Published:Updated:

`மகள்கள், வார்ட்ரோப் ஷேரிங், பாட்டி - பேத்தி உறவு!' - அம்மா குஷ்புவின் பர்சனல் பக்கங்கள்

குஷ்பு

``குழந்தைகளுடைய முயற்சிகளுக்கு நோ சொல்லாதீங்க. அவங்க முயற்சிகள்தான் அவங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களா மாத்தும்."

`மகள்கள், வார்ட்ரோப் ஷேரிங், பாட்டி - பேத்தி உறவு!' - அம்மா குஷ்புவின் பர்சனல் பக்கங்கள்

``குழந்தைகளுடைய முயற்சிகளுக்கு நோ சொல்லாதீங்க. அவங்க முயற்சிகள்தான் அவங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களா மாத்தும்."

Published:Updated:
குஷ்பு

சிறு இடைவெளிக்குப் பின், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்,

`மீரா' சீரியல் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பு. மகப்பேறு மருத்துவர், அம்மா என இரண்டு பொறுப்புகளுடன் பயணிக்கும் குஷ்புவிடம் பேசினோம்.

``தர்மத்தின் தலைவன் தொடங்கி, மீரா சீரியல் வரையிலான பயணம் எப்படி இருக்கு?"

``நான் தேர்வுசெய்யும் ஒவ்வொரு புராஜெக்ட்டும் எனக்கு புது அனுபவம்தான். நடிக்க வந்து எத்தனை வருஷம் ஆனாலும், தொழில்மீது ஒரு பயமும், மரியாதையும் எப்போதும் இருக்கு. அதுதான் வெவ்வெறு பரிமாணங்களில் தொடர்ந்து பயணிக்க வைக்குது. இப்போ மீரா சீரியல்ல தன்னுடைய கனவுக்காகப் போராடும் பெண்ணாகவும். போல்டான அம்மா ரோலிலும் நடிக்கிறேன். இந்த கேரக்டர் நிச்சயம் நிறைய பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும்."

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குஷ்பு தனது கணவர் மற்றும் தன் பெண்குழந்தைகளுடன்
குஷ்பு தனது கணவர் மற்றும் தன் பெண்குழந்தைகளுடன்

``சீரியலில் போல்டான அம்மா, நிஜத்தில் குஷ்பு எப்படி?"

``எந்தச் சூழலலையும் துணிந்து எதிர்கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கு. அதே நேரம் என் பொண்ணுங்களுக்கு ஃபிரெண்ட்லியான அம்மா. என்னோட பேரன்டிங்கில் எந்த வற்புறுத்தலும், கட்டாயப்படுத்துதலும் இருந்ததில்லை. என்னோட ரெண்டாவது பொண்ணு அவங்களோட 15 வயசுல படிப்பை நிறுத்திட்டு பிசினஸ் பண்ணப்போறேன்னு சொன்னாங்க. சந்தோஷமா, பண்ணுனு அவங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தோம். சப்போர்ட் பண்ணோம். என்னோட பொண்ணுங்க தைரியமா, சொந்தக்கால்ல நிக்கணும்ங்கிற சின்ன ஆசை மட்டும்தான் எனக்கிருக்கு. அதுக்கு அவங்களுக்குத் தேவையானதை சப்போர்ட் பண்றேன், அவ்வளவுதான்."

``நீங்களும் உங்க ரெண்டாவது பொண்ணு அனந்திகாவும் சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். உங்க பெரிய பொண்ணு அவந்திகா பத்தி ஷேர் பண்ணுங்க..."

``அவங்க சுந்தர். சி மாதிரி கொஞ்சம் அமைதி. அவங்களோட வேலையில் கரெக்ட்டா இருப்பாங்க. லண்டன்ல ஃபிலிம் மேக்கிங் அண்ட் ஆக்டிங் சம்பந்தமா படிக்கிறாங்க. இன்னும் சில மாசத்துல படிப்பு முடிஞ்சுரும். இந்தியா வந்த பிறகு ஆக்டிங் பண்ணப் போறாங்களா, இல்ல, அவங்க அப்பா மாதிரி டைரக்‌ஷன்ல இறங்கப் போறாங்களானு அவங்கதான் முடிவு பண்ணணும்."

