Published:Updated:

``மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு தேவை!'' - சமூக ஆர்வலர் பிரியா பாபு

பிரியா பாபு

``மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், காவல்துறை பணிக்கான தேர்வை எழுதியிருக்கிறார். எனக்கு எந்த அடிப்படையில் வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று தெரியவில்லையே மேடம்' என்று அந்தக் குழந்தை பயந்துகொண்டிருக்கிறது. அவருடைய பயம் உங்களுக்குப் புரிகிறதா?''

``மூன்றாம் பாலினத்தவருக்கு சிறப்பு ஒதுக்கீடு தேவை!'' - சமூக ஆர்வலர் பிரியா பாபு

``மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், காவல்துறை பணிக்கான தேர்வை எழுதியிருக்கிறார். எனக்கு எந்த அடிப்படையில் வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று தெரியவில்லையே மேடம்' என்று அந்தக் குழந்தை பயந்துகொண்டிருக்கிறது. அவருடைய பயம் உங்களுக்குப் புரிகிறதா?''

Published:Updated:
பிரியா பாபு

மூன்றாம் பாலினத்தினர் பற்றிய புரிந்துணர்வு, கடந்த சில வருடங்களாகத்தான் சமூகத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு போன்ற வாழ்வாதாரங்கள் மெள்ள மெள்ள அவர்களில் சிலருடைய கரங்களுக்கு எட்டிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், `மூன்றாம் பாலினத்தவருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என மூன்றாம் பாலினத்தவர் அமைப்பைச் சேர்ந்த சுதா என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

அதில், `மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற வாழ்வாதார உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. என்றாலும், எங்களுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும், இட ஒதுக்கீடும் இதுவரை வழங்கப்படவில்லை. அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதுபோல எங்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார் சுதா.

இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், `மூன்றாம் பாலினத்தார் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப் பட்டுள்ளனர். அதனால், அந்தப் பிரிவுக்கான இட ஒதுக்கீடு மூன்றாம் பாலினத்தாருக்கு வழங்கப்படும். பெண்ணாக மாறிவிட்டதற்கான சான்றிதழ் அளித்தால் பெண்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படும். மூன்றாம் பாலினத்தினருக்கென்று சிறப்பு இட ஒதுக்கீடு கோர முடியாது’ என்று சுதாவின் வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக, எழுத்தாளரும், மூன்றாம் பாலினத்தினருக்கான சமூக செயற்பாட்டாளருமான பிரியா பாபுவிடம் கருத்து கேட்டோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''எங்களுக்கு எம்.பி.சி-க்கான இட ஒதுக்கீடு மட்டும் போதாது. சிறப்பு இட ஒதுக்கீடு கண்டிப்பாகக் கொடுத்தே ஆக வேண்டும். எங்கள் மக்கள், பல காலமாக விளிம்பு நிலை மக்களாகவே இருந்துகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் காவல்துறை பணிக்கான தேர்வை எழுதியிருக்கிறார். `எனக்கு எந்த அடிப்படையில் வேலையில் இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்று தெரியவில்லையே மேடம்' என்று அந்தக் குழந்தை பயந்துகொண்டிருக்கிறது. அவருடைய பயம் உங்களுக்குப் புரிகிறதா?

Priya babu
Priya babu

அரசு பெண்களுக்கென்று தனி இடஒதுக்கீடு வழங்குகிறது. விதவைகளுக்கென்றும் தனி இடஒதுக்கீடு வழங்குகிறது. அதுபோலத்தான் நாங்களும் எங்களுக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு கேட்கிறோம். இத்தனை காலமாக ஒடுக்கப்பட்டிருந்த எங்களுக்கு இந்தச் சலுகை கொடுக்கப்படவில்லை என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..? அது நீதியல்லவே... ஒரு குழந்தை தன்னை மூன்றாம் பாலினமாக உணர்ந்து, அறுவைசிகிச்சை செய்து தனக்கான பாலினத்துக்கு மாறி வருவதற்கே நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ஆகிவிடும்.

அந்தக் காலகட்டத்தில் சிறப்பு இட ஒதுக்கீடு போன்ற சலுகைகள் இருந்தால், எங்கள் பிள்ளைகளால் வாழ்க்கையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள முடியும். எங்களுக்கு சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையில்லை. பெண்களுக் கென்று, அதிலும் விதவைகளுக்கு என்று தனி இட ஒதுக்கீடு அளிப்பதுபோல எங்களுக்கும் சிறப்பு இட ஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். வாழ்வதற்காகத்தான் இதை நாங்கள் கேட்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்'' என்கிறார் பிரியா பாபு.