Published:Updated:

இறந்துபோன கணவர், மறுமணம் செய்யக் கேட்கும் முன்னாள் காதலர்... என்ன முடிவெடுப்பது?#PennDiary - 64

Penn Diary
News
Penn Diary

மூன்று வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்து, நான் சுயதொழில் முனைவோர் அவதாரம் எடுத்து என்று சென்றுகொண்டிருக்கும் என் வாழ்வில், இப்போது என் முன்னாள் காதலர் வந்து நிற்கிறார். ஒரு வருடத்துக்கு முன், என் தொழில் சம்பந்தமாக நான் தொடர்புகொண்ட ஓர் எண்ணில் அவர் பேச நேர்ந்தது.

Published:Updated:

இறந்துபோன கணவர், மறுமணம் செய்யக் கேட்கும் முன்னாள் காதலர்... என்ன முடிவெடுப்பது?#PennDiary - 64

மூன்று வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்து, நான் சுயதொழில் முனைவோர் அவதாரம் எடுத்து என்று சென்றுகொண்டிருக்கும் என் வாழ்வில், இப்போது என் முன்னாள் காதலர் வந்து நிற்கிறார். ஒரு வருடத்துக்கு முன், என் தொழில் சம்பந்தமாக நான் தொடர்புகொண்ட ஓர் எண்ணில் அவர் பேச நேர்ந்தது.

Penn Diary
News
Penn Diary

எனக்கு 40 வயதாகிறது. என் கணவர் மூன்று வருடங்களுக்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். வாழ்க்கையே இருண்டு போக, நானும் என் பையனும் நிராதரவாகி நின்றோம். பட்டதாரியாக இருந்தாலும், அதுவரை வேலைக்குச் செல்வது பற்றியே யோசிக்காத நான், குடும்பத்தை தாங்கியாக வேண்டிய பொறுப்பில் வேலை தேடி அலைந்தேன். கொரோனா சூழலில் எந்த வேலையும் கிடைக்காமல் போக, சுயதொழிலில் இறங்கினேன். இன்று என் மகனை வளர்க்க, குடும்பத்தை பார்த்துக்கொள்ள எனத் தேவையான பணத்தை என்னால் ஈட்ட முடிந்திருக்கிறது. இந்நிலையில், இப்போது என் வாழ்க்கையில் மீண்டும் ஒரு திருப்புமுனை.

Mom and son
Mom and son

கல்லூரியில் படித்தபோது, ஒருவர் என்னை காதலிப்பதாகக் கூறி மூன்று வருடங்களும் என்னைச் சுற்றி வந்தார். மூன்றாவது வருடத்தில்தான் நான் அவர் காதலை ஏற்றுக்கொண்டேன். நான்கு வருடங்கள் காதலித்தோம். ஆனால், அந்தக் காலத்தில் நாங்கள் அன்பாகப் பேசிக்கொண்டதை விட சண்டை போட்டதுதான் அதிகம். ஈகோவில் இருந்து பொசஸிவ்னெஸ் வரை எங்களுக்குள் எல்லா சண்டைகளும் வந்துள்ளன. ஒருவர் மீது ஒருவர் அன்பு, அக்கறை எல்லாம் இருந்தாலும், அதற்கு இணையாக சண்டைகளும் இருந்ததால், ஒரு கட்டத்தில் இருவருமே மனமொத்து பிரிந்துவிட்டோம்.

அதன் பின்னர் எனக்குத் திருமணம் முடிந்தது. ஆனால், அவர் வீட்டில் அவருக்கு எத்தனையோ பெண்கள் பார்த்தும் ஏனோ திருமணம் முடியவில்லை. ஒரு கட்டத்தில், அவர் திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்துவிட்டார். இன்னொரு பக்கம், கணவர், குழந்தை என செட்டில் ஆன என் வாழ்க்கையில் இருந்து அவர் இல்லாமல் போய்விட்டார்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Image by StockSnap from Pixabay

விதியின் பாதையை யாரால் கணிக்க முடியும்? மூன்று வருடங்களுக்கு முன் என் கணவர் இறந்து, நான் சுயதொழில் முனைவோர் அவதாரம் எடுத்து என்று சென்றுகொண்டிருக்கும் என் வாழ்வில், இப்போது என் முன்னாள் காதலர் வந்து நிற்கிறார். ஒரு வருடத்துக்கு முன், என் தொழில் சம்பந்தமாக நான் தொடர்புகொண்ட ஓர் எண்ணில் அவர் பேச நேர்ந்தது. இருவரின் வாழ்க்கையும் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்று ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துகொண்டோம். பேசத் தொடங்கினோம். ஒரு கட்டத்தில் அவர், 'நாம் திருமணம் செய்துகொள்ளலாம்' என்று கேட்டார்.

நான் மறுமணமே வேண்டாம் என்ற முடிவில் எதுவும் இல்லை. ஆனால், இதுவரை எனக்கு அப்படி எந்தவோர் எண்ணமும் எழவில்லை. ஒருவேளை இவரை நான் மறுமணம் செய்துகொள்ள நினைத்தால், என் பையனிடம் பேசிவிட்டு, அவனுக்கும் இதில் சம்மதம் என்றால் நான் செய்துகொள்வேன். ஆனால் என் பிரச்னை... அவரேதான்.

ஏற்கெனவே காதலித்தபோது, நாங்கள் போட்ட சண்டைகள் எல்லாம் என் கண் முன்னால் வந்து போகிறது. மீண்டும் அப்படி ஒரு சண்டைக்களமாக வாழ்வை மாற்றிக்கொள்வதைவிட, சிங்கிள் பேரன்ட்டாகவே இருந்துவிடலாம் என்று தோன்றுகிறது. அவரோ, 'அதெல்லாம் அந்த வயசுல உள்ளவங்க போட்டுக்கிற சண்டை. இன்னும் நான் அப்படியேவா இருப்பேன்? வாழ்க்கை அடிச்ச அடியில நீ எவ்வளவு மாறியிருக்க? அந்த மாதிரி நானும் மாறியிருக்க மாட்டேனா? இனி உனக்கு நானும் எனக்கு நீயும் ஆறுதலா இருப்போம். நிச்சயமா அந்த மாதிரி சண்டை எல்லாம் நமக்குள்ள வராது' என்கிறார்.

Man and woman (Representational image)
Man and woman (Representational image)
Pixabay

எத்தனை வயதானாலும், ஒருவரின் கோர் (core) குணம் மாறுமா? இன்னொரு பக்கம், அவர் சொல்வதைப் போல கல்லூரிக் காலத்தில் சண்டை போட்ட பெண்ணாக நானும் இப்போது இல்லைதான். ஆனால், அவரும் அப்படி மாறியிருப்பார் என்று நம்பவும் அச்சமாக உள்ளது. வாழ்க்கையில் சந்தோஷத்தை தேடிப்போய், நிம்மதியை இழந்துவிடக் கூடாது என்று தோன்றுகிறது.

என்ன செய்யட்டும் நான்?