Published:Updated:

'ஜோ' டைரக்ஷனில் 'ஜோர் மெஹந்தி' !

'ஜோ' டைரக்ஷனில் 'ஜோர் மெஹந்தி' !

பிரீமியம் ஸ்டோரி

எஸ்.ஷக்தி

கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் என்று கொங்கு மண்டலம் முழுக்க விரிந்து பரவியிருக்கும் தனது உறவுகளை முடிந்த மட்டும் நேரில் சென்று அழைத்த சிவகுமார், ''நம்ம புள்ளைங்கள ஆசீர்வதிக்க நீங்க அவசியம் வரோணும்!'' என்று அழுத்திச் சொல்ல...

'ஜோ' டைரக்ஷனில் 'ஜோர் மெஹந்தி' !
##~##

சூர்யாவும், கார்த்தியும் சூலூர் வட்டாரத்திலிருக்கும் நெருங்கிய உறவினர் வீடுகளுக்கு சென்று ''அப்பத்தா, கார் அனுப்பி வைக்கிறோம்... மண்டபத்துக்கு சல்லுனு வந்து சேருங்க!'' என்று உரிமை கொண்டாட...

கோவையில் நடைபெற்ற கார்த்தியின் திருமணத்துக்கு கூட்டம்   அலைமோதியது!

கார்த்தி-ரஞ்சனியின் கலகல கல்யாண வைபவத்தில் 'ரிசப்ஷனுக்கு இது', 'முகூர்த்தத்துக்கு அது' என்று மணமக்களின் காஸ்ட்யூம்களை முடிவு செய்திருந்தவர், அண்ணி ஜோதிகாதான். திருமணத்துக்கு சில நாட்கள் முன்பாக வடநாட்டு திருமண சடங்கான 'மெஹந்தி ஃபங்ஷனை’ ரஞ்சனிக்கும் நடத்திஇருந்தார் ஜோ. நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்ட இந்த ஃபங்ஷனில் ஜோடி ஜோடியாக பாட்டு, டான்ஸ் என்று நொடிக்கு நொடி ஆனந்தப்பட்டிருக்கிறார்கள். கார்த்தி, ரஞ்சனியின் சிறு வயது முதல் லேட்டஸ்ட் வரையிலான போட்டோக்களை வைத்து ஒரு சினிமாவே ஓட்டியது, மெஹந்தி ஃபங்ஷனின் ஹைலைட் க்ளைமாக்ஸ்!

ஜூலை 3-ம் தேதி திருமணத்துக்கு முந்தைய நாள் மாலையில் வரவேற்பு. செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு கார்த்தியின் திருமணத்தில்தான் பொங்கி வழிந்தது 'கொடீஸியா’ வளாகம். 'மசக்களி’, 'செமி சில்க்’, 'டிசைனர்’ உடைகள் என பளபளத்த பெண்கள் குறுக்கும் நெடுக்குமாக நடக்க... 'மினுமினு’வென களைகட்ட ஆரம்பித்தது ரிசப்ஷன். ரஞ்சனியின் கழுத்தில் டாலடித்துக் கொண்டிருந்த நெக்லெஸுக்கு பெண்கள் மத்தியில் செம கிரேஸ்.

'ஜோ' டைரக்ஷனில் 'ஜோர் மெஹந்தி' !

திருமணத்தை பாரம்பரியத்தன்மை துளியும் விட்டுப் போகாமல் நடத்தினார் சிவகுமார். ஒவ்வொரு சடங்குகளும் பார்த்து பார்த்து நிறைவேற்றப்பட்டன. பட்டினிசாதம், முகூர்த்த கால் நடுதல், உருமால் கட்டு சீர், இணைச்சீர், கை கோர்வை என்று சிவகுமார் சார்ந்த இனத்தின் திருமண அடையாளங்கள் அத்தனையும் அம்சமாக நிறைவேற்றப்பட்டன. 'மணப்பெண்ணை எனது சகோதரியாக பாவிப்பேன்' என்று மாப்பிள்ளை யின் சகோதரி ஏற்றுக் கொள்ளுதல், தாய்மாமன்மார், மாப்பிள்ளைக்கு பட்டம் கட்டுவது என்று மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியுமாக அரங்கேறின அந்த வைபவங்கள். பெரியவர்கள் ஆசியோடு கார்த்தி தாலிகட்ட, கொங்கு குடிமகன் மங்கல வாழ்த்து பாடியபோது, அரங்கில் அத்தனை நிசப்தம்.

சந்தோஷம் கரை புரண்டோடிய இந்த இரண்டு நாள் கல்யாண நிகழ்வுகளில் மணமக்களுக்கு இணையாக ஆச்சர்யப்படுத்திய ஜோடி சூர்யா - ஜோதிகா!

'நான் சூலூர் பொண்ணுங்... சூர்யா எனக்கு மாமன் பையன் முறையாகுதுங். அதனால நீங்க அக்கா முறையாகுதுங்...’ என்று உறவு சொல்லியபடி ஜோதிகாவை ஒரு கல்லூரி மாணவி துரத்திக் கொண்டுஇருந்தது, வெகு சுவாரஸ்யம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு