Published:Updated:

அனுபவங்கள் பேசுகின்றன !

அனுபவங்கள் பேசுகின்றன !

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

அனுபவங்கள் பேசுகின்றன !

150
ஓவியங்கள்: சேகர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வாசகிகள் பக்கம்

ஐயோ... எஃப்.எம். பரிசு!

அனுபவங்கள் பேசுகின்றன !
##~##

என் தோழிக்குப் பத்திரிகை, எஃப்.எம். ரேடியோ, தொலைக்காட்சி சேனல்... இவை நடத்தும் போட்டிகளில் எல்லாம் கலந்துகொள்வதில் அலாதிப் பிரியம். சமீபத்தில் ஒரு எஃப்.எம். நடத்திய எஸ்.எம்.எஸ். போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்ட தோழிக்கு, முதல் பரிசாக

அனுபவங்கள் பேசுகின்றன !

1,000 கிடைத்தது. ''எஃப்.எம் ஸ்டேஷனுக்கு வந்து பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்...'' என்று அவர்கள் அழைக்க, தன் இரு சக்கர வாகனத்தில் பரபரப்புடன் கிளம்பினாள் தோழி. வழியில் ஒரு சிறு விபத்து காரணமாக காலில் அடிபட்டபோதும், பரிசு பெறப் போகும் ஆனந்தம், வலியை எல்லாம் புறந்தள்ள, பரவசத்துடன் சென்றாள். ''பணம் இல்லை. அந்த மதிப்புடைய பரிசுப்பொருள்!'' என்று எஃப்.எம். நிறுவனத்தினர் சொல்ல, சிறிது ஏமாற்றம் இருந்தாலும் அந்த பரிசை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு வீடு வந்தாள். ஆர்வத்துடன் பிரித்தவளுக்கு, அதிர்ச்சி. உள்ளே இருந்தது, கருத்தடை சாதனம்! ஐம்பது வயதாகும் தோழி, தலைமேல் கை வைத்தாள்! கூடவே, 'நல்லவேளை... பிள்ளைங்க முன்னால பிரிக்கல’ என்று சமாதானமும் சொல்லிக் கொண்டாள்!

பரிசு கொடுக்கும் முன்... பெறப்போகும் நபர், அதன் பயன்பாடு, பிரிக்கும் சூழல் பற்றியெல்லாம் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க மாட்டார்களா சம்பந்தப்பட்டவர்கள்?!

- கீதா பிரேமானந்த், சென்னை-68

 டோர் டெலிவரி உஷார்!

அனுபவங்கள் பேசுகின்றன !

பிரபல நிறுவனத்தின் ஸ்டாலில், பெரிய டி.வி. ஸ்டாண்ட் ஆர்டர் செய்தோம். டோர் டெலிவரி செய்ய வந்தவர்கள், ''நாங்கள் டிரான்ஸ்போர்ட் ஆட்கள். கம்பெனி ஆட்கள் நாளை வந்து அசெம்பிள் செய்வார்கள்...'' என்று 'பேக்’ செய்யப்பட்டிருந்த பார்சல்களை வைத்து விட்டுப் போய்விட்டனர். அடுத்த நாள் வந்த கம்பெனி ஆட்கள், பார்சல்களைப் பிரித்து ஒவ்வொன்றாக எடுத்து ஃபிட் செய்தபோது... ''இம்போர்ட்டட் ஸ்பிரிங் காணவில்லை'’ என்று சொல்ல, உடனே கம்பெனிக்கு போன் செய்தோம். ''செக் செய்துதான் அனுப்பினோம். நீங்கள்தான் தவறவிட்டிருப்பீர்கள்'' என்றார்கள். ''பார்சலையே உங்கள் கம்பெனி ஆட்கள்தான் பிரித்தார்கள்... அவர்களிடமே கேளுங்கள்'' என்று போனைக் கொடுக்க, அவர்களும் சொன்னார்கள். இருந்தும் கம்பெனிக்காரர்கள் மசியவில்லை. ''ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வேறு ஸ்பிரிங்  கொடுக்கிறோம்'' என்றார்கள் கறாராக. வேறு வழியின்றி அப்படியே செய்தோம்.

டெலிவரி விஷயங்களில் பொருட்களை செக் செய்துதான் வாங்க வேண்டும் என்ற அடிப்படைப் பாடத்தை,

அனுபவங்கள் பேசுகின்றன !

1,000 ஃபீஸ் (!) கட்டிப் படிக்க வேண்டியதாயிற்று!

- ஆர்.சுப்பலட்சுமி சந்திரமௌலி, மடிப்பாக்கம்

ஆசிரியப் பெருந்தகை !

அனுபவங்கள் பேசுகின்றன !

அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராக உள்ள என் நண்பரை பள்ளி வேலை நேரத்தில் சந்திக்கச் சென்றிருந்தேன். மரத்தடி நிழலில் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு திருப்புதல் தேர்வு விடைத்தாள்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார். மாணவர்கள் ஒரு மரத்தடியிலும், சற்றுத் தள்ளி மாணவிகள் ஒரு மரத்தடியிலுமாக உட்கார வைக்கப்பட்டிருந்தனர். ''விடைத்தாள்தானே கொடுக்கிறாய்... எதற்காக இப்படி பிரித்து உட்கார வைத்திருக்

கிறாய்?'' என்றேன் நான். அதற்கு, ''குறைவான மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளை ஒரே இடத்தில் வைத்து திட்டுவது, பருவ வயதில் இருக்கும் அவர்களின் சுயமரியாதையைப் பாதிக்கும். அதனால்தான் இப்படி!'' என்றார். டீன் ஏஜ் மாணவ, மாணவியரை அக்கறையுடன் கண்டிக்கும் அவரின் பக்குவத்தை, பாராட்டி வந்தேன்!

மற்ற ஆசிரியர்களுக்கும் இந்தச் செயல் முன்மாதிரி ஆகட்டும்!

- ஆர்.திவ்யா, எண்ணக்குடி

ஒரு பேனா... ஒரு எச்சரிக்கை!

அனுபவங்கள் பேசுகின்றன !

படிப்பை முடித்துவிட்டு வேலைக்கான தேர்வுகள் எழுதிக் கொண்டிருக்கிறாள் என் தோழி. சமீபத்தில் அப்படி ஒரு தேர்வுக்குச் சென்றவள், பரபரப்பாக பதில் எழுதிக் கொண்டிருந்த வேளையில், அவளுடைய பேனா நழுவி தரையில் விழுந்திருக்கிறது. அது 'பால் பாயின்ட்’ பேனா என்பதால்,

அதன் முனை பாதிப்படைந்து எழுதாமல் போய்விட்டது. தோழியைக் கவனித்த தேர்வு மேற்பார்வையாளர், இன்னொரு பெண்ணிடம் இருந்து பேனா வாங்கித்தர, ஒருவழியாக தேர்வு எழுதி முடித்தாள் தோழி. 'புது பேனா, இங்க் ஃபுல்லா இருக்கு!’ என்று நம்பிக்கையுடன் தேர்வுக்கு ஒரே ஒரு பேனாவை மட்டும் எடுத்துச் செல்பவர்களே... எச்சரிக்கையாக இருங்கள்!

- ஆர்.வசந்தி, போளூர்