பிரீமியம் ஸ்டோரி

 'சூப்பர் ரீச்' வில்லிகள் !

'அழகா இருந்தா... சினிமா வுல சான்ஸ், அழத் தெரிஞ்சா சீரியல்ல சான்ஸ்'னு ஆயிடுச்சு. அப்படி சீரியல் ஹீரோயின்கள அழ வெச்சு, காஸ்ட்யூம்ஸ், பாடி லேங்குவேஜ், மேனரிஸம்னு பின்னிப் பெடலெடுக்கற சீரியல் வில்லிகள் சிலருக்கு, இங்க ஹீரோயின்ஸைவிட செம்ம அப்ளாஸ்!

கேபிள் கலாட்டா
##~##

'எப்டீ..?!’னு பிடிச்சேன் சிலரை! ஜெயா டி.வி. 'சாந்தி நிலையம்’ சீரியல்ல G.D.P(ஜி.தேவி பிரசாத்) கேரக்டர்ல வந்து மிரட்டற ஷில்பாகிட்ட, '' 'ப்ரியமானவளே’ படத்துல சிம்ரனோட தங்கையா நடிச்சப்போ இருந்த அந்த 'ஸ்லிம்’ உடம்பை, இன்னும் மெயின்டெயின் பண்றீங்க. குட்''னு ஆரம்பிச்சேன்.

''நல்லா ஞாபகம் வச்சிருக்கியே. குட்!''னு அதை ரிட்டர்ன் பண்ணினவங்க,

''எந்த வேலையையும் லாபி செஞ்சு முடிக்கற கன்னிங் கம் க்ளவர் கேரக்டர்தான் 'G.D.P. ஜிகுஜிகு புடவை, படாபடா நகைகள்னு பயமுறுத்தாம... கோட், சூட்னு கார்ப்ரேட் கெட்டப்ல, தமிழ், இங்கிலீஷ், இந்தி, தெலுங்குனு நாலு மொழி பேசற இந்த வில்லி, தமிழுக்கு கொஞ்சம் புதுசு. லோக்கல் ஸ்லாங்ல சூப்பரா பேசறேன்னு ஏகப்பட்ட பாராட்டு. 'வெல்டன்!’னு கே.பால சந்தர் சார் பாராட்டினது, அவார்டு கிடைச்ச மாதிரி. வில்லி கேரக்டர் மட்டுமில்ல... 'செல்லமே’ (சன்) சீரியல்ல நேர்மையான போலீஸ் ஆபீஸர், 'வசந்தம்’ (சன்) சீரியல்ல லோக்கல் ரவுடினு வெரைட்டியா பண்றேன். நானும் சகலகலாவல்லவள்!''னு செல்ஃப் சர்டிஃபிகேட் கொடுத்துக்கிட்டாங்க ஷில்பா!

ஆமோதிக்கிறோம் 'G.D.P!

''அழகா இருக்கீங்க... பயமா இருக்குதுங்க''னு சொன்னா,

''ஓவரா ஓட்டாதே ரீட்டா!''னு அன்பா ஆரம்பிச்சாங்க காயத்ரிப்ரியா. ''பாஸிட்டிவ் கேரக்டர்கள்ல நடிச்சு அழுது அழுது அலுத்துப் போச்சு. கஷ்டப்படற மகளா, மருமகளாவே ஏன் எப்பவும் நடிக்கணும்னு தோணுச்சு. அப்போதான் கலைஞர் டி.வி-யில 'உறவுக்கு கை கொடுப்போம்’ சீரியல்ல நடிக்க ஏவி.எம்-ல இருந்து கூப்பிட்டாங்க. செமத்தையான நெகட்டிவ் ரோல். எப்பவும் ஸ்வீட் சாப்பிட்டே இருக்க முடியாதுல... அதான் காரமா இந்த ரோல் பண்றேன்''னு சுவாரஸ்யமா பேசினவங்க,

கேபிள் கலாட்டா

''சீரியல்ல என் கேரக்டர் பேரு தமயந்தி. 'தீ... தமயந்தீ’னு பில்ட் எப் எல்லாம் உண்டு. இந்த சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ நான் மூணு மாசம் கர்ப்பம். இப்போ சீரியல் 300 எபிசோடுகளை தாண்டிடுச்சு. என் பொண்ணு ரித்திகாவுக்கும் ஒன்றரை வயசாயிடுச்சு! கர்ப்பமா இருந்தப்போ ஒரு முறை வயிறு வலினு ஹாஸ்பிட்டலுக்குப் போனா, 'சீரியல்ல எப்படி தைரியமா இருக்கீங்க... என்னெல்லாம் வில்லத்தனம் பண்றீங்க. ஆனா, இந்த சின்ன வலிக்கு இப்படி கத்தறீங்களே...’னு சிஸ்டர்ஸ் எல்லாம் எனக்கு அட்வைஸ் பண்ணினாங்க. கொடுமையில்ல?!''னு கேட்ட காயத்ரி, இப்போ செகண்ட் இன்னிங்ஸுக்கு தயாராயிட்டாங்க. இப்ப மூணு மாசம்!

கேபிள் கலாட்டா

'வில்லியா நடிக்கறதே என் பிறவிப் பயன்’னு 'மெட்டி ஒலி’, 'மனைவி’, 'கீதாஞ்சலி’, 'ஜெயம்’, 'சிதம்பர ரகசியம்’, 'ஆசை’னு கிட்டத்தட்ட 30 சீரியல்கள்ல வில்லியா வந்து, தாய்க்குலங்களோட திட்டுகள வாங்கிச் சேர்த்தவங்க, அருணாதேவி. கொஞ்சம் நாளா அந்த அருமையான (!) வில்லியை சீரியல்கள்ல பார்க்க முடியாததால 'என்னாச்சு அருணா?’னு தேடிப் போனா... ஒன்றரை வயசுக் குழந்தை ஆஷிகாவை கொஞ்சிட்டு இருந்தாங்க.

''என் கணவர் ஆனந்தன் ஹெர்பல் பிஸினஸ் பண்றாரு ரீட்டா. குழந்தைக்காக சின்னத்திரையில ஒரு கேப் விட்டேன். ஆனாலும் ஹீரோயின்களை பாடாய் படுத்தாம இருக்க முடியலதான். இதோ... மறுபடியும் கிளம்பிட்டேன். சீக்கிரமே கண்ணை உருட்டி, பல்லைக் கடிச்சு, மைண்ட் வாய்ஸ்ல வில்லி வசனம் பேச வந்துடறேன்..!''னு சிரிச்சவங்க,

'' 'ஏன் நீ வில்லி கேரக்டர் மட்டும் பண்றே..?’னு நிறைய பேர் கேட்டிருக்காங்க. 'சீரியல்தான்னாலும், உங்களைப் பார்த்தாலே அடிக்கணும் போல தோணுது. அந்தளவுக்கு உங்க முகம் நெகட்டிவ்வா எங்க மனசுல பதிஞ்சு போச்சு’னு நிறைய சின்னத்திரை ரசிகர்கள் சொல்லியிருக்காங்க. அதையெல்லாம் கேக்கறப்ப... எனக்கு சந்தோஷமாத்தான் இருக்கும். இங்க ஹீரோயின் கேரக்டரைவிட, வில்லி கேரக்டர்தான் சூப்பரா ரீச் ஆகும் ரீட்டா!''னு சிரிக்கறாங்க அருணா!

சீக்கிரம் வாங்க!

