Published:Updated:

கணவர்கள் நாட்டை காக்கிறார்கள்; மனைவிகள் வீட்டைக் காக்க பயிற்சி அளிக்கிறார்கள்! #AWWA

``எங்கள் கணவர்கள் இந்திய எல்லையில் காவல் காத்தும், போரிட்டும், வியூகங்கள் வகுத்தும் நம் நாட்டைக் காத்து நிற்கிறார்கள். நாங்கள் இங்கே எங்களை ஒருவருக்கொருவர் மேம்படுத்திக்கொள்வதோடு, மற்றப் பெண்களையும் மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.''

கணவர்கள் நாட்டை காக்கிறார்கள்; மனைவிகள் வீட்டைக் காக்க பயிற்சி அளிக்கிறார்கள்! #AWWA

``எங்கள் கணவர்கள் இந்திய எல்லையில் காவல் காத்தும், போரிட்டும், வியூகங்கள் வகுத்தும் நம் நாட்டைக் காத்து நிற்கிறார்கள். நாங்கள் இங்கே எங்களை ஒருவருக்கொருவர் மேம்படுத்திக்கொள்வதோடு, மற்றப் பெண்களையும் மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்.''

Published:Updated:

ஒரு வீட்டின் முதிய உறுப்பினர்கள், இளைய தலைமுறையினருக்கு எப்படி வழிகாட்டுவார்களோ அப்படி வழிகாட்டிக்கொண்டிருக்கிறார்கள் `ஆவா (Army Wives Welfare Association) பெண்கள்.'

அதாவது, ராணுவத்தில் பணியாற்றும் உயர் அதிகாரிகளின் மனைவியர், ராணுவ வீரர்களின் மனைவியருக்கு `சாம்பியன் உமன் வொர்க்‌ஷாப்' என்ற பெயரில் லைஃப்ஸ்டைல் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறார்கள். லைஃப் ஸ்டைல் பயிற்சி முடிந்த ஒரு பேட்சுக்கு, சமீபத்தில் சான்றிதழ் வழங்கினார்கள். சென்னையின் தக்‌ஷின் பாரத்தில் நடந்த இந்த விழாவில் நாமும் கலந்துகொண்டோம்.

சான்றிதழுடன் ஆவா பெண்கள்
சான்றிதழுடன் ஆவா பெண்கள்

விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய ஆவா மண்டலத்தலைவர் ரூபா அருண், ``இந்தச் சங்கம் 1966-ல் போரில் கணவரை இழந்தவர்கள் மற்றும் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதைச் செய்துகொண்டும் இருக்கிறது. தவிர, ராணுவ அதிகாரிகளின் மனைவிகள் ஒன்றிணைந்து ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு லைஃப்ஸ்டைல் பயிற்சி அளித்து வருகிறோம்.

ஆரோக்கியமான உணவு முறை, வாழ்க்கை தொடர்பான விழிப்புணர்வு, தாய் - சேய் உறவு தொடர்பான வழிகாட்டுதல் என்று அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கத் தேவையான அத்தனை பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். எங்கள் கணவர்கள் இந்திய எல்லையில் காவல் காத்தும், போரிட்டும், வியூகங்கள் வகுத்தும் நம் நாட்டைக் காத்து நிற்கிறார்கள். நாங்கள் இங்கே எங்களை ஒருவருக்கொருவர் மேம்படுத்திக் கொள்வதோடு, மற்ற பெண்களையும் மேம்படுத்திக் கொண்டிருக்கிறோம்'' என்றார் உற்சாகமாக.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சான்றிதழ் பெற்றுக்கொண்ட பெண்களில் சிலர் பேசினார்கள்...

``வீட்டு வேலை தவிர என்கிட்ட எந்தத் திறமையுமே இல்லைன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்; இங்க வந்தப்புறம்தான் எனக்குத் தைரியம், தன்னம்பிக்கை கிடைச்சது.''

``கொரோனா நேரத்துல ரெண்டு வருஷம் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தேன். அடுத்து என்ன செய்யறதுன்னே புரியலை. இந்தப் பயிற்சிக்கு வந்தப்புறம் அடுத்து என்ன செய்யணும்கிற ஐடியா கிடைச்சிருக்கு.''

``இந்த வாழ்வியல் பயிற்சி எங்ககிட்ட இருக்கிற தன்னம்பிக்கையை வெளிக்கொண்டு வந்துடுது. தேங்க்யூ ஆவா.''

ஆவா மண்டலத்தலைவர் ரூபா அருண்
ஆவா மண்டலத்தலைவர் ரூபா அருண்

``இந்தப் பயிற்சிக்கு வர்றதுக்கு முன்னாடி நான் பூனையா இருந்தேன். இப்போ நான் என்னை சிங்கமா உணர்றேன்.''

பயிற்சி தொடர்பான பெண்களின் பின்னூட்டங்களுக்கு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் புறப்பட்ட உற்சாக கமென்ட்ஸ் அந்த ஹாலை பாசிட்டிவ் அலைகளால் நிறைத்தன.

வாழ்த்துகள் ஆவா!