Published:Updated:

ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

கேபிள் கலாட்டா    
ரிமோட் ரீட்டா

''விஜய் டி.வி-யில 'மகான்’னு ஒரு சீரியல் ஓடிக்கிட்டிருக்கு. அதுல ராகவேந்திரர் கேரக்டர்ல வர்ற அந்த தம்பிக்கு, அப்படியரு தெய்விக தேஜஸ். அப்படியே டி.வி. முன்னாடி சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணணும்போல இருக்கு..!''

- பெண்கள், ஆண்கள், பெரியவர்கள்னு எல்லா தரப்பு வாழ்த்துக்களும் வந்து குவிஞ்சது ராகவேந்திரரா அரிதார அவதாரம் எடுத்திருக்கற தினேஷ§க்கு! அதுக்குப் பிறகும் சும்மாயிருக்க முடியுமா... அவர்கிட்ட பேசாம!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

''ரீட்டா, நான் அடிப்படையில ஆக்டர் எல்லாம் கிடையாது. விஜய் டி.வி-க்காக அவார்டு புரோகிராம்ஸ் ஷூட் பண்ற டைரக்ஷன் டீம்ல நான் இருந்தேன். அந்த டைரக்டர் தமிழ்தாசனும் நானும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். திடீர்னு ஒரு நாள், 'நீங்க ஏன் நடிக்கக் கூடாது தினேஷ்..?’னு கேட்டார். அந்த நேரம் பார்த்து விஜய் டி.வி. 'மகான்’ டீம்ல இருந்து 'ராகவேந்திரர் கேரக்டர் பண்றீங்களா..?’னு கேட்க, முதல்ல கொஞ்சம் தயங்கினாலும், ராகவேந்திரரா நடிக்கற அந்த பாக்கியத்துக்காகவே 'ஓ.கே’ சொல்லிட் டேன்.

'இளவயசுல வர்ற ராகவேந்திரருக்கு தினேஷ் ஓ.கே... வயசான கேரக்டருக்கு வேற யாரையாவது செலக்ட் பண்ணலாம்’னு டீம்ல டிசைட் பண்ணினாங்க. அதேசமயம், 'எதுக்கும் தினேஷ§க்கே மேக்-அப் டெஸ்ட் பார்ப்போமே...’னு சொன்னாங்க. அந்த கெட்டப்பும் எனக்கு பொருந்தினது, என்னோட அதிர்ஷ்டம்'' அப்படினு பக்திப் பரவசத்தோடு உருகின தினேஷ், அடுத்து சொன்னது... 'சூப்பர் ஸ்டார்' விஷயம்!

ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

''நடிக்கறதுக்கு முன்ன, 'ஸ்ரீ ராகவேந்திரா' படத்துல அந்த கேரக்டராவே வாழ்ந்த ரஜினி சார்கிட்ட ஆலோசனையும், ஆசீர்வாதமும் வாங்கணும்னு ஆசைப்பட்டு அப்பாயின்ட் மென்ட் கேட்டேன். அடுத்த நாளே வரச் சொல்லிட்டாரு! ராகவேந்திரர் பத்தி நிறைய விஷயங்கள் மனப்பாடம் பண்ணிட்டுப் போனா, மென்மையான புன்னகையோட வந்து நிக்க றாரு ரஜினி சார். கூடப் பிறந்த அண்ணன் மாதிரி அப்படியரு அந்யோன்யம். 'ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணே’னு கால்ல விழவும், என் தோளை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு, 'சின்ன பையனா இருந்திட்டு இப்படி ஒரு பெரிய கேரக்டர்ல எப்படிப்பா நடிக்கணும்னு தோணுச்சு? நீ நிச்சயம் நல்லா வருவ!’னு ஆசீர்வாதம் பண்ணினாரு'' என்று புல்லரித்துப் போன தினேஷ்,

''ராகவேந்திரர் கேரக்டர்ல நடிக்க ஆரம்பிச்சதுலேர்ந்து என் மனசு எப்பவும் நிம்மதியாவும், சந்தோஷமாவும் இருக்கு!''

