ரிமோட் ரீட்டா

'இசையருவி’ சேனல் காம்பயர் நிஷா, இப்போ... இணை இயக்குநர்! ''உன்னோட வாழ்த்தை இன்னும் காணோமேனுதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ரீட்டா!''னு சிரிச்ச பப்ளி கேர்ள்கிட்ட, ''புதுப் பொறுப்பு எப்படி இருக்கு?'னு கேட்டேன்.

''கலைஞர் டி.வி-யில புதுசா வர்ற 'சிநேகிதியே’ நிகழ்ச்சி மூலமா என்னோட நெடுநாள் கனவு நனவாகியிருக்கு. காலைல 11 மணி முதல் 12 மணி வரைக்கும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, முழுக்க முழுக்கப் பெண்களுக்கானது. அழகு, சமையல், வீட்டுப் பராமரிப்பு, தனித்திறமை, தாய் - சேய் பங்களிப்புனு பெண்கள் சம்பந்தமா எல்லாம் பேசுறோம். 'சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி’ங்கற படத்தை இயக்கிய பாலா, இந்த நிகழ்ச்சியோட இயக்குநர். இணை இயக்கம் செய்ற வாய்ப்பு எனக்குக் கிடைச்சதை பெருமையா நினைக்கிறேன் ரீட்டா!''னு சந்தோஷப்பட்ட நிஷாகிட்ட, அவங்களைச் சுத்தற காதல் கிசுகிசு பத்திக் கேட்டேன்.

''அது 100% உண்மைதான். நானும், காம்பயர் முரளியும் காதலிக்கிறோம்.... ரெண்டு வருஷத்துக்கும் மேல! அவரோட சிஸ்டர் கல்யாணம் முடிஞ்சதும், எங்களுக்கு டும்டும்டும். ஈவன்ட், புரொடக்ஷன்ஸ்னு ஷோ நடத்தறதுக்காக நான் இப்போ ஆரம்பிச்சிருக்கிற 'ரத்தன் மீடியா’வுக்கு, ஃபுல் சப்போர்ட் முரளிதான். 'முயல்’ங்கற படத்துல ஹீரோவா நடிக்கிறார். அநேகமா டிசம்பர்ல கல்யாண இன்விடேஷன் கொடுப்பேன்!''னு நல்ல செய்தி சொன்னாங்க நிஷா!

சீக்கிரமே பிராப்திரஸ்து!

''என்ன ரீட்டா... 'சாந்த்ரா - ப்ரஜன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து தலைமறைவு’ங்கற நியூஸ படிச்சுட்டு வந்திருக்கியா?''னு ஸ்ட்ரைட்டா மேட்டருக்கு வந்தாரு ப்ரஜன்.

''நானும் சாந்த்ராவும் சேர்ந்து 'சுற்றுலா’ங்கிற படத்துல நடிக்கிறோம். ஆரம்பத்துல இருபத்தி மூணு நாள் கால்ஷீட் போதும்னு புக் பண்ணிட்டு, மேற்கொண்டும் நாட்களை கடத்திட்டே இருந்தாங்க. 'தொண்ணூறு நாள் ஷூட்டிங், அது... இதுனு இழுத்தாங்க. டைரக்டர், புரொட்யூசர்னு யார்கிட்ட இருந்தும் சரியான பதில் கிடைக்கல. அதனால நாங்க சென்னைக்கு கிளம்பி வந்துட்டோம். அதுக்குள்ள தலைமறைவுனு நியூஸ் கொடுத்திட்டாங்க. எங்களை வெச்சு படத்துக்கு விளம்பரம் தேடிக்கிற நோக்கத்துல வந்த நியூஸ் அது. இப்போதான் புரட்யூசர் தரப்புல இருந்து பேச்சுக்கு அழைப்பு வந்திருக்கு. மத்தபடி இதில் ஒரு மறைவும் இல்லை ரீட்டா!''னு தெளிவா விளக்கம் தந்த ப்ரஜன்கிட்ட,

''ஓ.கே... பஞ்சாயத்தை விட்டுத்தள்ளுங்க. உங்க ரெண்டு பேரையும் சேனல் ஏரியாவுல ஆளையே காணோமே... என்னாச்சு?''னு மக்களோட வருத்தத்தைச் சொன்னேன்.

''சின்னத்திரைதான் எங்களுக்குத் தாய்மடி ரீட்டா. அடுத்ததா, சினிமாவுலயும் முயற்சி பண்ணலாமேனு ஆறு மாசம் பிரேக் எடுத்துக் கிட்டோம். பலனா, இப்போ எனக்கு ஐந்து படங்கள்ல வாய்ப்பு கிடைச்சு இருக்கு. முக்கியமா, டைரக்டர் சமுத்திரக்கனியோட 'போராளி’ படத்துல மெயின் ரோலும்கூட. ப்ரஜனும், 'பழைய வண்ணாரப்பேட்டை’ங்கற படத்துல ஹீரோவா நடிச்சுட்டு இருக்கார். முழுக்க லோக்கல் சென்னையோட வாழ்க்கையைப் பேசற படம்!''னு சந்தோஷமானாங்க சாந்த்ரா!

ஹீரோவின் மனைவி!

''எங்க கல்யாணம் முடிஞ்சு ஆறு மாசம் ஆகுது ரீட்டா. வாழ்க்கை இவ்வளவு சந்தோஷமானதானு இந்த ஆறு மாசத்துல ஒவ்வொரு நாளும் என்னை உணர வைக்கிறார் என் கணவர்!''னு ரொமான்டிக் டயலாக்கோட ஆரம்பிச்சாங்க, சன் டி.வி. 'மாதவி’ சீரியல்ல கலக்கிட்டு இருக்கிற வனஜா.

''கணவர் பரத்குமார், டைரக்டர் ஹரி சார்கிட்ட கோ - டைரக்டரா இருக்கார். 'சிங்கம்’ படத்துல நான் நடிச்சப்போ, அந்த ஷூட்டிங் ஸ்பாட்கள்லதான் காதல் மலர்ந்துச்சு. ரெண்டு பேர் வீட்லயும் 'ஓ.கே' வாங்கி, லவ் 'கம்’ அரேஞ்ச்டு மேரேஜ்தான் பண்ணிக்கணும்னு பிடி வாதமா இருந்து நடந்த திருமணம் எங்களோடது. பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இடையில ஒரே ஒரு தெருதான். காலையில இங்க, சாயங் காலம் அங்கனு ஜாலியா போகுது வாழ்க்கை. கல்யாணத்துக்கு அப்புறம் பரத்துக்கும் ஷூட், எனக்கும் ஷூட்டுனு கொஞ்சம் பிஸியாவே ஓடிட்டு இருக்கோம். ரெண்டு பேரும் சேர்ந்து போற ஒரு லாங்க் டிரிப்புக்காக காத்திருக்கோம். அதுலயும் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில நின்னு அவரோட ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு ஆசை..!''னு கன்னம் சிவந்த வனஜா,

''ஒண்ணு சொல்ல மறந்துட்டேன் ரீட்டா... 'சமையல் சூப்பர்’னு என் மாமியார்கிட்ட சர்டிஃபிகேட் வாங்கிட்டேன் தெரியுமோ. வீட்டு வேலைக்கு ஆள் வைக்கக்கூடாதுங்கிறதுல தெளிவா இருக்கேன். அதனால, ஷூட்டிங் கிளம்புறதுக்கு முன்ன சமைச்சு வெச்சுட்டுத்தான் போவேன்''னு சின்ஸியரா சொன்னாங்க!

சமர்த்துப் பொண்ணு!

வாசகிகள் விமர்சனம்
ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150

நேரடி பரவசம்!

''ஸ்ரீ சங்கரா டி.வி-யில், மகான் ஸ்ரீராகவேந்திரரின் '340-வது ஆராதனை’ நிகழ்ச்சியை ஆந்திரப் பிரேதசத்தில் உள்ள மந்த்ராலயத்தில் இருந்து நேரடியாக ஒளிபரப்பினார்கள். அலங்கரிக்கப்பட்ட பிருந்தாவனம், ஊஞ்சல் உற்சவம்... வெள்ளி ரதம், தங்க ரதம் முதலானவற்றில் ராகவேந்திரர் பவனி வந்த காட்சியைப் பார்த்து மெய்சிலிர்த்தோம். பக்தர்கள் ஆடிப்பாடியது, கோலாட்டம், பொய்க்கால் குதிரை போன்ற களியாட்டங்கள் அரங்கேறியது என எல்லாவற்றையும் நேரில் கண்டுகளித்த உணர்வைத் தந்தது அந்த நேரடி ஒளிபரப்பு'' என்று பக்திப் பரவசம் குறையாமல் பேசுகிறார் திருப்பாலையில் இருந்து பி.எஸ்.லஷ்மி.

ஏன் இந்த தலைப்பு!

''விஜய் டி.வி-யின் 'நீயா நானா’ நிகழ்ச்சியில் தாம்பத்ய ரகசியங்கள் பற்றிப் பேசினார் தொகுப்பாளர் கோபிநாத். தாம்பத்யம் தொடர்பாக அவர் கேட்ட கேள்விகளையும், கொஞ்சம்கூட வெட்கப்படாமல் அதற்கு பதில் தந்த பெண்களையும் பார்த்தபோது, 'நம் கலாசாரம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது’ என்று கவலையில் ஆழ்ந்துவிட்டது என் மனது. கணவன், மனைவிக்கு ஊட்டிவிடுவது, கணவன் மடியில் மனைவி படுத்துக் கொள்வதும், முத்தமிடுவது என்று கணவன்-மனைவி இருவருக்கும் இடையிலான அந்தரங்கத்தை... அந்த அரங்கத்தில் பலபேர் மத்தியில் அரங்கேற்றி விட்டனர். வீடுகளில் குடும்பத்தோடு லட்சோப லட்சம் பேர் இதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களே என்று கொஞ்சம்கூட கவலைப்படவில்லை, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். குடும்பங்களைப் பற்றி அப்பட்டமாக விவாதிப்பதற்கு வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்க இப்படிபட்ட தலைப்புகளை தேர்ந்தெடுப்பது எதற்காக?'' என்ற கொதிக்கிறார் சேர்ப்பாடியில் இருந்து டி.மலர்வேணி.

ஓரகத்திகளே ஒன்று சேருங்கள்!

''சன் டி.வி-யில் வரும் 'தென்றல்’ சீரியலில் தமிழுடைய அண்ணனாக வருபவர், குடும்ப அங்கத்தினர்களை அழைத்து, 'நாம் எல்லோரும் ஒரே குடும்பம். அதனால் விட்டுக் கொடுத்து புரிந்து, அனுசரித்து வாழ வேண்டும். ஓரகத்திகள் ஒற்றுமையாக இருந்தால்தான்... அண்ணன், தம்பிகளுக்குள் பிரச்சனைகளே வராது’ என்று கூறியது எங்கள் மனதை நெகிழ வைத்து விட்டது. அவை அனைத்தும் எத்தனை சத்தியமான வார்த்தைகள்! அதையெல்லாம் புரிந்து கொண்டு நடந்தால்... குடும்பத்தில் குழப்பங்களுக்கு வேலையே இல்லையே'’ என்று நெகிழ்கிறார் சென்னையில் இருந்து எஸ்.விஜயலஷ்மி.

படம்: பொன்.காசிராஜன்