Published:Updated:

`ட்விட்டர்ல ஒரு ஃபாலோயர்கூட இல்ல; ஒரே ஓவியம், 50,000 லைக்ஸ்!' - வைரல் காபி ஓவியம் பற்றி வருணா

வருணா ( Abinandhan sundararajan )

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பிரபலங்கள் சிலரும், அந்த காபி ஓவியத்துக்கு லைக்ஸ் தட்டிவிட்டதுடன், வருணாவின் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடர்ந்துள்ளனர். அமைச்சர் லைக் தட்டியது, வருணாவுக்குக் கூடுதல் சர்ப்ரைஸ்.

`ட்விட்டர்ல ஒரு ஃபாலோயர்கூட இல்ல; ஒரே ஓவியம், 50,000 லைக்ஸ்!' - வைரல் காபி ஓவியம் பற்றி வருணா

தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பிரபலங்கள் சிலரும், அந்த காபி ஓவியத்துக்கு லைக்ஸ் தட்டிவிட்டதுடன், வருணாவின் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடர்ந்துள்ளனர். அமைச்சர் லைக் தட்டியது, வருணாவுக்குக் கூடுதல் சர்ப்ரைஸ்.

Published:Updated:
வருணா ( Abinandhan sundararajan )

'டபரா செட்'டில் ஆவி பறக்கும் அந்த ஃபில்டர் காபி, சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பெரும்பாலானோரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியது. ‘சாதாரண காபி புகைப்படம் தானே...’ என்று நினைத்தவர்கள், சில நொடிகளுக்குப் பின், அது கையால் வரையப்பட்ட ஓவியம் என்பதை அறிந்தபோது ஆச்சர்யப்பட்டுப்போனார்கள். பலரையும் வியக்கவைத்த அந்தத் தத்ரூபமான ஓவியத்துக்குச் சொந்தக்காரர், 22 வயதாகும் வருணா.

வைரல் 'ஃபில்டர் காபி' ஓவியம்
வைரல் 'ஃபில்டர் காபி' ஓவியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சமூக செயற்பாட்டாளரும் முற்போக்கு எழுத்தாளருமான கொற்றவையின் மகள், இந்த இளம் ஓவியர் வருணா. முடங்கிக்கிடந்த இவரின் ட்விட்டர் பக்கத்துக்குத் தெம்பூட்டிய இந்த 'காபி' ஓவியம், 58,000-க்கும் அதிகமானோரின் லைக்ஸையும் பெற்றிருக்கிறது. உற்சாகத்துடன் இருக்கும் வருணாவிடம் வாழ்த்துகள் கூறிப் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"என் அப்பாவும் ஓவியர்தான். 'என் மகனோ அல்லது மகளோ எதிர்காலத்துல ஓவியராதான் வரணும்...'னு நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே அவர் கணிச்சிருப்பார்னு நினைக்கிறேன். அதன்படியே, விவரம் தெரியுறத்துக்கு முன்னாடியே என் கையில தூரிகையைக் கொடுத்து, உன் விருப்பம்போல வரைஞ்சு பழகுனு ஊக்கப்படுத்தினார் அவர். சின்ன வயசுல எந்நேரமும் பெயின்டிங்தான் பண்ணிக்கிட்டிருப்பேன். அப்போ பெருசா மத்த ஆக்டிவிட்டீஸ் செஞ்சதா எனக்கு ஞாபகமே இல்லை. இதுல என்ன பியூட்டினா, அப்பாவும் அம்மாவும் எனக்குக் கைப்பிடிச்சு வரையக் கத்துக்கொடுத்ததே இல்லை; பயிற்சி வகுப்புக்கும் அனுப்பலை.

வருணா
வருணா
Abinandhan sundararajan

கிறுக்கலா ஆரம்பிச்சு, விளையாட்டா பழகி, இதை ஏன் செய்யணும், பெயின்டிங்கைச் சரியா பண்றது எப்படி, ரசனையா எப்படி வரையணும்னு ஒவ்வொரு ஸ்டேஜ்லயும் ஒவ்வொரு விஷயத்தையும் நானேதான் கத்துக்கிட்டேன். இன்னும் கத்துக்கிட்டே இருக்கேன்" என்று கலகலப்புடன் கூறும் வருணா, தன் நான்கு வயதிலிருந்து தற்போதுவரை 13 முறை ஓவியக் கண்காட்சியை நடத்தியிருக்கிறார். இதில், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒளிப்பதிவுக்கான படிப்பை முடித்துள்ள வருணா, பல்வேறு விளம்பரப் படங்கள் மற்றும் கார்ப்பரேட் குறும்படங்களில் பணியாற்றியிருக்கிறார். இசை சார்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் டிசைனராக வேலை செய்பவர், 'மய்யம்' என்ற திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
வருணா
வருணா

ஆவி பறக்கும் 'காபி' ஓவிய பின்னணிக் கதையைப் பகிர்ந்தார் வருணா. "என் ஆபீஸ் வேலையிலும் க்ரியேட்டிவிட்டியுடன் கூடிய ஓவியம் வரையுறதுதான் என் ரோல். இதுக்கு நடுவுல, நேரம் கிடைக்கிறப்போல்லாம் பெயின்டிங் பண்ணி, என் இன்ஸ்டாகிராம் பக்கத்துல அதைப் பதிவிடுவேன். இந்த நிலையில, வழக்கமான ஓவியமா இல்லாம, நம் அன்றாட வாழ்க்கையில ரொம்பவே ஒன்றிப்போன சில விஷயங்களை வரைய நினைச்சேன். அதுல உயிரோட்டம் இருக்கணும். பார்க்கிறதுக்கு அது போட்டோஸ் மாதிரிதான் தெரியணும். ஆனா, அதைப் பெரிசுபடுத்திப் பார்க்கும்போதுதான் அது கையால வரையப்பட்ட ஓவியம்னு கண்டுபிடிக்கும்படியா இருக்கணும்னு வித்தியாசமா யோசிச்சேன்.

முதல்ல முட்டை ஒண்ணு உடையுற மாதிரியும், அப்புறமா இட்லி, சாம்பார் டிபன் செட் ஓவியத்தையும் பதிவிட்டேன். அப்புறமா, ஃபில்டர் காபி, ஓணம் ஸ்பெஷல் சாப்பாடு, பிரெட் அண்டு ஜாம்னு மூணு ஆப்ஷன்ஸ் கொடுத்து, இதுல அடுத்து எந்த ஓவியத்தை வரையலாம்னு என் இன்ஸ்டாகிராம் பக்கத்துல கேட்டிருந்தேன். பலரும் ஃபில்டர் காபினு சொன்னாங்க. அதன்படி, அவுட்டர் போர்ஷன்லேருந்து வரைய ஆரம்பிச்சேன். காபி மேலிருக்கிற நுரை பகுதியை வரைய மட்டுமே மெனக்கெடல் அதிகமா தேவைப்பட்டுச்சு. மூணு நாள்கள்ல வரைஞ்சு முடிச்ச அந்த காபி ஓவியத்தை முதல்ல என் இன்ஸ்டாகிராம் பக்கத்துலதான் பதிவிட்டேன். வழக்கத்தைவிட அதிகமான லைக்ஸ் கிடைச்சது.

குழந்தைப் பருவத்தில் வருணா, சூர்யாவுடன்...
குழந்தைப் பருவத்தில் வருணா, சூர்யாவுடன்...

ரொம்ப காலமா முடங்கியிருந்த என் ட்விட்டர் பக்கத்தைச் சமீபத்துலதான் மீட்டிருந்தேன். ஒரு ஃபாலோயர்கூட இல்லாம இருந்த அந்த ட்விட்டர் பக்கத்துல இந்த ஓவியத்தைப் பதிவிட்டேன். ஒரே நாள்ல மூவாயிரம் பேர் என்னைப் பின்தொடர்ந்தாங்க. அடுத்த ஒரே நாள்ல அந்த ஓவியத்துக்குக் கிடைச்ச லைக்ஸ் எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் கடந்திடுச்சு. நிறைய பேர் பாராட்டினாங்க. எதிர்பார்க்காத வகையில இவ்ளோ ரீச் கிடைச்சதுல ரொம்பவே ஹேப்பியானேன்" - தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உட்பட பிரபலங்கள் சிலரும், அந்த காபி ஓவியத்துக்கு லைக்ஸ் தட்டிவிட்டதுடன், வருணாவின் ட்விட்டர் பக்கத்தையும் பின்தொடர்ந்துள்ளனர். அமைச்சர் லைக் தட்டியது, வருணாவுக்குக் கூடுதல் சர்ப்ரைஸ்.

கொற்றவையின் பிறந்தநாள் தினத்தில்தான் வருணாவும் பிறந்திருக்கிறார். அதுகுறித்து கேட்டதும், தன் அம்மாவுடனான 'வாடி போடி' நட்பு வரையிலான சில சுவாரஸ்யங்களையும் சேர்த்தே பகிர்ந்தார் வருணா. “டாக்டர் ரெஃபர் பண்ணியிருந்த தேதிக்கு சில தினங்களுக்கு முன்பே அம்மாவுக்கு லேசா பிரசவ வலி வந்திருக்கு. உடனே ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருக்காங்க. ‘இன்னும் சில தினங்கள் கழிச்சுத்தான் குழந்தை பிறக்கும். நீங்க வீட்டுக்குப் போகலாம்’னு ஆஸ்பத்திரியில சொல்லியிருக்காங்க. ‘எனக்கு வலி உணர்வு இருக்கு. நிச்சயமா என் குழந்தை பிறந்திடும்’னு அம்மா உறுதியா சொல்லியிருக்காங்க.

கொற்றவையுடன் வருணா...
கொற்றவையுடன் வருணா...

அதன்படியே மறுநாள் காலையில நான் பிறந்தேன். ஆகஸ்ட் 15-ம் தேதிதான் அம்மாவின் பிறந்தநாள். அதே தினத்துல நானும் பிறந்தேன். ஒவ்வொரு வருஷமும் எங்க பிறந்தநாள் அன்னிக்கு, காலையில எழுந்ததுமே அம்மாவும் நானும் வாழ்த்துகளைப் பகிர்ந்துப்போம். ஒரே கேக் வாங்கி, அதை ரெண்டு பேரும் ஒண்ணா கட் பண்ணி கொண்டாடுவோம். நான் ஏதாச்சும் பெயின்ட் பண்ணி பிறந்தநாள் கிஃப்ட்டா அம்மாவுக்குக் கொடுப்பேன். இல்லைனா, என் கைப்பட ஏதாச்சும் ஸ்பெஷல் டிஷ் செஞ்சு கொடுப்பேன்.

அம்மா - பொண்ணுங்கிறதைத் தாண்டி, நாங்க ரெண்டு பேரும் குளோஸ் ஃபிரெண்ட்ஸ். அம்மாவை ‘வாடி போடி’னுதான் கூப்பிடுவேன். ‘அம்மாவை ஏன் இப்படி மரியாதையில்லாம கூப்பிடுறே’ன்னு மத்தவங்க கேட்டா, ‘அவளை நான்தான் அப்படிக் கூப்பிடச் சொன்னேன். அதுல என்ன தப்பு?’னு அம்மா பதிலுக்குக் கேட்பாங்க. அம்மா ரொம்ப இளமையா இருப்பாங்க. எங்கள்ல யார் அம்மா, யார் பொண்ணுனு பலரும் கலாய்க்கிறது தமாஷா இருக்கும். உலக நிகழ்வுகளைப் பத்தின பேச்சுக்களோடுதான் எங்க ஒவ்வொருநாள் பொழுதும் விடியும்.

வருணாவின் ஓவியங்கள்...
வருணாவின் ஓவியங்கள்...

நாங்க நிறைய பேசுவோம்; விவாதிப்போம். எங்க ரெண்டு பேரின் சிந்தனையும் ஒரே மாதிரிதான் இருக்கும். சின்ன வயசிலேருந்து ஃபெமினிஸம், மார்க்சியம் கருத்துகளைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். அதனால, என் சொந்த விருப்பு வெறுப்புகள் எல்லாத்துக்கும் வீட்டுல முழு ஆதரவு கிடைக்கும். அம்மா கடவுள் மறுப்பாளர். நான் கடவுள் மறுப்பாளரும் கிடையாது; கடவுள் நம்பிக்கையை ஆதரிக்கிற நபரும் கிடையாது. யாரையும் காயப்படுத்தாம வாழ்ந்தா போதும்கிறது மட்டும்தான் என் கொள்கை" - பக்குவமாகவும் முதிர்ச்சியாகவும் பேசுபவர், இறுதியாக தன் எதிர்கால ஆசையையும் பகிர்ந்தார்.

"ஓவியம்ங்கிறது இம்ப்ரஷனிஸத்துக்கான (impressionism) கருவி. அதனோடு ரியலிசத்தையும் (realism) இணைச்சு படம் வரையணும்ங்கிறதுதான் என் விருப்பம். அதன்படி, ஒவியத்துறை வரலாற்றுல என் பெயர் இடம் பிடிக்கணும்ங்கிறது என் இலக்கு. அதை அடையுற உத்வேகத்துடன் புதுப்புது முயற்சிகளைச் செய்யத் திட்டமிட்டிருக்கேன். அந்த 'காபி' ஓவியம் மாதிரி, தோசை, சாப்பாடு, பிரியாணினு அடுத்தடுத்து பல பிளானிங் வெச்சிருக்கேன்!"

கனவுகளை வசப்படுத்தும் உற்சாகப் புன்னகையுடன் முடித்தார் வருணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism