Published:Updated:

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய சமையல் போட்டி

களைகட்டிய  சமையல் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
களைகட்டிய சமையல் போட்டி

நிகழ்ச்சிக்கு இடையில், “கல்யாணமான புதுசுல எனக்கு சமைக்கவே தெரியாது.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய சமையல் போட்டி

நிகழ்ச்சிக்கு இடையில், “கல்யாணமான புதுசுல எனக்கு சமைக்கவே தெரியாது.

Published:Updated:
களைகட்டிய  சமையல் போட்டி
பிரீமியம் ஸ்டோரி
களைகட்டிய சமையல் போட்டி
வள் விகடன், A1 SKC பசு நெய்யுடன் இணைந்து `பசு நெய்யுடன் சமைங்க... பரிசுகளை அள்ளுங்க!’ என்ற மாபெரும் சமையல் போட்டியை நடத்தி முடித்துள்ளது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 675 வாசகிகள் கலந்துகொண்டனர். வாசகிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தில் A1 SKC பசு நெய்யை வைத்து ஓர் அசத்தலான ரெசிப்பி செய்ய வேண்டும். கொரோனா கால முன்னெச்சரிக்கையாகத் தனிமனித இடைவெளியை மனதில்கொண்டு போட்டி யின் முதல்கட்டத் தேர்வு இணையம் மூலம் நடத்தப்பட்டது.

போட்டியின் முதல் சுற்றில் ரெசிப்பிகளுக் கான செய்முறைகளை அவள் விகடனின் இணைய முகவரிக்கு அனுப்பி வைக்கும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அறிவிப்பு வெளியான மறுநாளே இனிப்பு, காரம், புளிப்பு என அறுசுவைகளிலும் ரெசிப்பிகள் வந்து குவிந்தன. ஒவ்வொன்றையும் படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறியது. மொத்தம் 675 ரெசிப்பிகள். அதிலிருந்து டாப்-15 ரெசிப்பிகளை கண்ணும் கருத்துமாகத் தேர்வு செய்தது அவள் விகடன் ஆசிரியர் குழு. இந்த 15 ரெசிப்பிகள் அடுத்தகட்ட பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு டாப்-10 ரெசிப்பிகள் தேர்வு செய்யப்பட்டன.

மில்லட் முருங்கையிலை லட்டு, குஞ்சாலாடு, நியூட்ரி டிலைட், த்ரீ இன் ஒன் கேக், பனங் கிழங்கு காஜு கத்லி, நிகிடி, தந்தூரி வெஜ் மோமோஸ், கோதுமை குருணை இனிப்பு பொங்கல், பூசணிக்காய் அல்வா, சிறுதானிய பிஸிபேளாபாத் ஆகியவை இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட டாப்-10 ரெசிப்பிகள்.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

சமையல் போட்டியின் இறுதிச்சுற்று 7.2.2021 சென்னையில் உள்ள விகடன் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் முதல்கட்டமாக, இறுதிச்சுற்றுக்குத் தேர்வானவர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே ரெசிப்பிகளை ஜூம் வீடியோ கால் வழியே அவள் விகடன் ஆசிரியர் குழுவின் மேற்பார்வையில் சமைத்தனர். பின்னர், சமைத்த ரெசிப்பிகளை விகடன் அலுவலகத்துக்குக் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர்.

இந்த மெகா சமையல் போட்டியின் நடுவராகப் பிரபல சமையற்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் கலந்துகொண்டார். இறுதிச்சுற்றுக்குத் தேர்வான ஒவ்வொரு ரெசிப்பியையும் டேஸ்ட் செய்த மல்லிகா பத்ரிநாத், அதைச் செய்த வாசகிகளிடம் செய் முறைகளைக் கேட்டறிந்தும், ரெசிப்பி குறித்த தன் கேள்விகளைக் கேட்டும் மதிப்பெண்ணை வழங்கினார்.

நிகழ்ச்சிக்கு இடையில், “கல்யாணமான புதுசுல எனக்கு சமைக்கவே தெரியாது. ஒவ்வொரு சமையலையும் நிறைய முறை சொதப்பிதான், நல்லா செய்யவே கத்துக் கிட்டேன். நீங்கல்லாம் பெயர் வச்சிட்டு சமைப்பீங்க. நான் சமைச்சிட்டுதான் பெயரே வைப்பேன். மைசூர்பாகு செய்யும்போது அது ரொம்ப கெட்டியாகிடுச்சுன்னா, அதையே மிக்ஸியில போட்டு அரைச்சு லட்டு மாதிரி செஞ்சிடுவேன். இது மாதிரி நிறைய ட்ரிக்ஸ் இருக்கு. ஆரம்பத்துல நான் பண்ணின சொதப்பல்கள்ல இருந்து நிறைய கத்துக்கிட்டேன். அதுதான் இன்னிக்கி நான் நல்லா சமைக்கிறதுக்குக் காரணம்’ என்று தன் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் மல்லிகா பத்ரிநாத். வாசகிகளின் ரெசிப்பிகளுக்கு சுவை, மணம் மற்றும் அதைக் காட்சிப்படுத்திய விதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.

