Published:Updated:

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1

கணக்கில் புலி... மொழியில் கிளி !

 குழந்தை மனநல மருத்துவர் ஜெயந்தினி
சிகரத்தை நோக்கி சிறகடிக்க வைக்கும் தொடர்

''என்டமாலஜி (Entomology)என்பது எதைப் பற்றிய படிப்பு?'' என்று டீச்சர் கேள்வி கேட்க, ''பூச்சிகளைப் பற்றிய படிப்பு!'' என்றான் விகாஸ்.

''பேத்தாலஜி (Pathology) என்பது எதைப் பற்றிய படிப்பு?'' என்ற கேள்விக்கு ''நோய்களைப் பற்றிய படிப்பு!'’ என்று 'டக்’கெனப் பதில் சொன்னாள் திலகா.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''அக்ரானமி (Agronomy)என்றால்..?''

உங்கள் குழந்தையும் இனி நம்பர் 1
##~##

''உழவுத் தொழில் பற்றிய படிப்பு!'' என்றான் ரவி.

கேள்வி கேட்டுக் கொண்டிருந்த டீச்சர், ''எல்லாரும் 'டக்டக்’னு பதில் சொல்றாங்க. ஜி.கே. காம்படிஷனுக்கு நீயும்தானே ஒரு வாரமா தயார் பண்ணினே? ஏன் ஒரு கேள்விக்குக்கூட பதிலே சொல்லல..?'' என்று கோபமாகக் கேட்க, ''மிஸ்... என் மெமரியில எதுவுமே இருக்க மாட்டேங்குது...'' என்று பரிதாபமாகப் பதில் சொன்னான் நந்தன்.

நம்மில் சிலர் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது மனப்பாடம் செய்த 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி’ என்ற மாணிக்கவாசகரின் பாடலை, இன்றும்கூட அப்படியே சொல்வோம். இது 'நீண்டகால நினைவாற்றல் திறன்’ (Long term memory). . மாலையில் படித்து, காலையில், 'ஐயோ மறந்து போச்சே’ என்று புலம்பினால்... அது 'உடனடியாக மறையும் நினைவாற்றல் திறன்’ (Short term memory). பரீட்சைக்கு மட்டும் படித்து, அந்த வருட பரீட்சையோடு மறந்து போனால், அது 'குறைந்த கால நினைவாற்றல் திறன்’ (Mid term memory).

அடிப்படையில், ஒரு மாணவனுக்கு தான் படிப்பதை நினைவு செல்களில் சேகரித்து வைத்திருந்து, எப்போது தேவைப்படுகிறதோ... அப்போது அதை முழுமையாக மீட்டெடுக்கும் கலையும் திறமையும் கைவரப் பெற்றிருந்தால், அவன் எப்போதும் நம்பர் ஒன்தான்! படிக்கிற பாடத்தை... என்ன பாடம் படிக்கிறோம், அது எதைப் பற்றியது, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எல்லாம் முழுமையாகப் புரிந்து படித்தால்தான் அது மனதில் நிற்கும். பெரும்பாலான குழந்தைகள் அப்படிப் படிப்பது இல்லை. உதாரணமாக, இயற்பியலில் 'பாஸ்கல் விதி’ பற்றிப் படிக்கிறார்கள் என்றால்... புத்தகத்தில் 'பாஸ்கல் விதி’ என்று எழுதப்பட்டிருக்கும் இரண்டு, மூன்று வரிகளைத் திரும்பத் திரும்ப சொல்லி மனப்பாடம் செய்கிறார்களே தவிர, அதனை முழுமையாகப் புரிந்து படிப்பதில்லை.

நினைவாற்றலை அதிகப்படுத்தக் கூடிய வழிமுறை... புரிந்து படிப்பது, படித்ததை நினைவு செல்களில் சேகரித்து வைத்து, தேவைப்படும் தருணம் மீட்டெடுப்பது. இதனை வளர்ப்பதற்கு மாணவர்கள் என்ன செய்யலாம்? அந்த வித்தை மிகமிக எளிமையானதுதான். வகுப்பில் டீச்சர் பாடம் எடுக்கும்போதே கருத்தூன்றி கவனித்தால், அது முழுமையாக புரிந்து நினைவு செல்களில் தங்கிவிடும்... காலகாலத்துக்கும்! வகுப்பில் நடத்திய பாடத்தை 24 மணிநேரத்துக்குள் மீண்டும் நினைவுபடுத்தி, நினைவு செல்களில் பதிய வைக்க வேண்டும். இதனை பின்பற்றுகிற மாணவர்கள்... பரீட்சையில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் ஜெயிக்கிறார்கள்!

''என் மகள் கணக்குல ஃபார்முலா, தியரம்னு எல்லாத்தையும் அப்படியே நினைவுல வெச்சுக்கிறா. ஆனா... இங்கிலீஷ் கிராமர் சுட்டுப் போட்டாலும் வரமாட்டேங்குது. ஆக்டிவ் வாய்ஸ், பாஸிவ் வாய்ஸ் வித்தியாசம் தெரியமாட்டேங்குது, டென்ஸ் பத்தி திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுத்து எனக்கு அலுத்துப் போச்சு’'

- ஒரு பாடத்தில் 'குட்’, இன்னொரு பாடத்தில் 'பேட்’ என்று தங்கள் பிள்ளைகள் இருப்பது பற்றி, இப்படி புலம்பும் பெற்றோர்கள் இங்கே நிறைய. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொருவிதமான இன்டெலிஜென்ஸ் இருக்கும். 'லாஜிக்கல் இன்டெலிஜென்ஸ்’ அதிகமிருக்கும் குழந்தை... கணக்கில் புலி. 'லிங்குஸ்டிக் இன்டெலிஜென்ஸ்’ இருக்கும் குழந்தை... மொழிகளில் கிளி! இந்த 'மல்டிபிள் இன்டெலிஜென்ஸ்’ பற்றி ஏற்கெனவே உங்களிடம் பேசியிருக்கிறேன்... நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் (எங்களுக்கேவா என்கிறீர்களா?!).

குழந்தைகளுக்கு எந்த இன்டெலிஜென்ஸ் அதிகமிருக்கிறதோ... அதில் அவர்களை 'கிங்’ என்று மாற்றுங்கள். ஸ்போர்ட்ஸ் இன்டெலிஜென்ஸ் இருக்கிற குழந்தைக்கு, மியூசிக்கல் இன்டெலிஜென்ஸும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை புரிந்து கொண்டால்... எந்த சப்ஜெக்டில் உங்கள் குழந்தையின் விருப்பமும் விருப்பமின்மையும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். உங்களின் அந்தப் புரிதலில் தான் குழந்தை 'நம்பர் ஒன்’ ஆவது ஒளிந்து இருக்கிறது.

குழந்தையின் திறமை ஒளிர்வதும்... ஒழிந்து போவதும் அதன் நினைவு ஆற்றல், இன்டெலிஜென்ஸ், ஐ.க்யூ ஆகியவற்றைப் பொறுத்தது.

- வளர்ப்போம்...