Published:Updated:

நானும் ஓர் அணில் !

நானும் ஓர் அணில் !

பூ.கொ.சரவணன்

 ஊழலை, இரும்புக்கரம் கொண்டு அடக்கவல்ல 'ஜன் லோக்பால்’ மசோதாவை பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய வலியுறுத்தி... டெல்லி, ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹஜாரே தொடங்கி இருக்கும் உண்ணாவிரதம் எனும் அகிம்சைப் போருக்கு, நாடு முழுக்க ஆதரவு பெருகிக் கிடக்கிறது !

நானும் ஓர் அணில் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

இதன் ஒரு துளியாக, சென்னை திருவான்மியூரில் நடந்துவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் சில மணி நேரங்கள், ஒரு நாள், சில நாட்கள் என்று பலரும் பங்களிப்பைப் பதிந்துவிட்டுப் போக, பத்தாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தபடி பலரையும் ஆச்சர்யமாக திரும்பிப் பார்க்க வைக்கிறார் சுஜாதா!

''எனக்கு 40 வயதாகுது. நான் பி.பீ.ஓ. பிஸினஸ் பண்றேன். அண்ணாஜியோட அமைப்புல நானும் உறுப்பினர். அவர் வலியுறுத்துற 'ஜன் லோக்பால்’ மசோதா பத்தி பேப்பர்ல படிச்சுட்டு, எல்லாரையும் போல மடிச்சு வெச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்க என்னால முடியல. மக்களோட பணத்தை விழுங்கி... தீவுகளையும், சுரங்கங்களையும் வாங்கிக் குவிக்கிற அக்கிரமங்களைப் பார்த்துக் கொதிச்சுப் போயிருக்கிற ஒவ்வொரு இந்தியக் குடிமகனோட உள்ளக் குமுறலைத்தான் அண்ணா எதிரொலிக்கிறார். இந்த லஞ்ச லாவண்யங்களால நானும் பலமா பாதிக்கப்பட்டிருக்கேன். அதனால தான், சட்டுனு உண்ணாவிரதத்தை ஆரம்பிச்சேன். இந்த பத்து நாள்ல உடல் சோர்வானாலும், ராமருக்கு உதவின அணில் மாதிரி, ஊழலுக்கு எதிரான போர்ல நானும் ஒரு துரும்பா நிக்கிற உணர்வு, எனக்குள்ள அளவில்லாத தெம்பு தருது'' என்று சிலிர்க்கும் சுஜாதா,

' அண்ணாஜி சொல்வது போல... 1,456 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்டால்... பொருளாதாரத்தில் இந்தியா நம்பர் 1 நாடாகும்; ஒவ்வொரு இந்திய கிராமத்துக்கும் 100 கோடி ஒதுக்க முடியும்; அடுத்த 20 ஆண்டுகளுக்கு வரியே கட்டத் தேவை இல்லை; பெட்ரோல் ஒரு லிட்டர் 20 ரூபாய்; பால் ஒரு லிட்டர் 8 ரூபாய்’ என்றபடி தற்போது மொபைல் போன்களில் சுழன்று கொண்டிருக்கும் அந்த எஸ்.எம்.எஸ்-ஸை நம்மிடம் காண்பித்துவிட்டு,

''இத்தகைய சூழல்ல நான் உண்ணாவிரதம் இருக்கறத நினைச்சு ஆச்சர்யப்படுறதுல ஒண்ணுமில்ல... உண்ணாவிரதம் உட்காராம இருந்தாதான் ஆச்சர்யப்படணும்.!'' என்கிறார்... வரப்போகும் மறுமலர்ச்சியை எதிர்பார்த்தபடி!

படம்: க.கோ.ஆனந்த்