Published:Updated:

`யூடியூப் பார்த்து பஞ்சர் போடக் கத்துக்கிட்டேன்!' - தனி மனுஷியாக சாதிக்கும் குட்டியம்மா

பஞ்சர் பார்க்கும் தொழில் செய்யும் குட்டியம்மா

``அக்கா நீங்கதான் பஞ்சர் போடுறீங்களா" என்றேன். ``ஆமா தம்பி! உங்க வண்டி பஞ்சரா? ப்ரென்டா, பேக்கா?" என்று விசாரித்தவர், என் பதிலை எதிர்பாராமல் ``பத்தே நிமிஷம் பொறுங்க தம்பி, கையில இருக்கிறதை முடிச்சிட்டு வந்திடுறேன்" என்றார்.

`யூடியூப் பார்த்து பஞ்சர் போடக் கத்துக்கிட்டேன்!' - தனி மனுஷியாக சாதிக்கும் குட்டியம்மா

``அக்கா நீங்கதான் பஞ்சர் போடுறீங்களா" என்றேன். ``ஆமா தம்பி! உங்க வண்டி பஞ்சரா? ப்ரென்டா, பேக்கா?" என்று விசாரித்தவர், என் பதிலை எதிர்பாராமல் ``பத்தே நிமிஷம் பொறுங்க தம்பி, கையில இருக்கிறதை முடிச்சிட்டு வந்திடுறேன்" என்றார்.

Published:Updated:
பஞ்சர் பார்க்கும் தொழில் செய்யும் குட்டியம்மா

மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில், நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது நான் கண்ட காட்சி என் கவனத்தை ஈர்த்தது. கரி படிந்த தன் கரங்களில் டூல்ஸைப் பிடித்து பஞ்சர் போடும் வேலையில் ஈடுபட்டிருந்தார் ஒரு பெண்.

குட்டியம்மா
குட்டியம்மா

முதுகை வளைத்து ஒரு டயருக்குள் இருக்கும் ட்யூபை கழற்றி, தன் குழந்தைக்கு ஒப்பனை செய்வதைப்போல பஞ்சர் போடுவதற்காக பவுடரைத் தூவிக்கொண்டிருந்தார். தயக்கத்தோடு அவரை அணுகி, ``அக்கா நீங்கதான் பஞ்சர் போடுறீங்களா" என்றேன். ``ஆமா தம்பி! உங்க வண்டி பஞ்சரா? ப்ரென்டா, பேக்கா?" என்று விசாரித்தவர், என் பதிலை எதிர்பாராமல் ``பத்தே நிமிஷம் பொறுங்க தம்பி, கையில இருக்கிறதை முடிச்சிட்டு வந்திடுறேன்" என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``பஞ்சர் எல்லாம் ஒண்ணுமில்லைக்கா... நீங்க எப்படி இந்த வேலைக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாம்னுதான் கேக்க வந்தேன்" என்றேன். ``அட... அப்படியா! அப்போ வேலையைப் பார்த்துக்கிட்டே விவரத்தைச் சொல்றேன்" என்றவரின் பெயர் குட்டியம்மா. விபத்தில் கணவனை இழந்த குட்டியம்மா, அவர் விட்டுப்போன தொழிலைக் கையிலெடுத்து பம்பரமாகச் சுழன்று வருகிறார்.

குட்டியம்மா
குட்டியம்மா

``என் கணவர் ரொம்ப வருஷமா பஞ்சர் பாக்குற தொழில்தான் பார்த்துகிட்டு இருந்தாரு. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விபத்துல அவரு இறந்துட்டாரு. அவர் இருந்தவரை வாழ்க்கையோட கஷ்டமே தெரியல. அவரு போனதுக்கப்புறம் என்ன பண்ணப் போறோம்னு தெரியாம ரெண்டு குழந்தைகளோட கண்கலங்கி நின்னேன். தனியாளா நிக்குறேன்னு யாரும் உதவிக்கு வரல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கணவர் இல்லைன்ற கவலையை குழந்தைங்ககிட்ட காட்டாம அவங்க கண்ணைத் தொடச்சு ஆறுதல் சொல்லிட்டு வேலை தேட ஆரம்பிச்சேன். எனக்கு வேலை கொடுக்கவும் யாரும் இல்ல. எனக்கு உதவ முன்வராதவங்கதான் `இந்த பஞ்சர் கடை எதுக்கு? அதை வித்துடு'னு ஆலோசனை சொன்னாங்க. அவரு ஞாபகமா இருக்குறது இந்த பஞ்சர் கடை மட்டும்தான். இத்தனை நாள் எங்களுக்கு சாப்பாடு போட்டதும் இதே கடைதான். இதை ஏன் அடுத்தவங்களுக்கு கொடுக்கணும்னு தோணுச்சு.

யூடியூப்
யூடியூப்

கடையை என்னால நடத்த முடியாதுங்கிறதால வேலைக்கு ஆள்கள் வெச்சு நடத்துனா என்னன்னு வேலைக்கு ஆளும் தேட ஆரம்பிச்சேன். `பஞ்சர் போடுற வேலையா'ன்னு கேட்டு யாரும் வேலைக்கு வரல. நான் சோர்ந்து போகல. எதுக்கு வெளி ஆள்களைத் தேடணும், நாமளே வேலை செஞ்சா என்னன்னு முடிவு பண்ணினேன். தொழிலை யாருகிட்ட கத்துக்கிறதுன்னு தெரியல. அப்புறம்தான் யூடியூப்ல பஞ்சர் பார்க்கிறது எப்படி என்ற வீடியோக்களைப் பார்க்க ஆரம்பிச்சேன்.

தொடர்ச்சியா 30 நாள் வீடியோ பார்த்தே தொழிலைக் கத்துக்கிட்டேன். வீடியோ பார்த்தா மட்டும் தொழில் கத்துக்க முடியாது, செய்முறை பயிற்சி வேணுமே. அதுக்கு, என் கணவரோட மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்திக்கிட்டேன். அந்த வண்டி டயரை நானே கழட்டி மாட்டி கத்துக்கிட்டேன். அதுக்கப்புறம் படிப்படியா ஆட்டோ, வேன், லாரின்னு கனரக வாகனங்கள் வரை நானே தனி ஆளா ஜாக்கி மாட்டி டயரை கழட்டி பஞ்சர் பார்த்து மறுபடி மாட்டிருவேன்.

கார் டயரை கழற்றி மாட்டும் குட்டியம்மா
கார் டயரை கழற்றி மாட்டும் குட்டியம்மா

நான் கடைய நடத்த ஆரம்பிச்ச புதுசுல, நிறைய இடைஞ்சல், நெருக்கடி வந்தது. முதல்ல நானும் அவங்களைப் பார்த்து கொஞ்சம் பயந்தேன்.

ஒரு கட்டத்துக்கு மேல, `வாழ்க்கையில இதுபோல இன்னும் நிறைய சவால்களைச் சந்திக்கணும்... இப்பவே சோர்ந்துடாதே. இதுவும் கடந்து போகும்'னு என்னை நானே சமாதானப்படுத்திக் கிட்டு, சவால்களை எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். அந்த தைரியம்தான் ரெண்டரை வருஷமா இந்தக் கடையை நடத்த உதவியிருக்கு" எனும் குட்டியம்மா, இந்தத் தொழிலில் சந்திக்க வேண்டியிருக்கும் சில சவால்கள் பற்றிப் பகிர்ந்தார்.

``கடை நம்பரைப் பார்த்துட்டு சிலர் நடுராத்திரியில கால் பண்ணி `கார் பஞ்சராகி ஹைவேஸ்ல நிக்கிறோம்'ன்னு சொல்வாங்க. ஆரம்பத்துல தனியாளாகப் போக பயப்பட்டேன்.

குட்டியம்மா
குட்டியம்மா

குடும்பமா வந்திருந்தாங்கன்னா அவங்க மனைவி, குழந்தையை என்கிட்ட பேச வைப்பாங்க. `பசங்கள வீட்ல தனியா விட்டு வர முடியாது'ன்னு சொல்லுவேன். அதுக்கப்புறம் மனசு கேக்காம பசங்களை பக்கத்து வீட்டுல விட்டுட்டு நான் போய் பஞ்சர் பார்த்துட்டு வருவேன். தொழில் ஆரம்பிச்ச புதுசுல தனியாளா வேலை பார்த்தேன். இப்போ ஒரு பையனை உதவிக்கு சேர்த்திருக்கேன். வாழ்க்கை பஞ்சர் ஆகாம போயிட்டு இருக்கு தம்பி!" - தன்னம்பிக்கையுடன் நமக்கு விடைகொடுத்தார் குட்டியம்மா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism