ஆன்ட்டியும் என்னை 'பன்னி’னு சொல்றாங்கம்மா...’' என்று மனத்தாங்கலுடன் சொல்ல, எனக்கோ கோபம் தலைக்கேறியது. ''வா அவங்ககிட்ட போய் கேட்போம்...'’ என்று எழப் பார்த்த என்னை ஆசுவாசப்படுத்தி, ''கன்னடத்துல 'பன்னி’னா 'வாங்க’னு அர்த்தம்!’' என்று விளக்கினாள் பெங்களூருவாசியான என் தோழி. விஷயத்தை என் குட்டீஸிடம் நான் விளக்க, நாங்கள் சிரித்த சிரிப்பில் பார்க்கே எங்கள் பக்கம் திரும்பியது!

- சுகந்தி முரளி, பெங்களூரு-27

''என் சைக்கிளை மறந்துட்டீங்களா?!''

குட்டீஸ் குறும்பு !

மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக எங்கள் வீட்டுக்கு வந்த ஆசிரியையிடம் விவரங்கள் சொல்லிக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கேள்வியாக, ''உங்க வீட்டுல சைக்கிள் இருக்கா..?'' என்று அவர் கேட்க, ''இல்லை'' என்றேன். உடனே என் ஆறு வயது வாண்டு திவ்யதர்ஷினி, ''எங்க வீட்டுல சைக்கிள் இருக்கு... அம்மா பொய் சொல்றாங்க!'' என்று சொல்ல, எனக்கும் அந்த ஆசிரியைக்கும் தர்மசங்கடமாகி விட்டது. கோபத்தில் நான், ''நம்ம வீட்டுல எங்கடி சைக்கிள் இருக்கு..?'' என்றேன் என் வாண்டுவிடம். ''அம்மா... என்னோட சின்ன சைக்கிள் உடைஞ்சு போயிடுச்சுனு பரண் மேல எடுத்து வெச்சிருக்கீங்கள்ல... மறந்துட்டீங்களா..?'' என்று மழலையில் கேட்க, எனக்கும் அந்த ஆசிரியைக்கும் 'மெகா’ சிரிப்புதான்!

- ஜே.கே.பிரியா, சென்னை-23

உங்கள் வீட்டு குட்டீஸ் குறும்புகளையும் இந்தப் பகுதியில் அரங்கேற்றலாம்.

ஓவியங்கள்: ஹரன்

அனுப்ப வேண்டிய முகவரி: 'குட்டீஸ் குறும்பு,’ அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-600 002