Published:Updated:

`பிக்பாஸ்' ஷிவானியின் அம்மா செய்தது சரியா? - டாக்ஸிக் பேரன்டிங் ஆபத்துகள்!

பிக்பாஸ் ஷிவானி
பிக்பாஸ் ஷிவானி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் பல பெற்றோரின் பிரதிபலிப்பாகவே ஷிவானியின் அம்மாவைப் பார்க்க முடிந்தது.

கடந்த வார சென்சேஷன் என்று சொன்னால் அது பிக்பாஸ் ஷிவானியின் அம்மாதான். பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிவானியை பிடிபிடியென பிடித்துவிட்டார். பிக்பாஸ் 4-வது சீஸன் தொடங்கியதிலிருந்தே ஷிவானி முனைப்போடு தன்னை முன்னிலைப்படுத்தி விளையாடுவதில்லை என்ற பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. போட்டியாளர்களும் இதே கருத்தை பலமுறை தெரிவித்தனர். அப்போதெல்லாம் நான் நானாகவே இருக்கிறேன் என்பதுதான் ஷிவானியின் பதிலாக இருந்தது.

Shivani's mother
Shivani's mother

ஆனால், அவரின் அம்மா உள்ளே சென்றபோது ஷிவானியிடம் இவை அனைத்தையும் சற்று கோபமாகப் பிரதிபலித்தார். நெட்டிசன்கள் பலரும் அவரது பேச்சுக்கு ஆதரவு தெரிவித்தனர். கடந்த சீஸனில் லாஸ்லியாவின் தந்தையைப் பார்த்தது போன்று இருந்தது என்றெல்லாம் தெரிவித்திருந்தனர். ஆனால், அவர் அம்மா நடந்துகொண்டது மிகவும் தவறு என்ற கருத்தும் எழுந்தது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் பல பெற்றோரின் பிரதிபலிப்பாகவே ஷிவானியின் அம்மாவைப் பார்க்க முடிந்தது. தவறு செய்யும் பிள்ளைகளிடம் கனிவுடன் அதை எடுத்துச் சொல்லும் பெற்றோர் மிக மிகக் குறைவுதான். பெற்றோரின் இத்தகைய நடவடிக்கை வளரும் பிள்ளைகள் மத்தியில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உளவியல் ஆலோசகர் மினி ராவிடம் கேட்டோம்.

Parenting
Parenting
Photo by Daiga Ellaby on Unsplash

``பல கோடி பேர் பார்க்கும் ஒரு தொலைக்காட்சியில் அவர் அப்படி நடந்துகொண்டது நிச்சயம் தவறுதான். பாசிட்டிவ்வாகப் பேசி விஷயத்தை விளக்காமல் நெகட்டிவ்வாக, மட்டம் தட்டிப் பேசியது 19 வயது இளம்பெண்ணின் மனதை அதிகம் பாதிக்கும். `நீ நன்றாகத்தான் விளையாடுகிறாய். இன்னும் உன்னுடைய தனிப்பட்ட குணாதிசயத்தைக் காட்டி விளையாடு. பிறரை சார்ந்திருக்காதே!' என்று இலைமறை காயாக எடுத்துச் சொல்லியிருந்தால் அது அவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்காது.

அடுத்ததாக வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினர் எல்லோரும் மிகவும் பாசிட்டிவ்வாகப் பேசிச் சென்றனர். நம் அம்மா மட்டும் இப்படி இல்லையே என ஷிவானி நினைத்திருக்கக்கூடும். இதனால் விளையாட்டில் ஈடுபாடு இல்லாமல் போகும். நண்பர்கள் மத்தியில் வைத்துகூட ஒரு குழந்தையைத் திட்டக்கூடாது. அப்படியிருக்கும்போது தொலைக்காட்சி பிரபலமாக அறியப்பட்ட தன்னை பல கோடி பேர் பார்க்கும் நிகழ்ச்சியில் வைத்து தன் அம்மா திட்டிவிட்டாரே என்ற அவமான உணர்ச்சியும் எழும்.

சோஷியல் கான்ஷியஸ்!

ஷிவானியின் அம்மாவுக்கும் சமூகம் தன்னைப் பற்றி தன் குழந்தையைப் பற்றி என்ன நினைக்கும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது. இதுதான் பெரும்பாலான பெற்றோரின் நிலையும். யாரோ நான்கு பேர் தன் குழந்தையைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி விமர்சிப்பார்கள் என்று யோசித்து பிள்ளைகளை இதுபோன்று நடத்துவார்கள். குடும்பத்தின் சந்தோஷத்தைவிட பிறரின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை.

பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை இப்படி அதீத கண்டிப்புடனும் அடித்தும் வளர்க்கின்றனர். இதை `ராங் பேரன்ட்டிங்' (Wrong Parenting) அல்லது `டாக்ஸிக் பேரன்ட்டிங்' (Toxic Parenting) என்று சொல்லலாம். இத்தகைய வளர்ப்புமுறையில் வளரும் குழந்தைகள் வீட்டிலுள்ள ஆத்திரத்தை வெளியே நண்பர்களிடமும் சக வகுப்பு மாணவர்களிடமும் காட்டுவார்கள். குழந்தைகளிடம் டாக்ஸிக் பேரன்ட்டிங் வேலையே செய்யாது. அது அவர்களை மேலும் ஆத்திரமடையச் செய்து, பிறரிடம் ஆக்ரோஷமாக நடக்கத்தூண்டும். எதிர்காலத்தில் பெற்றோருடனான உறவு முறையும் சுமுகமாக இருக்காது.

Psychologist Mini Rao
Psychologist Mini Rao

கண்டிப்பு என்ற பெயரில் நண்பர்கள் மத்தியில், பொது இடத்தில் வைத்துத் திட்டுவது, அடிப்பது போன்ற செயல்கள் பிள்ளைகளை உணர்வுபூர்வமாக அதிகம் பாதிக்கும். மனதளவில் திடமாக இல்லாத குழந்தை என்றால் மனஅழுத்தம் ஏற்பட்டு தற்கொலை உணர்வுகூட எழும்.

அதீத கண்டிப்புடன் வளரும் குழந்தைகள் ஒருவரைச் சார்ந்தே இருப்பார்கள். தங்களுடைய தனித்தன்மையை வெளியே காட்டாமல், பயத்திலேயே வாழ்வார்கள். ஏதாவது தவறு செய்துவிட்டால் திட்டோ அடியோ விழும் என்பதால் தங்களை ஒடுக்கிக்கொண்டே இருப்பார்கள். குறிப்பாக, டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும்போதுதான் குழந்தைகள் சார்ந்திருப்பதை விட்டு தனியாக சிந்திக்க, செயல்பட ஆரம்பிப்பார்கள். அதுபோன்ற சூழலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கும்போது சொந்தமாக சிந்திக்காமல் தனிப்பட்டு முடிவுகள் எடுக்க மாட்டார்கள்.

அதிகமாகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகளும் சுயமாகச் செயல்பட மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் பெற்றோரை சார்ந்திருப்பார்கள். பெண் குழந்தைகள் என்றால் திருமணத்துக்குப் பிறகு, கணவரைச் சார்ந்தே இருப்பார்கள். இதுவும் ஒருவகையான ராங் பேரன்ட்டிங்தான்.

parenting
parenting
ஷிவானி அம்மா ஏன் அப்படி நடந்துகொண்டார்... ஆரி ப்ரோதான் சிறந்த போட்டியாளரா? பிக்பாஸ் – நாள் 86

பெற்றோருக்குப் பொறுமை வேண்டும்!

குழந்தை வளர்ப்பது என்பது சற்று கடினமான காரியம்தான். பெற்றோருக்கு பொறுமை மிகவும் அவசியம். ஒருமுறை சொல்லி குழந்தை கேட்கவில்லை என்றால் திரும்பத் திரும்பப் பொறுமையாக எடுத்துச் சொல்லும்போது நிச்சயம் குழந்தைகள் கேட்டுக்கொள்வார்கள். பெற்றோர் பொறுமையிழப்பதால்தான் குழந்தைகளிடம் கோபமாக எதிரொலிக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத செல்லம் இரண்டுமே ஆபத்துதான்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு