Published:Updated:

கார்த்திகாவின் 'கன்னி கேட்வாக்' !

கார்த்திகாவின் 'கன்னி கேட்வாக்' !

எஸ்.ஷக்தி

 'செம கன்சர்வேடிவ்வா இருக்கறாங்கப்பா!’ என்று கேரள ஃபேஷன் டிசைனிங் ஃபீல்டு பற்றி ஒரு கமென்ட் இருந்தது. ஆனால், சமீபத்தில் அங்கே நடந்த 'கொச்சி இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் (சுருக்கமாக - K.I.F.W)’ ஃபேஷன் திருவிழா... அந்தப் பார்வையை அடித்துக் காலி பண்ணிவிட்டது. ராம்ப் வாக் ராட்சஸிகள், கலக்கல் காஸ்ட்யூம்கள், அசரவைக்கும் செலிப்ரிட்டிகள் என்று ஓவர் உற்சாகத்தில் மிதந்தார்கள் சேச்சிகள்.

கார்த்திகாவின் 'கன்னி கேட்வாக்' !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கொச்சின், 'கேஸினோ’ ஓட்டலில் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்த இந்த டிசைனிங் மேளாவில் நாடெங்கிலும் இருந்து 11 ஃபேஷன் டிசைனர்கள் கலந்து கொண்டார்கள். சேலையில் ஆரம்பித்து 'டியூப் டாப்’ வரை அத்தனை உடைகளிலும் கலக்கலாக தங்கள் கைவண்ணத்தைக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்கள்.

கார்த்திகாவின் 'கன்னி கேட்வாக்' !
##~##

ஆண்களுக்காக அட்டகாசமான டிசைன்களால் ஷோவை கிறங்கடித்தார் ஜேம்ஸ் ஃபெரைரா. கொச்சினைச் சேர்ந்த ஹேரி ஆனந்த்தின் டிசைன்களின் உற்சாகத் துள்ளல் ப்ளஸ் கலர்ஃபுல் காம்பினேஷன். அர்ச்சனா கோக்ஹரின் 'மணப்பெண் கலெக்ஷன்’களுக்கு பெண்கள் டபுள் விசில் கொடுத்து வரவேற்றார்கள். க்ரீன் ஆப்பிள் மற்றும் ஹாட் பிங்க் கலர்களை வைத்து செமத்தியான 'ஈவ்னிங் வேர்’ டிசைன்களை உருவாக்கி அசத்தியிருந்தார் சென்னையை சேர்ந்த டிசைனர் ஜூல்ஸ் இடி அமீன். பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் டிசைனர் ஜாட்டின் கோக்ஹரின் 'ப்ளாக் மேஜிக்’ தீம்க்கு ஆரவாரம் அள்ளியது.

கலர்ஃபுல் திருவிழாவின் க்ளைமாக்ஸ் தினத்தன்று... கழுத்தில் செம்பருத்தி மாலை, கையில் இளநீரை வைத்துக் கொண்டு சல்சா நடனமாடியபடி, அருணாவின் 'பீச் வேர்’ உடைகளுடன் ராம்பில் மாடல்கள் நகர்ந்தபோது ஆரவாரத்தில் ஆடி அடங்கியது அரங்கம்.

கார்த்திகாவின் 'கன்னி கேட்வாக்' !

நிறைவு நிகழ்ச்சியாக, பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமா செலிப்ரிட்டிகள் கலந்துகொண்டு கொடுத்த 'கேட் வாக்’, அசத்தல். டார்ன் ஜீன், லெதர் ஜாக்கெட்டுடன் ரஃப் அண்ட் டஃப்பாக ராம்ப் வாக் செய்து ரகளை செய்து அசத்தினார் கங்கனா ரனவத். இதற்கு நேர்மாறாக படுபாரம்பரியமாக இருந்தது கார்த்திகா, ப்ரியா ஆனந்த் மற்றும் மதுஷாலினியின் காஸ்ட்யூம்கள். கார்த்திகா, மதுஷாலினிக்கு இதுதான் 'கன்னி’ கேட்வாக். ஆனால், முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசியிருந்தார்கள் இந்த பியூட்டிகள்.

 படங்கள்: வி.ராஜேஷ்