Published:Updated:

புனர்பூஜையை மறக்காதீர்கள் !

புனர்பூஜையை மறக்காதீர்கள் !

ம.பிரியதர்ஷினி

'இனி, விழாக்காலம்தான்' என்று, தொடர்ந்து வரப்போகும் பண்டிகைகளுக்குக் கட்டியம் கூறும் விநாயகர் சதுர்த்தி... இதோ வந்துவிட்டது. இந்த சந்தர்ப்பத்தில்... பெண்களுக்கும் விநாயகருக்குமான பந்தத்தையும், விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடும் சம்பிரதாய முறைகளையும் சொற்பொழிகிறார்... சென்னை, காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் சண்முக சிவாச்சார்யர்.

புனர்பூஜையை மறக்காதீர்கள் !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
##~##

''சாஸ்திரத்தில், 'உமாங்மலஜாய நமஹ’ என்று சொல்வார்கள். அதாவது, பராசக்தியின் உடம்பில் இருந்து எடுத்த மஞ்சளால் உருவானவர்தான், விநாயகர். அதனால்தான் விநாயகரை மஞ்சளில் பிடித்து வைப்பார்கள். பராசக்தி என்பவள் பெண் வடிவம். ஆக, பெண்ணில் இருந்து வந்தவர்தான் விநாயகர். விநாயகரின் தொப்பைக்குக் காரணம், அவர் உலகத்தைத் தன்னுடைய வயிற்றினுள் அடக்கியிருப்பதால் என்று சொல்வார்கள். பெண்களின் வயிற்றில் இருந்துதானே இந்த உலகமே ஜனிக்கிறது. எனவே, உலகப் பெண்களின் ஒற்றை உருவாகவே இருக்கிறார் விநாயகர்!

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த விநாயகரின் சதுர்த்தி அன்று, பெண்கள் அதிகாலையில் தலைக்கு எண்ணெய் வைத்து, மஞ்சள் பூசி நீராடுங்கள். விநாயகர் சிலையை அலங்கரித்து, அவருக்கு இஷ்டமான சிவப்பு மலர்கள் (செம்பருத்தி, தாமரை), சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரியுங்கள். விளக்கேற்றி, 21 இலைகளோ அல்லது புஷ்பங்களோ அல்லது பட்சணங்களோ அல்லது பழங்களோ படையுங்கள்.

பொதுவாக அருகம்புல்தான் விநாயகருக்கு ஏற்ற மாலை. ஆனால், சதுர்த்தி அன்று மட்டும் துளசியால் பூஜை செய்வது, மிகுந்த அருளைப் பெற்றுத் தரும். மோதகம், இனிப்பு, சர்க்கரைப் பொங்கல், சுண்டல் எனப் படைத்து விநாயகர் மந்திரம் அல்லது பாடல் பாடி வழிபடுங்கள்'' என்ற சிவாச்சார்யர், முக்கியமாக ஒரு சம்பிரதாயத்தையும் சொல்லி முடித்தார். அது...

''நாம் அழைத்ததன் பேரில்தான் சதுர்த்தி அன்று விநாயகர் நம் வீட்டுக்கு வருவார். எனவே, மறுநாள் புனர்பூஜை கொண்டாடி அவரை அனுப்பி வைக்க வேண்டும். பால் அல்லது வாழைப்பழம் வைத்து விநாயகரை மனம் உருகி பிரார்த்தித்து நன்றி சொல்லி, சிலையை நீர்நிலைகளில் கரைத்துவிட வேண்டும்! அனைவருக்கும் ஆனைமுகத்தானின் ஆசிகள் கிடைக்க வாழ்த்துக்கள்''!

படம்: ப.சரவணகுமார்