பா.பற்குணன்

குழந்தை வளர்ப்பு என்பது, அன்பியலும் அறிவியலும் கலந்த கலை. அதைக் கணு கணுவாகப் பெற்றோர்களுக்குக் கற்றுத்தர, 'வேரில் இருந்து கனி வரை!’ என்கிற தலைப்பில் குழந்தை வளர்ப்புத் திருவிழா ஒன்றை சமீபத்தில் நடத்தியது, 'சென்னை கவுன்சலர்ஸ் ஃபவுண்டேஷன்’ எனும் அமைப்பு.

'சிறப்பு விருந்தினர்' என்கிற பெருமையோடு வந்து பங்கேற்றாலும்... ஒரு அப்பாவாகவே மேடையேறினார் நடிகர் சூர்யா. 'குழந்தைகளிடம் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்' என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக ஃபவுண்டேஷன் சார்பில் 'அறிந்தும் அறியாமலும்’ என்கிற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. பார்த்தி என்பவர் இயக்கியிருக்கும் அப்படத்தை வெளியிட்டுப் பேசிய சூர்யா, ''நானும் ஒரு நல்ல அப்பாவா இருக்கணும்னு முயற்சி செஞ்சுட்டுதான் இருக்கேன். ஆனா... அது உண்மையிலேயே கஷ்டமானதாத்தான் இருக்கு. நாள் முழுக்க குழந்தைகளோட செலவிடுறாங்க ஜோதிகா. ஆனா... ஒரு மணி நேரம் முழுசா குழந்தைகளைக் கவனிச்சுக்கறதே எனக்குப் பெரிய விஷயமா இருக்கு...'' என்று உணர்வுபூர்வமாக பேசியவர், கொஞ்சம் இடைவெளிவிட்டு, ''எல்லா அம்மாக்களுக்கும் பெரிய சல்யூட்!'' என்று உளபூர்வமாக மரியாதை செய்தார்!

''சில குழந்தைகள் பள்ளியில் சகஜமாக இருப்பார்கள். வீட்டில் விருந்தினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று யாருடனும் சரியாகப் பேசக்கூட மாட்டார்கள். இதற்காகக் கவலைப்படும் பெற்றோர்கள் அநேகம் பேர். ஆனால், இது ஒரு பிரச்னையே இல்லை. குழந்தைகளிடம் அவர்களுக்குப் பிடித்ததைப் பேசினால், அவர்களும் திருப்பிப் பேசுவார்கள். மாறாக, 'எந்த ஸ்கூல்ல படிக்குற?’, 'டீச்சர் பேர் என்ன?’, 'மேத்ஸ் எப்படிப் போடுவ?’ என்று அவர்களுக்குப் பிடிக்காத கேள்விகளைக் கேட்டால், அவர்களின் பதில் மௌனமாகத்தான் இருக்கும். எனவே, பிள்ளைகளிடம் அவர்களுக்குப் பிடித்ததைப் பேசுங்கள்!'' என்று புரியவைத்தார் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் செயலாளர்களில் ஒருவரான பிருந்தா ஜெயராமன்.

மனநல மருத்துவர் டாக்டர் மோகன்ராஜ், வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மனோநிலை சம்பந்தப்பட்ட சில அறிவியல் பிரச்னைகளையும் அதற்கான எளிமையான தீர்வுகளையும் முன் வைத்தது கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது. ''சமயங்களில் பத்து வயதுக் குழந்தைகூட, பள்ளிக்கு எடுத்துப் போகும் பென்சில், நோட், புத்தகம், லஞ்ச் பாக்ஸ் என ஏதாவது ஒன்றை மறந்துவிட்டு வந்துவிடும். அதற்காக பெற்றோர் அடித்துவிட்டு, 'அப்போதான் இன்னொரு முறை இப்படி மறக்க மாட்டான்’ என்று நியாயமும் சொல்வார்கள். ஆனால், மீண்டும் மீண்டும் குழந்தை எதையாவது மறந்துவிட்டு வரும். கவனக்குறைபாடுதான் இதற்குக் காரணம். குழந்தைகளின் கவனம் ஒன்றில் மேல்

நிலையாக இருக்காமல், அலைபாய்ந்துகொண்டே இருப்பது அதிகரித்தால்... குழந்தை மனநல மருத்துவரின் வழிகாட்டுதலுடன் பெற்றோரும் ஆசிரியரும் சேர்ந்து செயல்பட வேண்டும்'' என்றார் மோகன்ராஜ்.

''குழந்தைக்கு என்ன சட்டை வாங்கலாம், என்ன பொம்மை வாங்கித் தரலாம், எந்த மாதிரி தலை சீவி விடலாம் என்று அவர்களின் அழகில் அக்கறை காட்டும் பெற்றோர்கள், அவர்களுக்கு என்னென்ன உணவு தரலாம் என்பதில் அதிகம் கவனம் கொள்வதில்லை'' என்று வருத்தம் காட்டிய உணவியல் நிபுணர் யசோதரை,

''பொதுவாக கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் ஏ, பி6, ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துகள் இப்போதுள்ள குழந்தைகளுக்கு குறைவாகக் காணப்படுகிறது. அத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுகளை பெற்றோர்தான் தேடிக் கொடுக்க வேண்டும்'' என்று குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தின் மீதான அக்கறையை வெளியிட்டார்.

சின்னஞ்சிறு மனிதர்களை வளர்ப்போம் கவனமாக!