Published:Updated:

தாரகைகளின் தன் வரலாறு !

தாரகைகளின் தன் வரலாறு !

ரிமோட் ரீட்டா

 கேபிள் கலாட்டா

தாரகைகளின் தன் வரலாறு !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை, சாந்தோம் ஹையர் செகண்டரி ஸ்கூல், மான்ட்ஃபோர்ட்  ஆடிட்டோரியமே ஜூலை 30-ம் தேதி 'சீரியல்’ லைட்டால ஜொலிச்சது. என்ன விசேஷம்? இந்த வருஷத்துக்கான 'மிஸ் சின்னத்திரை அழகி’ நிகழ்ச்சி!

''தொடர்ந்து அஞ்சு வருஷமா இந்த நிகழ்ச்சியை நடத்திட்டு இருந்தாலும், இந்த வருஷம் செம்ம ஜோர் ரீட்டா. மூன்றரை மணி நேர ஈவன்ட் இது. மூணே நிமிஷத்துல முடிஞ்ச மாதிரி அப்படி ஒரு சுவாரஸ்யம்!''னு சந்தோஷப்பட்டார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தின விஸ்வா.

'மிஸ் சின்னத்திரை அழகி’யா தேர்ந்தெடுக்கப்பட்ட லீலாவதி, இரண்டாவது, மூன்றாவது இடம் வந்த ஷிவானி, ஷபர்னா மூணு பொண்ணுங்களுக்கும் முகமெல்லாம் மத்தாப்பூ! சந்தோஷப் பரவசம், கொஞ்சமா தணிஞ்சிருந்த மறுநாள், அந்த கேர்ள்ஸுக்கு போன் பண்ணினேன்.

''என்னோட டான்ஸ் கிளாஸுக்கு வந்துடு ரீட்டா!''னு அட்ரஸ் சொன்னாங்க லீலாவதி.

தாரகைகளின் தன் வரலாறு !
##~##

'லீத்தல்’ டான்ஸ் கிளாஸ்ல, 'தக்க திமி தா’னு பிஸியா இருந்தவங்க, ''ஹாய் ரீட்டா!''னு வந்தாங்க.

''நான் கிளாஸிக்கல் டான்ஸர். ஆறாவது படிக்கிறப்போ ஆடத் தொடங்கினது. கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேல டான்ஸோடயேதான் இருக்கேன். 'மானாட மயிலாட’, 'ஜோடி நம்பர் ஒன் - சீஸன் 5’-னு ஷூட்டிங் தவிர்த்த நாட்கள்ல இந்த ஸ்கூல்தான் என் உலகம். என் தங்கைகள் சுகன்யா, பவானி எனக்கு உதவியா இருக்காங்க''னு சொன்ன வங்கள, டான்ஸ்ல இருந்து கொஞ்சம் கியர் மாத்தினேன்.

''இந்த 'மிஸ் சின்னத்திரை’ அனுபவம், மறக்க முடியாதது. ரேம்ப் வாக், டான்ஸ், மிஸ் ஹேர், மிஸ் ஐ, கேள்வி - பதில்னு பல சுற்றுகள். இதுக்கான நடுவர்கள் எல்லாம் சின்னத்திரை, பெரியதிரையில இருந்து வரல... ஆடை வடிவமைப்பாளர் சிட்னி ஸ்லேடன், பியூட்டிஷியன் மைதிலி, 'மிஸ் ஸ்ரீலங்கா’ டேமி... இப்படி பெரிய பெரிய ஆட்களா வந்து உட்கார்ந்து எங்கள பதற வெச்சுட்டாங்க. கலந்துக்கிட்ட பத்து போட்டியாளர்களுமே எல்லாத்துலயும் நல்லா பெர்ஃபார்ம் பண்ணினோம். 'மிஸ் டேலன்ட்’ சுற்றுல, நான் பெஸ்ட்டா பெர்ஃபார்ம் பண்ணினதால, எனக்கு 'மிஸ் சின்னத்திரை’ அவார்டு கிடைச்சிடுச்சு. சந்தோஷத்தை சொல்லவா வேணும்?!''

கன்னத்துல கை வெச்சு 'ஆ!’னு ஆனந்தமா அழுதிருப்பீங்களே..?!

'திருமதி செல்வம்’, 'இதயம்’, 'அனுபல்லவி’னு ரவுண்ட் வர்ற ஷிவானிக்கு, 'மிஸ் சின்னத்திரை’யில செகண்ட் ப்ளேஸ்!

''ரெண்டு நாள் ஷூட்டிங் இல்லை. அதான் என்னோட சொந்த ஊர் திருப்பதிக்கு கிளம்பிட்டிருக்கேன் ரீட்டா!''னு லக்கேஜ் பேக் பண்ணினவங்ககிட்ட, ''பதினஞ்சு நிமிஷம் ப்ளீஸ்!''னு அப்பாயின்ட்மென்ட் வாங்கினேன்.

தாரகைகளின் தன் வரலாறு !

''ஒரு நாள் ஷூட்டிங் இல்லைனாலும் திருப்பதிக்கு ஓடிடுவேன். அப்பா, அம்மா, அக்கா, தம்பி, தங்கைனு கொஞ்சம் பெரிய குடும்பம். செம ஜாலியா இருக்கும். ஷ்ராவனிதான் வீட்டுல எனக்குப் பெயர்''னு சொன்னவங்க,

''தலக்கோணம் வனப்பகுதியில அப்பா ஃபாரஸ்ட் ஆபீஸரா இருந்தார். அங்க தெலுங்கு ஷூட்டிங்க்கு வந்த டைரக்டர் சோலைராஜன் சார் என்னைப் பார்த்துட்டு, 'நடிக்கிறியா?’னு கேட்டார். அப்பாகிட்ட அனுமதி வாங்கிட்டு களத்துல குதிச்சேன். 'ராடான்’ நிறுவனம் தெலுங்குல தயாரிச்ச 'சூர்யவம்சம்’ தொடர்லதான் அறிமுகம். 'செல்லமடி நீ எனக்கு’ சீரியல் வாய்ப்பு வர, அப்படியே தமிழ்நாட்டு சேனல் ஏரியாவுலயும் நுழைஞ்சுட்டேன்''னு தன் வரலாறு சொன்ன ஷிவானி, 'வேங்கை’, 'முன்பனிக்காலம்’னு சைடுல சினிமா என்ட்ரியும் கொடுத்துட்டு இருக்காங்க!

ஓ.கே. பஸ்ஸுக்கு லேட் ஆயிடுச்சு... பை பை ஷிவானி!

கேப்டன் டிவி-யில 'என்றும் அன்புடன்’ ஷோவை முடிச்சுட்டு வந்த ஷபர்னா, லொடலொட ஏஞ்சல்!

தாரகைகளின் தன் வரலாறு !

''சன் மியூசிக்ல தொகுப்பாளினியா என் கலைப் பயணத்தைத் தொடங்கி, 'ஜி’ சேனல்ல 'காமெடி ஜோடி’, கேப்டன் டி.வி-யில 'என்றும் அன்புடன்’, இப்போ 'மிஸ் சின்னத்திரை’யில மூன்றாவது இடம்னு வந்து நிக்கறேன். இது எல்லாருக்கும் தெரிஞ்ச ஷபர்னா. இன்னொரு ஷபர்னா இருக்கா... அவ சூப்பரா பாடுவா. ஸ்கூல், காலேஜ்னு பாட்டுப் போட்டியில பரிசுகள் வாங்கி இருக்கா. 'மிஸ் சின்னத்திரை’யில அவளுக்கு மார்க் வாங்கிக் கொடுத்தது, அவளோட குரல்தான்!''னு சொந்த செலவுல விளம்பரம் பண்ணிக்கிட்ட ஷபர்னா, ''நிகழ்ச்சித் தொகுப்பு, நடிப்புனு கலக்கிட்டு இருந்தாலும், எனக்குள்ள இன்னொரு ஆசையும் இருக்கு. உங்கிட்டதான் அதை முதல் முதலா சொல்றேன் ரீட்டா. சுச்சி மாதிரி நான் ஒரு சூப்பர் ஹிட் ரேடியோ ஜாக்கியா ஆகணும். நீ அடுத்த முறை ஆர்ஜே ஷபர்னாவாதான் என்னைப் பேட்டி எடுக்க வரணும்!''னு நம்பிக்கையோட பேசினாங்க ஷபர்னா!

எவ்வளவோ பண்ணிட்டோம்... இதைப் பண்ண மாட்டோமா?!

வாசகிகள் விமர்சனம்

இதிலும் அரசியலா?

''தமிழகத்தில் பெரும்பாலான தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகளின் கைகளில் இருப்பதால், பாதிக்கப்படுவது மக்கள்தான். எந்த ஒரு விஷயத்தையும் நடுநிலையோடு யாரும் புரிந்து கொள்ளவோ... தெரிந்து கொள்ளவோ முடியாமல் போய்விடுகிறது. செய்திகளில்தான் இப்படியென்றால்... சினிமாவிலுமா? சமீபத்தில் கலைஞர் டிவி-யில் கமல் நடித்த 'தசவதாரம்' படம் ஒளிபரப்பானது. க்ளைமாக்ஸில் சுனாமியை அடுத்து, அந்த சேதாரங்களை ஹெலிகாப்டரில் இருந்து அன்றைய முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுவது போன்ற காட்சி படத்தில் உண்டு. ஆனால், அதை கட் செய்துவிட்டார்கள். இந்தப் போக்கு எப்போதுதான் மாறுமோ?'' என்று ஏக்கத்தோடு கேட்கிறார் சிதம்பரத்தில் இருந்து என்.மகாலட்சுமி.

நடுவரே... இது நியாயமா?

''விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகர்களுக்குள்ளே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், நடுவர்களின் நடத்தைதான் சந்தேகத்தைக் கிளப்புவதாக இருக்கிறது. நடுவர்களில் ஒருவரான பாடகி சுஜாதா, 'பூஜாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்; நான் பூஜாவோட ஃபேன்; பூஜா எப்படி பாடினாலும் பிடிக்கும்; தமிழைப் பிழையாக உச்சரித்தாலும் பிடிக்கும்' என்றெல்லாம் ஒரு போட்டியாளர் பற்றி உருகி உருகிச் சொல்கிறார். இப்படி ஓபனாக என்கரேஜ் செய்வது... மற்ற போட்டியாளர்களின் மனநிலையை பாதிக்காதா... என்னதான் நேர்மையாக தீர்ப்புக் கொடுத்தாலும்... 'ஒருதலை பட்சமானது' என்கிற சந்தேகத்தை எழுப்பாதா?'' என்றெல்லாம் வருத்தப்படுகிறார் பாண்டிச்சேரியில் இருந்து அனுராதா ரமேஷ்.

இது தேவையா?

''சன் டிவி-யில் ஒளிபரப்பாகும் 'செல்லமே’ தொடரில்... பள்ளி மாணவியான ரத்னா அப்பா மீதான கோபத்தில், தற்கொலைக்கு முயற்சிக்கிறாள். கை மணிக்கட்டு அருகே பிளேடால் கீறிக்கொண்டு, ரத்தம் ஆறாக ஓட... மயக்கமடைந்து இறந்து போகிறாள். இக்காட்சியை மெதுவாக, விலாவாரியாக காட்டுகிறார்கள். பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் தான் சீரியல் பார்க்கின்றனர். இந்தக் கால குழந்தைகள், சின்னதாக ஒரு தோல்வியைக்கூட தாங்க சக்தி இல்லாமல் வளர்க்கப்படுவதால், தற்கொலை செய்து கொள்வதாக அடிக்கடி செய்தித் தாளில் படிக்கிறோம். இந்நிலையில் இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் இப்படி காட்டத்தான் வேண்டுமா?'' என்று அக்கறையோடு கேள்வி எழுப்புகிறார் மதுரையில் இருந்து வ.சந்திரா மாணிக்கம்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்,
ப.சரவணகுமார்