ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
ஓவியங்கள்: ஹரன்

வாசகிகள் பக்கம்

'பியூட்டி’ செஃப்!

என் பெரிய அக்கா மகன் வெங்கி, வால் பையன். ஒரு நாள் காலையில் எல்லோரும் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிளுக்கு சென்றபோது, எல்லோருக்கும் பிளேட்டில் இட்லி, பிரெட், தோசை எல்லாம் வைத்து, அதன் மீது அழகாக வெண்ணெய் தடவி வைத்திருந்தான் சுட்டி. ''இந்த சின்ன வயசிலேயே என்ன பொறுப்பு?!'' என்று அவனைப் பாராட்டிவிட்டு, இட்லியை எடுத்து வாயில் வைத்த என் அப்பாவின் முகம் அஷ்டகோணலானது. ''வெண்ணெய்னு சொல்லி என்னத்தடா வெங்கி தடவி வச்சிருக்கே?!'' என்று அவர் கேட்கவும், ''யாரு என் ஃபேஸ் க்ரீமை இப்படி வீணாக்கினது..?'' என்று ரூமில் இருந்து என் தங்கை குரல் கொடுக்கவும் சரியாக இருந்தது. க்ரீம், வெண்ணையான விஷயம் எங்களுக்குப் புரிந்தது. எல்லோரும் அவனைக் கோபமாகப் பார்க்க, அவனோ, ''ரெண்டே வாரத்தில் முகம் மட்டுமில்ல... மொத்த உடம்பும் ரொம்ம்ம்ப சிவப்பாயிடும்!'' என்று விளம்பர தொனியில் சொல்ல, டைனிங் டேபிள் சிரிப்பில் அதிர்ந்தது!

- கலாவதி சந்திரசேகர், சென்னை-53

ஆடிப்பெருக்கு... ஆடிக்கூட்டல்!

ஆடிப்பெருக்கு அன்று காலையில் சீக்கிரமாக எழுந்து, வீடு வாசல் பெருக்கி, மாக்கோலம் போட்டு, சமையலில் நான் பரபரப்பாக இருந்தபோது, படுக்கையில் இருந்து எழுந்து வந்தாள் என் குட்டி மகள். வீட்டையும் என்னையும் கவனித்தவள், ''இன்னிக்கு என்னம்மா விசேஷம்..?'' என்று கேட்க, ''ஆடிப்பெருக்குடா... ஆடி மாசத்தில ரொம்ப விசேஷமான நாள்'' என்றேன். உடனே அவள் கண்களை சுருக்கிக்கொண்டு, ''இன்னிக்கு பெருக்கு... அப்ப கூட்டல், கழித்தல், வகுத்தல் எல்லாம் எப்போம்மா வரும்? அன்னிக்கு எல்லாம் எனக்கு ஸ்கூல் லீவ் விடுவாங்களா..?'' என்று கேட்க, அந்தக் குழந்தை மனதின் கேள்வியால் எங்கள் வீட்டு ஆடிப்பெருக்கு இன்னும் விசேஷமாகிப் போக, இன்னும் சிரிப்பு ஓய்ந்தபாடில்லை!

- ஜே.தனலட்சுமி, கோவை

''நான் 'ஜூலி’யா?!''

எல்.கே.ஜி. படிக்கும் என் பேரன் ராகவ், உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட, டாக்டரிடம் கூட்டிச் சென்றேன். மருந்து, மாத்திரைகள் கொடுத்துவிட்டு, ''சாப்பிட பால் சாதம் கொடுங்க'' என்றார் டாக்டர். வீட்டுக்கு வந்ததும் நான் பால் சாதம் பிசைய, என் அருகில் வந்த வாண்டு, ''பாட்டி... இந்த மம்மு யாருக்கு?'' என்றான். ''உனக்குத்தான்டா செல்லம்!'' என்றேன். வந்ததே அவனுக்குக் கோபம்... ''நான் என்ன நம்ம வீட்டு ஜூலி நாய்க்குட்டியா... பால் சாதம் சாப்பிட!'' என்று அவன் சடசடவெனப் பொரிய, நானோ கடகடவெனச் சிரித்துவிட்டேன்!

- எஸ்.விஜயலஷ்மி, ஆதம்பாக்கம்