Published:Updated:

பிரசவ நேரம் வரை கச்சேரி !

பிரசவ நேரம் வரை கச்சேரி !

பிரசவ நேரம் வரை கச்சேரி !

டிசம்பர் இசை சீஸன் படுஜோராகக் களைகட்டுகிறது. இசை வித்தகிகள் எல்லாம் கடுமையான சாதகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க... இளம் பாடகிகளில் ஒருவரான மஹதி ஸ்ரீகுமார்... டேபிள்ஸ், ரைம்ஸ், தேவதைக் கதைகள் என்று குட்டீஸ்களுக்கான விஷயங்களைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்!

''பின்னே... வயித்துல இருக்கற குழந்தை ஆறாவது மாசத்துலயே மெல்லிய சத்தத்தை கேட்க ஆரம்பிக்குமாமே..!'' என்று ஆச்சர்யத்தோடு சொல்கிறார் ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கும் மஹதி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''டேபிள்ஸ், ரைம்ஸ் மட்டுமில்ல... ராமாயணத்தையும் தொடர்ந்து படிக்கிறேன். அப்புறம், தினமும் வாக்கிங், விடாம எக்ஸர்சைஸ், நேரத்துக்கு சாப்பாடு, தவறாம செக்-அப். இதையெல்லாம் செய்யறதோட... கொஞ்சமும் காம்ப்ரமைஸ் பண்ணிக்காம சாதகமும் பண்ணிக்கிட்டிருக்கேன். வயித்துப் பிள்ளைக்காக கச்சேரியிலயும் அப்பப்ப பாடறேன். இசைப் பிரியர்களுக்காக பாடறது சுகமான... சிலிர்ப்பான அனுபவம். அதேமாதிரி, 'வயித்துல இருக்கற நம்ம குழந்தை கேட்கும்'னு நெனைச்சுகிட்டே பாடுறப்ப புதுவித சிலிர்ப்பு ஏற்படுது'' என்று சிலிர்க்கும் மஹதி,

 ''நான் வயித்துல இருந்தப்ப, பிரசவ வார்டுக்கு போற வரைக்கும்கூட கச்சேரி பண்ணிட்டேயிருந்தாளாம் எங்கம்மா. அதனாலதான் நான் ஒரு பாடகியா வந்திருக்கேன்னே சொல்வாங்க. அதேமாதிரிதான் நானும் இப்ப பாடிட்டே இருக்கேன். இதைக் கேட்டு, பொறக்கப் போற பொண்ணோ, பையனோ இசையால நல்ல ஆரோக்கியமான மனநிலையில வளர்ந்தா அது நல்லதுதானே! என் குழந்தை இசையில சாதனைப் படைச்சா... எனக்கும் சந்தோஷம்தானே!'' என தாய்மைப் பொங்கச் சொல்லும் மஹதி, இந்த வருட டிசம்பர் சீஸனுக்கு பார்த்துப் பார்த்து பத்து கச்சேரிகளில் மட்டுமே பாடப் போகிறார்.

''ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாமேனுதான் நிறைய ஒப்புக்கல. மசக்கை பிரச்னை இருக்கறதால, சீரகத் தண்ணிக்கு பதிலா, கையில எப்பவும் லிம்கா பாட்டிலை வாங்கி வெச்சுட்டிருக்கேன். பிராக்டீஸ் பண்றப்ப, வயித்துல குழந்தை நகர்றதை உணரமுடியுது. ஆனா, கச்சேரினு மேடையில ஏறிட்டேன்னா, என்னையே மறந்து பாட ஆரம்பிச்சுடறேன்'' என்ற மஹதி,

''சரி..., 'சென்னையில் திருவையாறு'க்கு நேரமாயிடுச்சு'' என்றபடி புறப்பட்டார்!

ரேவதி