Published:Updated:

எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தாதீர்கள் !

எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தாதீர்கள் !

பிரீமியம் ஸ்டோரி

நாச்சியாள், க.நாகப்பன்

பேர்ல் குப்தா... சிரிப்பும், சந்தோஷமுமாக பஸ்ஸை விட்டு இறங்கி, தன் தோழியுடன் டெல்லியில் இருக்கும் அந்தக் கல்லூரிக்குள் நுழையும் தருணம்... அதிவேகத்தில் அவளைக் கடந்து செல்கிறது ஒரு ஜீப். அதிலிருந்த ஒருவன் துப்பாக்கியால் சுட, அந்த இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் மரணமடைகிறாள் பேர்ல் குப்தா. தொடர்ந்து அவளை டீஸ் செய்து கொண்டிருந்தவன், கடைசியில் அவளுடைய உயிரையே வாங்கிவிட்டான்.

நாகர்கோயில் முத்துசெல்வி, ஆயிரம் கனவுகளைச் சுமந்து பள்ளிக்கு சென்று வந்தாள். அவளிடம் ஒருவன் தன் செல்போனில் இருந்த ஆபாசமான போட்டோவைக் காட்டி மிரட்டுகிறான். இது சில நாட்களாகத் தொடர, மன உளைச்சலைத் தாங்க முடியாமல் அந்த அரும்பு... தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டாள்.

எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தாதீர்கள் !
##~##

பெண்களுக்கு எதிரான கொடு¬மகளுக்குச் சான்றாக வரலாற்றில் பதிவாகியிருக்கும் எத்தனையோ சம்பவங்களில் இவை இரண்டும்... இரு சோறு பதம்! இந்த மாதிரியான பாலியல் தொந்தரவுகளுக்கு, ஒவ்வொரு 26 நிமிடத்துக்கும் ஒரு முறை ஒரு பெண் பலியாகிக் கொண்டிருக்கிறாள் என்பது நெஞ்சை சுடும் நிஜம்.

'ஈவ் டீஸிங்’ எனப்படும் இத்தகைய பாலியல் சீண்டல்களையும், பாலியல் தொந்தரவுகளையும் கடந்து வராத பதின் பருவத்தினர் இந்தியாவில் மிக மிக அரிது. 'பாலியல் தொந்தரவுகள், வன்முறைகளை எதிர்கொள்வது எப்படி... இந்தப் பதின்பருவ பெண்களுக்கு தொடரும் பாதுகாப்பில்லாத சூழலை மாற்றுவது எப்படி?’ என்பதற்கு லயோலா கல்லூரிப் பேராசிரியர் ஜோஸ்ஃபின் ஜெயசாந்தியின் ஆலோசனைகள், வெளிச்சம் தருவதாக இருக்கின்றன.

''இன்றைய நவீன கலை வடிவங்களான சினிமா, டி.வி. நாடகங்கள், சினிமா பாடல்கள், ஓவியங்கள், புகைப்படங்கள் என எல்லாம் பெண்ணை அழகுப் பதுமையாகவும்... மூன்றாம் தரமாகவும்தானே சித்திரிக்கின்றன? முதலில் நம் சென்ஸார் கமிட்டியில் இருப்பவர்களுக்கு 'ஜென்டர் சென்ஸிடைசேஷன்’ எனப்படும், பாலின சமன்பாடு குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் பயிற்சி

எதிர்மறையான புரிதலை ஏற்படுத்தாதீர்கள் !

கொடுக்கப்பட வேண்டும். நம் ஊர் பெண் போலீஸ்கூட, தான் போலீஸ் என்பதை மறந்து, பெண் என்பதை மட்டும் நினைவில் வைத்து, ஆண்களைப் பார்த்தால் தலைகுனிந்து வெட்கப்பட்டு போகிற அளவுக்குத்தான் தயார்படுத்தி இருக்கிறது சமூகம்.

பெற்றோர்கள் தங்கள் டீன் ஏஜ் பெண்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். அப்போதுதான், 'அம்மா... என்னை ஒருத்தன் தினமும் கிண்டலடிக்கிறான், அசிங்கமா பேசுறான்...’ என்ற சிக்கலை அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். அப்படிச் சொல்லும்போது, 'ரோட்ல எதுக்குடீ சிரிச்சு பேசிட்டு போற’ என்று குற்றச்சாட்டை அவர்கள் மீதே திருப்பும் தவறை பெற்றோர்கள் செய்யக் கூடாது. அதை எப்படி எதிர்கொள்வது என்ற தைரியத்தை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எல்லா கல்லூரிகளிலும் பெண்களின் பிரச்னையை சொல்ல ஒரு 'ஆலோசனை மையம்’ அமைக்கப்பட வேண்டும். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு 'பாலியல் புரிதலை’ ஏற்படுத்த வேண்டும். அதையெல்லாம்விட முக்கியம், ஒவ்வொரு ஆண் குழந்தையிடமும் 'பெண்ணை சக மனுஷியாவும் தோழியாவும் மதி, நட்பா இரு’ என்று சொல்லி வளர்த்தாலே... பாதி பிரச்னைகள் தீர்ந்து விடும். குடும்பங்களிலும் கல்விக்கூடங்களிலும் இந்தக் கல்வி போதிக்கப் படாமல் பெண்ணை பற்றி அவர்களுக்கு எதிர்மறையான புரிதலை ஏற்படுத்துவதே பிரச்னையின் ஆணிவேர்!'' என்று நடைமுறை உண்மையைச் சொன்னவர்,

''ஆண்கள் பொது இடங்களில் வக்கிர மாக நடந்துகொண்டால் அந்த இடத்திலேயே, 'ஏன் இப்படி அறிவில்லாம நடந்துக்கறே..?’ என்று கேட்கும் தைரியம் பெண்களுக்கு வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் 'இந்த ஆள் தவறானவர், இந்த இடம் பாதுகாப்பானது இல்லை’ என்று உணரும் நுண்ணறிவு இருக்கிறது; அதை உணர்ந்து செயல்பட வேண்டும். ஒருவனுடைய பாலியல் அக்கிரமம் அதிகமானால்... காவல்துறையை நாட வேண்டும். இதற்கான சட்டங்கள் கடுமையாக இருப்பது முக்கியம்!'' என்றார் தீர்க்கமாக!

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பற்றி அடுத்த இதழில்..!

படம்:சொ.பால சுப்ரமணியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு