Published:Updated:

``பைலட் ஆகணும்னு வேலையை விட்டாங்க... இப்போ உயிரையே விட்டுட்டாங்க!'' - அனீஸ் ஃபாத்திமாவின் அண்ணன்

"லாக்டெளன் நேரத்துல நின்னுக்கிட்டிருந்த விமானத்தை சரியா பழுதுபார்க்காம எடுத்து ஓட்டினதாலதான் விபத்து நடந்திருக்கலாம்னு தோணுது.''

கனவுகள் நிறைவேற வேண்டுமானால், 'அதை நிறைவேற்றியே தீருவேன்' என்ற பிடிவாதம் கனவு காண்பவருக்கு இருக்க வேண்டும். அந்தப் பிடிவாதமே சம்பந்தப்பட்டவர்களைத் தூங்கவிடாமல், லட்சியத்தை நோக்கி உந்தித் தள்ளிக்கொண்டே இருக்கும். இப்படி கனவுகளைச் சுமந்துகொண்டு, லட்சியங்களின் பின்னால் ஓடிக்கொண்டிருந்தவர்தான், மன்னிக்கவும் பறந்துகொண்டிருந்தவர்தான் அனீஸ் ஃபாத்திமா. இவருடைய கனவு பைலட்டாவது. விமானம் ஓட்டுவதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தவர், எதிர்பாராதவிதமாக விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார்.

Aneesh Fathima
Aneesh Fathima

ஒடிசா மாநிலம் பிர்சாலாவில் அரசின் விமானப் பயிற்சி கல்வி நிறுவனமொன்று இருக்கிறது. இங்குள்ள விமான தளத்தில் சிறிய ரக விமானமொன்றில் அனீஸ் ஃபாத்திமா பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும்போதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது. அனீஸ், சென்னை பல்லாவரத்தையடுத்த பொழிச்சலூரைச் சேர்ந்தவர். வயது 29. அப்பா முகமது கவுஸ் கான் கோரி காவல்துறையில் அதிகாரியாகப் பணிபுரிந்தவர். என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள அனீஸின் சகோதரர் அனூப்பிடம் பேசினோம்.

''விமானத்தோட இன்ஜின்ல ஏதோ பிரச்னைனு போலீஸ் டிபார்ட்மென்ட்ல சொல்றாங்க. லாக்டெளன் நேரத்துல நின்னுக்கிட்டிருந்த விமானத்தைச் சரியா பழுதுபார்க்காம எடுத்து ஓட்டினதாலதான் விபத்து நடந்திருக்கலாம்னு தோணுது. இன்ஜின்ல பவர் டெலிவரி சரியா இல்லைன்னா இப்படி நடக்கிறதுக்கு வாய்ப்பு இருக்குங்க. எனக்கு இதுக்கு மேல இதைப்பத்தி தெளிவா சொல்லத் தெரியல'' என்பவரின் குரல் துக்கத்தில் நடுங்குகிறது.

அனீஸுக்கும் எனக்கும் 7 வயசு வித்தியாசம். ஆனா, அவங்களுக்கு மேரேஜ் பண்ணிட்டுதான் நான் செஞ்சுக்கணும்கிறதுல தீர்மானமா இருந்தேன்.''
அனூப்
``மன அழுத்தங்கள், மௌனங்கள் நிரம்பிய வீடுகள்...'' - மனநல மருத்துவர்களின் லாக்டௌன் ஆலோசனை அனுபவங்கள்!

''அனீஸ் சென்னை கிரசென்ட் காலேஜ்ல பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2013-ல முடிச்சாங்க. படிச்சுக்கிட்டிருந்தப்போ பைலட் டிரெயினிங் எடுக்கணும்னு ரொம்ப பிடிவாதமா இருந்தாங்க. வீட்ல ஆரம்பத்துல தடுத்தோம். ஆனா, அனீஸ் அவங்க கனவுல ஸ்ட்ராங்கா இருந்தாங்க. அப்புறம் அப்பா தவறினதும், கொஞ்ச நாள் படிப்பு, லட்சியம் எல்லாத்தையும் மறந்துட்டு ரொம்ப மன அழுத்தத்துல இருந்தாங்க. நானும் அம்மாவும்தான் அனீஸை கொஞ்சம் கொஞ்சமா அதுல இருந்து மீட்டெடுத்தோம். மனசு தேறி எம்.பி.ஏ படிச்சிட்டே ஒரு ஷிப்பிங் கம்பெனியில அட்மினிஸ்ட்டேட்டரா வேலைபார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சரி, அப்பாவோட இழப்புல இருந்து மீண்டு வந்துட்டாங்கன்னு நம்பி நாங்க கல்யாணப் பேச்செடுத்தோம். ஆனா, அவங்க பிடிகொடுக்கலை. ஒரு கட்டத்துல 'என் கனவை நான் விட்டுக் கொடுக்க முடியாது'ன்னு சொல்லிட்டு, வேலையை ரிசைன் பண்ணிட்டு பைலட் டிரெய்னிங்குக்கு என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதி செலக்ட் ஆனாங்க. ஆரம்பத்துல பைலட் டிரெய்னிங் வேண்டாம்னு சொன்ன நானும் என் அம்மாவும்கூட அனீஸை இந்தத் தடவை உற்சாகப்படுத்த ஆரம்பிச்சோம். கல்யாணத்தைக்கூட அவங்க விருப்பப்படியே பைலட்டான ஆன பிறகு, மெதுவா செஞ்சுக்கலாம்னு முடிவெடுத்தோம். அனீஸுக்கும் எனக்கும் 7 வயசு வித்தியாசம். ஆனா, அவங்களுக்கு மேரேஜ் பண்ணிட்டுதான் நான் செஞ்சுக்கணும்கிறதுல தீர்மானமா இருந்தேன்'' என்றவர் தொடர்ந்தார்.

அனீஸ் ஃபாத்திமா
அனீஸ் ஃபாத்திமா
`லாக்டௌன்... வீடியோ காலில் இறுதிச்சடங்குகள்... ஆறுதலுக்கான வழி!' - மனநல மருத்துவர்

அனீஸ் ஒடிசாவுல ஹாஸ்டல்ல தங்கிப் படிச்சாங்க. போன வருஷம் டிசம்பர் கடைசியில ஊருக்கு வந்தவங்க கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல்னு விடுமுறை நாள்களை நல்லா என்ஜாய் பண்ணாங்க. அதுக்கப்புறம் ஒடிசா போனவங்க ரம்ஜானுக்கு வீட்டுக்கு வரேன்னாங்க. ஆனா, லாக்டெளன்ல மாட்டிக்கிட்டதால அது முடியல. நிலைமை சரியானதும் உடனே வீட்டுக்குக் கிளம்பி வந்திடுவேன்னாங்க. இப்போ நிலைமை சரியானாலும் அவங்க திரும்பி வர முடியாத தூரத்துக்குப் போயிட்டாங்க'' என்பவரின் குரல் கலங்கித் தவிக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு