Published:Updated:

கெட் வெல் சோனியாஜி !

கெட் வெல் சோனியாஜி !

பி.ஆரோக்கியவேல்

கெட் வெல் சோனியாஜி !

'சோனியா காந்திக்கு கேன்சர். சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார்’ என்ற செய்தி அதிகார பூர்வமற்ற வகையில் தீயாகப் பரவ, 'என்ன ஆயிற்று?’ என்று நாடு முழுவதும் எழுந்தது பதற்ற கேள்வி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''தனக்கு என்ன பிரச்னை என்று வெளிப்படையாக அறிவிக்க அவர் விரும்பவில்லை. மருத்துவ விஷயங்களில் யாராக இருந்தாலும் பிரைவஸி தேவை. அவருடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்'' என்றனர் உதவியாளர்கள்.

##~##

மகன் ராகுல், மகள் பிரியங்கா என்று எல்லோருமே சோனியாவுடன் அமெரிக்கா சென்றுவிட்டதால், காங்கிரஸ் கட்சியின் மூத்த அமைச்சர்களுக்கேகூட, 'சோனியா காந்திக்கு என்ன பிரச்னை?’ என்று தெரியாமல் திணறித்தான் போனார்கள். இரண்டு நாள் கழித்து, 'சோனியாவுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்று நலமோடு இருக்கிறார்’ என்று அடுத்து வந்த செய்தி, 'அறுவை சிகிச்சை அளவுக்கு என்னவாயிற்று?' என்று மீண்டும் பதற வைத்துவிட்டது.

''சோனியாவுக்கு சில நாட்களாகவே கை, கால் மற்றும் காதோரப் பகுதிகளில் தேமல் மாதிரி வந்தது. 'ஸ்க்யுமஸ்’ என்ற பெயர் கொண்ட இது, ஒரு வகை தோல் கேன்சர். வெயிலில் அதிகமாக அலையும் வெள்ளைக்காரர்களுக்கு வழக்கமாக வருவதுண்டு. பயப்படும் வகையான கேன்சர் இல்லை. ஆரம்பத்திலேயே அறுவை சிகிச்சை செய்ததால் சோனியாவுக்கு ஆபத்து இல்லை'' என்றன புலனாய்வுத் தொலைக்காட்சிகள்.

இந்த விஷயத்தில் சோனியா மிகமிக பக்குவப்பட்ட... பொறுப்புள்ள ஒரு பெண்மணியாகவே பரிணமிக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். பின்னே... அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என்று யாராவது நோய் காரணமாக பாதிக்கப்பட்டால்... அகில உலக பிரச்னையாக பூதாகாரப்படுத்தப்படும். ஆனால்... தன்பொருட்டு துளிகூட சலசலப்பு உண்டாகாமல் பார்த்துக் கொண்டுவிட்டாரே!  

கெட் வெல் சூன் சோனியாஜி!