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

`` `வார்ட்ரோப் ஷேரிங்ஸ்'னு நீங்க போட்டிருந்த பதிவை சமூக வலைதளங்கள்ல பார்த்தோம் அது பத்தி சொல்லுங்களேன்?

``என்னோட மகள்கள், கணவர் எல்லாருமே வெயிட்லாஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. ஏற்கெனவே அவங்க எல்லாரும் ஆறு அடி. வெயிட்லாஸ் மூலமா ஃபிட்டாவும் மாறிட்டாங்க. அதனாலதான் நானும் வெயிட்லாஸ் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ நாங்க நாலு பேரும், ஃபிட். என் பொண்ணுகளோட டிரெஸ் எனக்கு கரெக்ட்டா இருக்கு. என் பொண்ணுங்க என்னோட டிரெஸ் யூஸ் பண்றாங்க. இந்த மாதிரி வார்ட்ரோப் ஷேர் பண்ணிக்கிறதுல எப்போதுமே ஒரு ஹேப்பினெஸ் இருக்கும். குட்டி குட்டி சண்டைகளும் வரும். சண்டைகள்தானே அன்பை பெருக்கும்..."

குஷ்பு
குஷ்பு

``நீங்க உங்க மாமியார் அல்லது அம்மாகூட வீடியோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம்ல ஷேர் பண்றீங்க. குழந்தை வளர்ப்புல பெரியவங்களோட பங்காக எதை நினைக்கிறீங்க?"

``எனக்கும், சுந்தர்.சி-க்கும் அப்பா இல்லை. ஸோ என் பொண்ணுங்களுக்கு பாட்டிகள் மட்டும்தான். நாங்க எல்லாரும் ஒண்ணா ஒரே வீட்டுலதான் இருக்கோம். அதனால என் மகள்கள் ரெண்டு விதமான கலாசாரம், மொழியை கத்துக்கிறாங்க. பாட்டிகள் அவங்களுக்கு ஃபிரெண்ட்ஸ் மாதிரி. பெற்றோரா நாம சொல்லிக்கொடுக்கத் தவறும் விஷயத்தை நம்மை விட, ரொம்ப பொறுமையா வீட்டுப் பெரியவங்க குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்துருவாங்க. கதை சொல்றதுல தொடங்கி, குழந்தைகளுக்கான சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொடுகங்குறது வரை வீட்டுப் பெரியவங்களோட பங்கு ரொம்ப முக்கியமானது. எங்க அம்மாவுக்கும் சரி, சுந்தர்.சி அம்மாவுக்கும் சரி, என் மகள்கள்தான் இப்போ முதல் குழந்தைகள். என் மகள்கள் சேர்ந்து உட்கார்ந்து பாட்டிகளைச் செல்லப் பெயர் வெச்சுக் கொஞ்சும்போது, பாட்டி- பேத்தி உறவு ரொம்ப அழகானதுனு தோணும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``நெகட்டிவ் விமர்சனங்களை எப்படிக் கையாள்றீங்க? அதில் உங்களின் மகள்களின் சப்போர்ட் என்ன?"

``விமர்சனங்களை நான் எப்போதும் வரவேற்கிறேன். என் மகள்கள் சிறந்த விமர்சகர்கள். ஒரு படம் பார்த்துட்டு நல்லா இருக்குனா, `நல்லா இருக்குனு' சொல்லுவாங்க. நல்லா இல்லைனா, `நல்லா இல்லைனு' முகத்துக்கு நேரா சொல்லிருவாங்க. நான் சில நேரம் மனசு சோர்ந்து போய் உட்கார்ந்தாலும், என் முகத்தையும், வாய்ஸையும் வெச்சே நான் ஹேப்பியா இல்லைனு கண்டு பிடிச்சுடுவாங்க. அந்த மாதிரியான சூழல்ல எனக்கு நம்பிக்கை கொடுத்து, என் முகத்துல சிரிப்பை வரவைக்கிறது என் குடும்பம்தான்."

குஷ்பு
குஷ்பு

``எல்லா பெற்றோர்களும் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய விஷயம்னு எதை நினைக்கிறீங்க?"

``குழந்தைகளுடைய முயற்சிகளுக்கு நோ சொல்லாதீங்க. அவங்க முயற்சிகள்தான் அவங்களை தன்னம்பிக்கை உள்ளவர்களா மாத்தும்."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism