Published:Updated:

காதல் இல்லை, கல்யாணம் தள்ளிப்போகிறது; விரக்தி மனநிலைக்கு என்ன வழி? #PennDiary96

Penn Diary
News
Penn Diary

என் தங்கை, தான் காதலிப்பதாக வீட்டில் கூறினாள். அந்தப் பையனை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டிலும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். என் திருமணம் முடிந்ததும் அவர்கள் திருமணத்தை நடத்த வெயிட்டிங். இப்போது, எனக்குக் கூடுதலாக இந்த அழுத்தமும் சேர்ந்துள்ளது.

Published:Updated:

காதல் இல்லை, கல்யாணம் தள்ளிப்போகிறது; விரக்தி மனநிலைக்கு என்ன வழி? #PennDiary96

என் தங்கை, தான் காதலிப்பதாக வீட்டில் கூறினாள். அந்தப் பையனை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டிலும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். என் திருமணம் முடிந்ததும் அவர்கள் திருமணத்தை நடத்த வெயிட்டிங். இப்போது, எனக்குக் கூடுதலாக இந்த அழுத்தமும் சேர்ந்துள்ளது.

Penn Diary
News
Penn Diary

அப்பா, அம்மா இருவரும் அரசு ஊழியர்கள். நான், என் தங்கை என வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள். இருவரும் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறோம். எனக்கு 24 வயதானபோது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். என் ஜாதகத்துக்குப் பொருத்தமான ஜாதகம் கிடைப்பது சிரமம் என்று கூறினார் ஜோசியர். அவர் கூறியபடியே, வந்த வரன்களில் மிகச் சில வரன்களே எனக்குப் பொருந்தின. பொருந்திய வரன்களிலும், எங்களுக்கு மாப்பிள்ளையை/அவர் வீட்டினரை பிடிக்கவில்லை; அல்லது மாப்பிள்ளை வீட்டினருக்கு என்னை/ எங்கள் வீட்டினரை பிடிக்கவில்லை.

Bride (Representational Image)
Bride (Representational Image)
Instagram I kshamachy

இப்படியே இரண்டு வருடங்கள் ஓடின. எங்கள் வீட்டில் அனைவருமே, இந்த மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் சோர்ந்துவிட்டோம். என் பெற்றோர் ஒரு கட்டத்தில், ‘நீ யாரையாச்சும் லவ் பண்ணினாலும் எங்களுக்கு ஓ.கேதான்’ என்றார்கள். ஆனால், எந்தக் காதலும் எனக்கு அமையவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வட்டத்தில், ‘அவளுக்கு பாவம் ரொம்ப நாள் மாப்பிள்ளை பார்க்கிறாங்க, எதுவும் அமையல’ என்று நான் பேசப்பட ஆரம்பித்தேன்.

என் பெற்றோருக்கு சாதிப்பற்று எல்லாம் இல்லை. எனவே அடுத்த முயற்சியாக, ’சாதி, ஜாதகம் தடையில்லை’ என மேட்ரிமோனியலில் வரன் தேட ஆரம்பித்தோம். அப்படியும் எதுவும் அமையவில்லை. என் அலுவலகத்தில், நண்பர்கள் வட்டத்தில் என மூன்று பேர் இதுவரை எனக்கு புரொபோஸ் செய்தனர். ஆனால், அவர்கள் எனக்கு சரியான துணையாக இருக்கமாட்டார்கள், நான் அவர்களுக்கு சரியான இணை இல்லை என்று தோன்றியதால், காதலும் என் வாழ்க்கையில் இதுவரை இல்லை.

Representational Image
Representational Image

இந்நிலையில், ஒரு வருடத்திற்கு முன்னர் என் தங்கை, தான் காதலிப்பதாக வீட்டில் கூறினாள். அந்தப் பையனை எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது. மாப்பிள்ளை வீட்டிலும் ஓ.கே சொல்லிவிட்டார்கள். என் திருமணம் முடிந்ததும் அவர்கள் திருமணத்தை நடத்த வெயிட்டிங். இப்போது, எனக்குக் கூடுதலாக இந்த அழுத்தமும் சேர்ந்துள்ளது. அதுவே மனஅழுத்தமாகவும் மாறிவருகிறது.

என் தங்கை, சில வார இறுதிகளில் தான் காதலிக்கும் பையனை வீட்டுக்கு லன்ச்சுக்கு அழைக்கிறாள். அம்மா, அப்பா, அவள், அவர் என அனைவரும் மகிழ்ச்சியுடன் பேசும் பொழுதுகளில், அதில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேபோல, அவர் வீட்டில் எங்கள் குடும்பத்தை அவர் பிறந்தநாள், அவர் அப்பா ரிட்டயர்மென்ட் நிகழ்ச்சி போன்றவற்றுக்கு அழைக்கும்போது, எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. ‘இவங்கதான் பொண்ணோட அக்கா. இவங்க கல்யாணத்துக்குத்தான் வெயிட்டிங். முடிஞ்சதும் அடுத்து எங்க பையன் கல்யாணம்’ என்றெல்லாம் அவர்கள் தங்கள் உறவுகள், நண்பர்களிடம் பேசும்போது, என் மனது சோர்ந்துபோகிறது.

காதல் இல்லை, கல்யாணம் தள்ளிப்போகிறது; விரக்தி மனநிலைக்கு என்ன வழி? #PennDiary96
Pexels

இதுபோன்ற சூழல்களில் என் மனம் எப்படியெல்லாம் கஷ்டப்படும், சங்கடப்படும் என்பதை என் பெற்றோர், தங்கையிடம் நான் வெளிப்படுத்தாதலாலோ என்னவோ... அவர்களும் என் நிலைமை பற்றி புரிந்துகொள்வதில்லை. இப்போது எனக்கு 29 வயதாகிறது. என் விரக்தி வளர்ந்துகொண்டே போகிறது. விடுபட வழி என்ன?