- நிதானத்தோட சொன்னாரு!

'மகானு’பவம்தான்!

சேனல் வட்டாரத்துல இந்தப் புத்தாண்டுக்கு நிறைய நியூ ரிலீஸ்கள்பா! அந்த லிஸ்ட்டை உங்களுக்காக இங்கு பெருமையுடன் வழங்குவது... உங்கள் 'ரீட்டா மீடியா வொர்க்ஸ்!’

ஹலோ... ஹலோ... 'நீரா ராடியா மீடியா வொர்க்ஸ்’ இல்லீங்கோ!

ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

உணவுப் பிரியர்களுக்கு, ருசியர்களுக்கு ஒரு நற்செய்தி! விஜய் டி.வி-யில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 5.30 மணிக்கு 'சுவை தேடி’ எனும் சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சிக் குழுவினர் தமிழ்நாடு முழுக்க வட்டமடித்து, அந்ததந்த ஊர் ஸ்பெஷல் உணவுகளைத் தயாரித்து சுடச்சுட காட்டப் போகிறார்கள்... சுவாரஸ்யத் தகவல்களோடு! இதில் கலக்கப்போவது யார் தெரியுமா... நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் ஆனந்த கண்ணன் மற்றும் நிஷா!

மணக்குதே... கமகமக்குதே!

ரஜினியின் ஆசீர்வாதம் என் பாக்கியம் !'

'கோலங்கள்' சீரியலுக்குப் பிறகு, சின்னத்திரையில் அவ்வளவாக தென்படாத தேவயானி, விளம்பரப் படங்களில் மட்டும் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். தற்போது ராஜ் டி.வி-யில் வரவிருக்கும் 'கொடி முல்லை' என்ற சீரியலில் ஹீரோயினாக கடும் உழைப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறார். ஜனவரி முதல் ஒளிபரப்பாக இருக்கும் இந்த சீரியலுக்கான நேரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

தேவ முல்லை!

'கோலங்கள்' சீரியலில் 'ஆதி' என்ற பெயரில் பக்கா வில்லனாக தமிழகத்தையே திகிலில் ஆழ்த்திய அஜய், தற்போது ஜெயா டி.வி-யில் 'கோடியின் குரல்' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தப்போகிறார். புத்தாண்டு முதல் களத்துக்கு வரவிருக்கும் இந்த 'கேம் ஷோ’வில் அஜய் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால்... பணப் பரிசு மழை பொழிவார்களாம். ஆரம்பத்தில் சினிமா பிரபலங்கள் மட்டுமே பங்கேற்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில், போகப்போக பொது ஜனங்களும் ஐக்கியமாகலாமாம்.

பண மழை!

சேனல் வட்டாரத்தில் ஒரு புதிய உதயம்... 'சத்யம் சேனல்!’ 'அட எங்க ஊருலயெல்லாம் தெரியலையே?'னு வருத்தப்படாதீங்க. இப்போதைக்கு ஒரு நூறு, இருநூறு ஊர்கள்லதான் நாங்க தெரிவோம்னு அவங்களே சொல்றாங்க. போகப் போகத்தான் தமிழ்கூறும் நல்லுலகத்தையே கலக்குவாங்களாம்.

 

 

''சேனல்களுக்கு இடையில் நிலவும் பலத்த போட்டியைச் சமாளிக்க... பொழுதுபோக்கு விஷயங்களை மட்டுமே நம்பிக்கிட்டிருக்காம... தன்னம்பிக்கை மனிதர்கள், உடல் நலம், மன நலம், கல்வி இப்படி பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகளையும் வழங்கிக்கிட்டிருக்கோம்'' என்று நம்பிக்கை பகிர்கிறது சேனல் நிர்வாகம்!

 

வாரே.. வாவ்!

 

வாசகிகள் விமர்சனம்!

 

 

பாட்டி சொல்லை தட்டாதே!

 

''கலைஞர் டி.வியில் ஒளிபரப்பாகும் 'உறவுக்குக் கை கொடுப்போம்' தொடரில் டாக்டர் சக்தியும், அவள் கணவனும் ஈகோ காரணமாகப் பிரிகின்றனர். கணவர் தடம் மாறி வேறு ஒரு பெண்ணுடன் பழகு கிறார். இருவரின் பாட்டியான எஸ்.என்.லட்சுமி, தன் பேத்தியிடம் 'மனசு மாறி, புருஷன்கிட்ட சுமுகமா இருக்க முயற்சி செய். இல்லேனா, உன் புருஷன் உன்னை விட்டு நிரந்தரமா போயிடுவான்’ என்று எச்சரிக்கிறார். அப்படியே திரும்பி, 'ஹலோ லவ்வர்பாய்! நீ உன் இஷ்டத்துக்கு வேற ஒரு பெண்ணுகூட ஊர் சுத்தறியே,  உன்னைப் பார்த்து ஊர் சிரிக்காது?  ஒழுங்கு மரியாதையா பொண்டாட்டியோட வாழறதுக்கு பாரு. இல்லேனா, உன் கதி அவ்வளவுதான்’ என்று பேரனிடம் சொல்லிவிட்டு போனை கட் பண்ணுகிறார். ஒரு குடும்பத்தில் பாட்டி என்பவர் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இதிலிருந்தே உணர முடிகிறது'' என்று பெருமிதம் கொள்கிறார் சென்னையில் இருந்து எஸ்.ரமாமணி.

 

நினைத்தது பலித்தது!

 

'' 'ஓட்ஸ்’ விளம்பரம் அது. அந்தத் தம்பதி ஹோட்ட லுக்குள் நுழையும். 'சமோசாதான் ஆர்டர் செய்வார் கணவர்' என்று மனைவி நினைக்க... அதுவே நடக்கும். அடுத்து துணிக்கடை... 'சிவப்பு கலர் டை தேர்ந்தெடுப்பார்' என்று மனதுக்குள் மனைவி நினைக்க, அதையே செய்வார் கணவர். அடுத்து, அவருடைய ஆரோக்கியத்தை மனதில் வைத்து 'ஓட்ஸ்’ சமைக்கும் மனைவி, 'கணவர் நம் தோள்மீது கை போடுவார்’ என்று நினைப்பாள். அப்படியே நடப்பது போல இனிமையாக முடிகிறது விளம்பரம். எல்லா குடும்பங்களிலும் இந்த அந்யோன்யம் இருந்துவிட்டால், 'விவாகரத்து’ என்ற வார்த்தைக்கே இடமிருக்காது'' என்கிறார் சென்னையில் இருந்து  ர.கிருஷ்ணவேணி.

 

நட்டாற்று சீரியல்கள்!

 

''விஜய் டி.வியில் இன்ட்ரஸ்டிங்காக போய் கொண்டிருக்கும் பல சீரியல்கள், திடீர் திடீரென நிறுத்தப்படுகின்றன. இப்படி சமீபத்தில் நட்டாற்றில் விடப்பட்ட சீரியல்களில் ஒன்று... 'மீரா’. இவள் என்ன ஆனாள் என்பதும் தெரியவில்லை. தற்போது விறுவிறுப்புடன் போய் கொண்டிருக்கும், 'என் பெயர் மீனாட்சி’ எப்போது நிற்கும் என்று பயத்தோடுதான் பார்க்கிறோம். புதுமையான புரோகிராம் தரவேண்டும் என்பதற்காக, சீரியல்களை இப்படித்தான் 'அம்போ' என்று பாதியிலேயே நிறுத்தி, எங்களுடைய வெறுப்பைச் சம்பாதிப்பதா?'' என்று பொருமுகிறார் தஞ்சாவூரில் இருந்து ஐஸ்வர்யா.