Published:Updated:

'அவர் சேமிப்பது பணமல்ல... எங்களுக்கான சந்தோஷம் !'

'அவர் சேமிப்பது பணமல்ல... எங்களுக்கான சந்தோஷம் !'

'அவர் சேமிப்பது பணமல்ல... எங்களுக்கான சந்தோஷம் !'

மனித குலத்தை மீட்டெடுக்க, மனிதராகவே இந்தப் பூவுலகில் அவதரித்து, தன்னையே பலியாக தந்தவர்... இயேசு! அவரை நினைவுகூரும் வகையில், அவருடைய பிறந்த நாளை 'கிறிஸ்துமஸ்' என உலகமே கொண்டாட, குஷியோடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இவ்வேளையில், தங்களின் மறக்க முடியாத அனுபவங்களை இங்கே பகிர்கிறார்கள் இந்த வி.ஐ.பி-க்கள்...

அருட் சகோதரி லூர்து (சூசையப்பர் திருக்காட்சி சபை கன்னியர் மடத் தலைவி, சென்னை):

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

 ''நான், ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்ஷெட்பூர் அருகில இருக்கற மசபோனிங்கற ஊர்ல இருந்தபடி என்னோட பணிகளை செய்துகிட்டிருந்தேன். ஒரு நாள், கிறிஸ்துமஸ் புரோகிராமுக்காக கட்சிலாங்கற ஊருக்குப் புறப்பட்டேன். அந்த நேரம் பார்த்து என்னை சந்திச்ச ஒருத்தர், 'நான் தொழுநோயால பாதிக்கப்பட்டதால, என் மனைவி, குழந்தைங்க வெறுத்து ஒதுக்கிட்டாங்க. எங்க போறதுனு தெரியல. ஏதாச்சும் ஹோம்ல சேர்த்துவிடுங்க’னு கலங்கினார். எனக்கோ டிரெயினை பிடிக்கணுங்கிற அவசரம். என்ன பண்றதுனு புரியல. அவரையும் கூட்டிக்கிட்டு டிரெயின்ல ஏறிட்டேன். அவசரத்துல டிக்கெட் எடுக்க முடியல. டி.டி.இ. வந்து டிக்கெட் கேட்க, நிலமையை விளக்கினோம். கரிசனத்தோட புரிஞ்சுக்கிட்டவர், எங்களுக்கு உதவி செய்தார். பிறகு, அந்த நபரை ஜம்ஷெட்பூர்ல இருக்கற தொழுநோயாளிகள் ஹோம்ல சேர்த்துவிட்டேன். கிறிஸ்துமஸ் நாள்ல ஒரு நல்ல காரியம் செஞ்ச மன நிறைவு. பூரண குணமாகிட்ட அவருக்கு அங்க இருக்கற மடத்துலயே வாட்ச்மேன் வேலை கொடுத்தேன்!''

நிர்மலா சுரேஷ், கவிஞர்

'அவர் சேமிப்பது பணமல்ல... எங்களுக்கான சந்தோஷம் !'

''பத்து வருஷத்துக்கு முன்ன, கிறிஸ்துமஸ் பண்டிகையையட்டி முப்பது பேர் குழுவா சேர்ந்து இஸ்ரேல் நாட்டுக்கு போற வாய்ப்பு கிடைச்சுது. ஜீசஸ் பிறந்த ஊரான பெத்லஹேம் போனோம். அவர் நடந்து போன பாதை, அவர் நடமாடிய ஆலீவ் மலை எல்லாத்தையும் சுத்தினோம். இரண்டாயிரம் வருஷத்தைக் கடந்தும் நிக்கற அந்த நினைவுச் சின்னங்களைப் பார்த்தப்போ... இனம் புரியாத ஒரு சிலிர்ப்பு. இயேசு பிறந்த அந்த ஊர்ல ஒரு சர்ச் இருக்கு. இதுதான் இயேசு பிறந்த இடம்ங்கிறத குறிக்கற மாதிரி, தரையில தங்க நட்சத்திரத்தைப் பதிச்சு வெச்சுருக்காங்க. அதை எல்லாம் கண்குளிர தரிசனம் செய்தேன். அந்தப் பயண அனுபவத்தை வெச்சுதான்... 'இயேசு  மாகாவியம்’ அப்படிங்கற புதுக்கவிதை நூலை எழுதினேன். அதோட வெளியீட்டு விழாவுல, 'தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே, காவியம் எழுதிய ஒரே பெண்!’னு கவிஞர் வாலி என்னைப் பாராட்டினது, என் பாக்கியம்!''

கிரேஸ் கருணாஸ், பின்னணிப் பாடகி:

'அவர் சேமிப்பது பணமல்ல... எங்களுக்கான சந்தோஷம் !'

''எங்களோட கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... கொஞ்சம் ஸ்பெஷல்தான்! இருபது வருஷமா தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, சித்தி, பெரியம்மா, அத்தை, மாமா, எங்க ஆர்க்கெஸ்ட்ரா டீம், கூடவே இருந்து வேலை செய்யறவங்கனு மொத்தம் நூத்துக்கும் மேற்பட்டவங்க ஒண்ணா சேர்ந்து ஒரு விழா மாதிரி கிறிஸ்துமஸை கொண்டாடிட்டு வர்றோம். பிரியாணி பந்தி வச்சு, பட்டாசு வெடிச்சு, மிட் நைட்ல கேக் வெட்டி, பரிசுகளைப் பரிமாறிக்கிட்டுனு... ரொம்ப ஜாலியான கொண்டாட்டம் அது. எங்கப்பாதான், கிறிஸ்துமஸ் ஹீரோ. காரணம், அன்னிக்கு வீட்டுல எல்லாருக்கும் பரிசுகள் தந்து ஆசீர்வதிப்பார். அதுக்காக ஜனவரியில இருந்தே மாசச் சீட்டுல சேர்ந்து, சேமிப்பார்! அவர் சேமிக்கறது பணம் இல்ல... எங்களுக்குக் கொடுக்கறதுக்கான சந்தோஷம்! இல்லையா..?!''

ரேவதி, எம்.மரிய பெல்சின்
படம்: வி.செந்தில்குமார்