Published:Updated:

நடந்தாய்....வாழி.... காவேரி !

நடந்தாய்....வாழி.... காவேரி !

சந்திரகாந்தம்

நடந்தாய்....வாழி.... காவேரி !
##~##

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''நாப்பது வருஷத்துக்கு முன்ன எங்களோட முதல் ஆடிப்பெருக்கு. அன்னிக்கு இந்த ஆத்துக்கு வந்தப்ப இவ்வளவு கூட்டமெல்லாம் இல்ல. கிராமங்கள்ல இருக்கற ஆறு, வாய்க்கால்னு அவங்கவங்க கொண்டாடிட்டுப் போறதுதான் வழக்கமா இருந்துச்சு. ஆனா... காவிரித் தாயோட சிறப்பு, ஆடிப் பெருக்கு எதுக்காக கொண்டாடறோம்கிற விஷயமெல்லாம்... பத்திரிகை, டி.வி. மூலமா இப்ப நிறைய பேருக்கு தெரியறதால... நகர்ப்புறங்கள்லயே குடும்பம் குடும்பமா பெருக்கெடுக்கத் தொடங்கிட்டாங்க ஆத்தங்கரைகள்ல. இந்தக் கூட்டத்தைப் பார்க்க பார்க்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு!''

- கும்பகோணம் வழியே பெருக்கெடுத்தோடும் காவிரியில் கணவன் சடகோபனோடு கால் நனைத்து உற்சாகமாகிறார் சூரியகுமாரி.

திருமணத்தன்று அணிந்திருந்த மாலையை, பத்திரப்படுத்தி வைத்திருந்து ஆற்று நீரில் விடும் புதுத் தம்பதிகள்; தாலிச்சரட்டை புத்தம்புதிதாக மாற்றிக் கொள்ளும் சுமங்கலிகள்; அரச மரத்தில் மஞ்சள் நூல் சுற்றும் இளம்பெண்கள்: சடசடவென ஊரே கிடுகிடுக்கும் அளவுக்கு சத்தத்தை எழுப்பும் சப்பரத் தட்டி (சிறு தேர்) இழுத்துப் போகும் சிறுவர்கள்... என காவிரி பாயும் பூமியெங்கும் ஆடி பதினெட்டாம் தேதியன்று உற்சாகம் கரை புரள்வது... காலகாலமாக நடக்கும் ஒன்று. கிராமப்புறங்களில் மட்டுமே அதிமுக்கியத்துவத்தோடு கொண்டாடப்பட்ட இப்பண்டிகை... நகர்ப்புற மக்களையும்கூட வெகுவாக ஈர்க்க ஆரம்பித்துள்ளது.

நடந்தாய்....வாழி.... காவேரி !

''காவிரிப் பெண்ணுக்கு இது மசக்கை காலம் (கரு சுமக்கும் பருவம்). அதனால புதுசா திருமணம் செய்துக்கிட்டவங்க தங்களோட மண வாழ்க்கை நல்லா அமையணும், எல்லா வளமும் கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு அவளுக்கு காவிரிக் கரையில் பழம், இனிப்பு, வைத்து தரிசிப்பாங்க. முகூர்த்த மாலையை அங்க இங்கனு கண்ட இடங்கள்ல போடாம, பாதுகாப்பா வெச்சிருந்து ஆடிப்பெருக்கு தினத்துல காவிரி தண்ணியில வந்து விடுறதுக்குக் காரணம், ஆறு எப்படி கரைபுரண்டு பெருக்கெடுத்து ஓடுதோ... அதேபோல தங்களோட வாழ்க்கையில சகல வளமும் சந்தோஷமும் கொழிக்கணும்கறதுக்காகத்தான்'' என்று தாத்பர்யம் சொல்லும் 63 வயது பிரேமா,

நடந்தாய்....வாழி.... காவேரி !

''இந்த நீரை தெய்வமா வேண்டிக்கிட்டு சுமங்கலிப் பெண்கள் எல்லோரும் இன்னிக்கு தாலிக்கயிறை மாற்றி புது கயிறு அணிஞ்சுக் கிறாங்க. கல்யாணம் ஆகாத பருவப் பொண்ணுங்களும் ஆத்தங்கரை அரச மரத்துல மஞ்சள்ல நனைச்ச நூலை கட்டி, சீக்கிரமா கல்யாணம் முடியணும்னு வேண்டிப்பாங்க. குழந்தைகளும் கொண்டாட்டமா சப்பரத்தட்டி இழுத்துக்கிட்டு வருவாங்க. இப்படி குழந்தைகள்ல ஆரம்பிச்சு பெரியவங்க வரைக்கும் மனப்பூரிப்போடு கொண்டாடற இந்தப் பண்டிகை, இந்த வயசுலயும் எனக்கு அத்தனை உற்சாகம் தருது!'' என்றபடியே கணவர், மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரன்கள் புடைசூழ கொண்டாட்டத்தில் கலந்தார்.

''நாங்க சௌராஷ்ட்ராகாரங்க. எங்க ஊர்ப் பக்கமெல்லாம் இந்த மாதிரியான பண்டிகை இல்லை'' என்று ஏக்கத்தோடு தொடங்கினாலும், கொண்டாட்ட மகிழ்ச்சியிலும் காவேரித் தண்ணீரும் முழுவதுமாகவே நனைந்திருந்த ராஜலட்சுமி,

''தண்ணியைத் தாயா, தெய்வமா வழிபடற இந்த சம்பிரதாய வழிபாடு... எங்களுக்கு ரொம்பவும் புடிச்சிருக்கு. கண்டிப்பா இனி வருஷா வருஷம் இங்க வந்துடுவோம்!'' என்றவரின் விரல்களில் மாங்கல்ய மஞ்சள் மணத்தது!

தன் மடிக்கு வந்த குழந்தைகளை அலைக் கரங்களால் தாலாட்டி ஆசீர்வதித்துக் கொண்டுஇருந்தாள் காவேரி!

படங்கள்: கே.குணசீலன்