Published:Updated:

டிரெஸ்ஸிங் ரூம் !

சேலைச் சோலை !

'ஆடை அலங்கார நிபுணர்’ அனுராதா பிஸானி

##~##
டிரெஸ்ஸிங் ரூம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்பெல்லாம் பெண்கள் என்றாலே... சேலை மட்டும்தான் உடுத்துவார்கள். ஆனால், இப்போது சேலை என்பது ரிசப்ஷன், திருமணம், பார்ட்டி, கோயில்... போன்ற இடங்களுக்கு மட்டுமே உடுத்தக் கூடிய 'பிரீமியம் டிரெஸ்' என்ற நிலைக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது.

'சேலையில் சென்றால்... அது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் பேரழகைக் கூட்டிவிடும். ஆபீஸ், சூப்பர் மார்க்கெட், குழந்தைகள் படிக்கும் ஸ்கூல்... போன்ற இடங்களுக்கு அப்படிப் போவது அத்தனை பொருத்தமாக இருக்காது' என்று எண்ணிக் கொண்டு சுடிதார், சல்வார் என்று அடங்கிவிடும் பெண்களும் இருக்கிறார்கள்.

இதுபோன்ற காரணங்கள்தான்... இளம் பெண்கள் பலருக்கும் சேலை கட்டுவதையே மறக்கடித்து விடுகிறது. ஏதாவது விசேஷம் என்றால், ''அடச்சே... இந்தச் சேலையை எப்படிக் கட்டுறது?'' என்று அம்மாக்களிடமும் அத்தைகளிடமும் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

இப்படி அம்மாக்களிடமும், அத்தைகளிடமும் கேட்டு சேலை கட்டும்போது... ப்ரீத்தியின் தோற்றம்... அம்மாக்கள் மற்றும் அத்தைகள் போலவேதான் இருக்கும் (முதல் படம்).

டிரெஸ்ஸிங் ரூம் !

முந்தானையை கீழே விடாமல் சற்றே ப்ளீட்ஸ் எடுத்துத் தோளில் போட்டால்... (இரண்டாவது படம்), படார் என்று பத்து வயது குறைந்துவிடும்!

ப்ரீத்தி மாதிரி சிக்கென இருக்கும் பெண்கள்... நெக் லைனில் வேலைப்பாடுகள் செய்த பிளவுஸ் அணியும்போது... அந்த வேலைப் ப£டுகள் வெளியில் தெரியும்படி சேலை கட்டினால் பேரழகுக்கு இன்னும் பெருமை சேரும் (மூன்றாவது படம்).

வழக்கமாக வலமிருந்து இடமாக முந்தானையை விடுவீர்கள். அதற்கு பதிலாக... இடமிருந்து வலமாக குஜராத்தி ஸ்டைலில் முந்தானையை விட்டுப் பாருங்களேன் (நான்காவது படம்)... உங்களுக்கு ரசிகர் மன்றமே அமைந்துவிடும்!

- ஜொலிக்கும்...
படங்கள்: பொன்.காசிராஜன்