கேபிள் கலாட்டா

'பப்ளி கேர்ள்’ மகாலட்சுமி, இப்போ மிஸஸ். மகாலட்சுமி அனில்குமார்! ''விஜய் டி.வி-யோட 'யாமிருக்க பயமேன்’ சீரியல் ஆடிஷன் நடந்துட்டு இருந்தது. ஹீரோ கேரக்டருக்காக வந்திருந்த அனில்குமாரை பழனியில பார்த்தேன். சில கமிட்மென்ட்களால அவரால அதுல நடிக்க முடியல. ஆனா நட்பு, காதல்னு எங்க நாட்கள் நகர, மகாவோட லவ்வபிள் ஹீரோவாயிட்டாரு. அனில் ரொம்ப இரக்க மனசுக்காரர். எல்லாருக்கும் உதவணும்னு நினைக்கறவர். அதெல்லாம்தான் அவரு 'ஐ லவ் யூ’ சொன்னப்போ... 'மீ டூ!’னு என்னை சொல்ல வெச்சது. சாஃப்ட்வேர் கம்பெனியில மேனேஜிங் டைரக்டரா இருக்கற அனிலும், நானும் பார்ட்டி, ஃபங்ஷன்னு ஜாலியா ஊர் சுத்தி முடிச்சுருக்கோம். விஜயவாடா, எங்க ரெண்டு பேருக்குமே சொந்த ஊர். அடுத்தாப்புல அங்கேயும் ஒரு ட்ரிப் அடிக்கணும்!''னு டிக்கெட் போட கிளம்பினாங்க மகாலட்சுமி!

பத்திரமா போயிட்டு வாங்க!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

 நோய் பரப்பும் விளம்பரம்!

''சமீபத்தில் டாய்லட் கிளீனர் தொடர்பான விளம்பரம் பார்த்து அதிர்ந்தேன். அந்தக் கிளீனரை பயன்படுத்தினால் டாய்லெட் 'படுசுத்தமாகிறது' என்பதை நிரூபிக்க... கையால் தொட்டு காட்டுகிறார்கள். அதைப் பார்க்கும் குழந்தையும் அப்படியே செய்கிறது. இதுமாதிரியான விளம்பரங்களை பார்க்கும் குழந்தைகள், எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியாதா? அவர்களெல்லாம் நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? தயவுசெய்து இப்படியெல்லாம் தவறாக வழிகாட்டாதீர்கள்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் திருப்பூரில் இருந்து எஸ்.சகீலா.

அரசாங்கம்... புத்தகம் விற்கலாமே!

''சன் டி.வி-யில் 'புத்தகம் பேசு’ என்கிற தலைப்பில் பேசிய சுகி.சிவம், 'உலக அளவில் பேசப்படும் சிறந்த புத்தகங்களை அரசே மொத்தமாக வாங்கி, ரேஷன் கடை மூலம் விற்பனை செய்யும் அதிசயம் கியூபா நாட்டில் நடக்கிறது. இதன் மூலம், மக்கள் நல்ல புத்தங்களைப் படிக்க முடிகிறது. சீனா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அரசுகளும் இதேபோலவே மக்களுக்கு உதவுகின்றன' என்று சொன்னார். அதைக் கேட்க கேட்க பிரமிப்பாக இருந்தது. இந்த நல்ல விஷ யத்தை நம்முடைய அரசும் செயல்படுத்தலாமே?'' என்று ஆர்வப் படுகிறார் திருவண்ணாமலையில் இருந்து எஸ்.உமாதேவி

கலகல தென்றல்!

''சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'தென்றல்' சீரியல்... 'புயலாக'வே வீசிக்கொண்டிருந்தாலும், குபீர் சிரிப்புக்கும் பஞ்சமில்லை. சியாமளா கர்ப்பமாக இருக்கிறாள் என்று தவறாகப் புரிந்துகொள்ளும் ஆனந்தின் பெற்றோர், விஷயத்தை சியாமளாவின் பெற்றோருக்குத் தெரிவிக்கின்றனர். பழம், பட்சணங்களுடன் அவர்கள் ஓடி வர, விவரம் புரியாமல் விழிக்கும் சியாமளா... விவரம் தெரிந்ததும் அடக்க முடியாமல் சிரிக்கிறாள். 'அப்பா, உங்கள் மருமகன்தான் வாந்தி எடுத்தார். வேண்டுமானால் அவருக்கு வளையல் அடுக்கி, சீமந்தம் பண்ணுங்கள்’ என்று அவள் சொன்னதும்... அங்கு 'குபீர்' சிரிப்பு வெடிக்க... நாங்களும் வயிறு வலிக்க சிரித்துத் தீர்த்தோம்'' என்று குதூகலிக் கிறார் சென்னையில் இருந்து ஆர்.வசந்தா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு