Published:Updated:

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

தமிழகத்தை ஆளும் நவரத்தினங்கள் !

ஆர்.குமரேசன்,
காசி. வேம்பையன்

 பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவிகித இடஒதுக்கீடு சாத்தியமாவதற்கான வழியே தெரியவில்லை. என்றாலும்... 30 சதவிகித ஆட்சி அதிகாரத்தை பெண்கள் கையில் கொடுத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா! ஆம், மொத்தமுள்ள முப்பத்திரண்டு மாவட்டங்களில், ஒன்பது மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களாக பெண்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !
வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

மதுமதி (கன்னியாகுமரி), ஷோபனா (கரூர்), ஜெயஸ்ரீ முரளீதரன் (திருச்சி), மகேஸ்வரி (புதுக்கோட்டை), மணிமேகலை (விழுப்புரம்) அனுஜார்ஜ் (அரியலூர்), அமுதவள்ளி (கடலூர்), லில்லி (தருமபுரி) மற்றும் அர்ச்சனா பட்நாயக் (நீலகிரி) என ஒன்பது பெண்கள் தமிழக மாவட்டங்களில் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை!

அந்த 'நவரத்தினங்கள்' ஒவ்வொருவருக்கும் 'அவள் விகடன்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்த வேளையில், அவர்களில் சிலர் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு...

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

ஜெயஸ்ரீ முரளீதரன் (திருச்சி மாவட்டம்): ''இது உண்மையிலேயே பெருமையான விஷயம். சமீப காலமாத்தான் முக்கிய பொறுப்புகளிலும் பெண்களை அமர்த்துவது அதிகரித்திருக்கிறது. இது, பெண்கள் மீது அரசாங்கம் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையில்... இன்று பெண்கள் இல்லை. முற்போக்காக சிந்திக்கிறார்கள். வாழ்க்கையில் ஓர் இலக்கை வைத்துக் கொண்டு பயணிக்கிறார்கள். கல்யாணமான பெண்கள்கூட நேரத்தை வீணே கழிக்காமல், பொருளாதார முன்னேற்றத்துக்காக எதையாவது செய்து கொண்டிருக் கிறார்கள். என்னையே இதற்கு உதாரணமாக சொல்லலாம். சயின்ட்டிஸ்ட் என்பதுதான் என் கனவு. ஆனால், அது கைகூடவில்லை. திருமணத்துக்குப் பிறகு குரூப்-1 தேர்வு எழுதினேன். முதல் முயற்சிலேயே தேர்வாகி, அரசுப் பணியில் சேர்ந்துவிட்டேன். இப்படிப்பட்ட முயற்சி எல்லா பெண்களிடமுமே தீயாக இருக் கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் வாகைதான்!''

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

மணிமேகலை (விழுப்புரம் மாவட்டம்): ''எனக்குச் சொந்த ஊரு காஞ்சிபுரம். ஸ்ரீசோமசுந்தர கன்னிகா வித்யாலயா பெண்கள் பாடசாலையும், ஏழாம் கிளாஸ் ஆனந்தி டீச்சரும்தான் என் வெற்றிக்கான படிக்கட்டுகள். நாமளும் படிச்சு சமூகத்துக்கு உதவக்கூடிய ஒரு வேலைக்கு போகணும்ங்கிற எண்ணத்தை உருவாக்கினது அவங்கதான்.

பி.யூ.சி. முடிச்சதும் குரூப்-4 தேர்வு எழுதினேன். முதல் தடவையிலயே தேர்வாகி, 76-ம் வருஷம் வருவாய்த் துறை இளநிலை உதவியாளரா பொன்னேரியில் வேலைக்குச் சேர்ந்தேன். இதுபோதும்னு நான் நின்னிருந்தா... இன்னிக்கு இந்த மணிமேகலை ஐ.ஏ.எஸ். இல்லை. ஓயாத முயற்சிதான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கு.

வருவாய் ஆய்வாளர், தாசில்தார், டெபுடி கலெக்டர், டி.ஆர்.ஓ-னு படிப்படியா துறை ரீதியா உயர்ந்த எனக்கு, போன வருஷம் ஐ.ஏ.எஸ்-ங்கற பெருமையும் தேடி வந்தது. 'தாட்கோ' நிறுவன எம்.டி, மாற்று திறனாளிகள் துறை ஆணையர்னு பணியாற்றின நான்... இப்ப மாவட்ட ஆட்சித் தலைவர். முயற்சியை மனசுல வெச்சுகிட்டு களத்துல இறங்கற பெண்கள், நிச்சயம் இலக்கை அடைய முடியும்''

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !

ஷோபனா (கரூர் மாவட்டம்): ''ஒரு காலத்தில் பெண்களை அடுப்படியில் அடைத்து வைத்த சமூகம், தற்போது ஆட்சி நிர்வாகத்தை கையில் கொடுத்திருக்கிறது. இந்த உயரத்தை அடையும் அளவுக்கு பெண் சமூகம் தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது, பெண்களுக்கான பொருளாதார முன்னேற்றம் மற்றும் கல்வி பெறுவதற்கான ஏராளமான திட்டங்களையும், சலுகைகளையும் அரசு நிறையவே வழங்கி வருவதால், அதை பயன்படுத்திக் கொண்டு மேலும், மேலும் பெண்கள் முன்னேற வேண்டும் என்பதுதான் என்னுடைய எதிர்பார்ப்பு.''

இனி வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் உயரட்டும்.

வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !
வாய்ப்பு கிடைத்தால் வாகை சூடுவோம் !
 

'திறமையா லிங்கு மேனிலை சேர்வோம்
தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம்.’

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்,
எம்.ராமசாமி,
ஜெ.முருகன்,
பா.காளிமுத்து,
எம்.தமிழ்செல்வன்