A1 SKC பசு நெய்யின் மணம் நிரம்பி வழிந்துகொண்டிருந்த அந்தத் தளத்தில் வாசகிகள் போட்டி முடிவு களுக்காகக் காத்திருந்தனர். முதல் பரிசை தட்டிச் சென்றார் ‘மில்லட் முருங்கையிலை லட்டு’ செய்த சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த ஜெகதா நாராயணசாமி. மில்லட் மாவில் முருங்கையிலை, பசு நெய், இனிப்பு கலந்து செய்யப்பட்டிருந்த லட்டுகள் ருசித்த அனைவரையும் தன் சுவையால் சுண்டியிழுத்தன. இரண்டாம் பரிசை வென்றவர், ‘நிகிடி’ ரெசிப்பியை செய்த சென்னை, நங்கநல்லூரைச் சேர்ந்த ஐஸ்வர்யா. ``என் தோழியோட பாட்டிதான் இந்த ரெசிப்பியைச் செய்ய எனக்கு கத்துக்கொடுத்தார்!” என்றார் ஐஸ்வர்யா. மூன்றாம் பரிசு பெற்றவர் ‘கோதுமைக் குருணை இனிப்பு பொங்கல்’ செய்த சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சரஸ்வதி. ‘பனங்கிழங்கு காஜு கத்லி’ செய்த சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த மஹாலக்ஷ்மி நடுவரிடமிருந்து சிறப்புப் பாராட்டைப் பெற்றார்.

போட்டியில் முதல் பரிசு பெற்றவருக்கு ரூ.5,000, இரண்டாம் பரிசுக்கு ரூ.3,000, மூன்றாம் பரிசுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டன. அத்துடன் A1 SKC பசு நெய் சார்பில் ரூ.1,000 மதிப்பிலான கிஃப்ட் ஹேம்பர்களும் வழங்கப்பட்டன. இறுதிச்சுற்றுக்குத் தேர்வான மற்ற ஏழு பேருக்கு ரூ.500 மதிப்புள்ள கிஃப்ட் ஹேம்பர்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பரிசுகளை நடுவர் மல்லிகா பத்ரிநாத்தும், A1 SKC பசு நெய் நிறுவனத்தின் இயக்குநர் (மார்க்கெட்டிங்) எஸ். வெங்கடேசனும் அவரின் மனைவி கலைவாணி வெங்கடேசனும் இணைந்து வழங்கினர். மேலும், போட்டியில் கலந்துகொண்ட அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் அவள் விகடனின் இ-சர்ட்டிஃபிகேட்டுகள் வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற ரெசிப்பிகள்:

முதல் பரிசு

மில்லட் முருங்கையிலை லட்டு

ஜெகதா நாராயணசாமி, சென்னை-11

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

தேவையானவை: கம்பு மாவு, ராகி மாவு, கோதுமை மாவு - தலா அரை கப், முருங்கையிலை - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - 2 கப், முந்திரி, பாதாம், திராட்சை - 4 டேபிள்ஸ்பூன், பசு நெய் - கால் கப், சர்க்கரை, உப்பு - தலா ஒரு சிட்டிகை.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

செய்முறை: கடாயில் 2 டீஸ்பூன் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பாதாமை வறுத்துக்கொள்ளவும். மீதமுள்ள நெய்யில் முருங்கையிலையுடன் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். மூன்று மாவையும் தனித்தனியாக நெய்விட்டு வறுக்கவும். சிறிதளவு தண்ணீரில் நாட்டுச் சர்க்கரை, உப்பு போட்டுக் கொதிக்க விடவும். அவை கொதித்து, ஆறிய பிறகு வடிகட்டவும். இந்தக் கரைசலை நாம் வறுத்துவைத்திருக்கும் மாவுக்கலவையில் சிறிதளவு ஊற்றி, மூன்றையும் ஒன்றாகச் சேர்த்துக் கிளறவும். இதனுடன் முருங்கையிலை, முந்திரி, திராட்சை, பாதாம் ஆகிய வற்றைக் கலந்து, உருக்கிய நெய்யைச் சிறிது சிறிதாக விட்டு உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான, சத்தான, ‘மில்லட் முருங்கையிலை லட்டு' தயார்!

இரண்டாம் பரிசு

நிகிடி

ஐஸ்வர்யா, சென்னை-61

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

தேவையானவை: வெள்ளரி விதை - 100 கிராம், பூசணி விதை - 100 கிராம், சாரப்பருப்பு - 100 கிராம், முந்திரி - 100 கிராம், பனீர் - 100 கிராம், கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு கிலோ, பசு நெய் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, பால் - அரை லிட்டர்.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

செய்முறை: அரை லிட்டர் பால், கால் லிட்டர் ஆகும் வரை நன்றாகச் சுண்ட காய்ச்சவும். காய்ச்சிய பாலில் வெள்ளரி விதை, சாரப்பருப்பு, பூசணி விதை, கசகசா, பனீர், முந்திரி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்புகளை மிக்ஸியில்போட்டு அரைக்கவும். ஒரு வாணலியில் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கம்பி பதம் வரும்வரை கிளற வேண்டும். இதில் அரைத்த பருப்புகளையும் நெய்யையும் சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கலவை வாணலியில் ஒட்டாமல் வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி பிடித்த வடிவங்களில் வெட்டிக்கொள்ளவும். இதைச் சிறிது நேரம் காற்றில் ஆறவைத்தால் வாயில் போட்டவுடன் கரையும் சுவை மிகுந்த ‘நிகிடி’ தயார்!

மூன்றாம் பரிசு

கோதுமைக் குருணை இனிப்பு பொங்கல்

சரஸ்வதி, சென்னை-106

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

தேவையான பொருள்கள்: கோதுமைக் குருணை- ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், பயத்தம் பருப்பு - கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, பசு நெய் - அரை கப், நெய்யில் வறுத்த முந்திரி - 10.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

செய்முறை: அடுப்பில் வாணலியை வைத்து மிதமான சூட்டில் கோதுமைக் குருணையையும் பயத்தம் பருப்பையும் லேசாக வறுத்து எடுக்கவும். இவற்றுடன் 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 அல்லது 5 விசில் வரும்வரை வேக வைத்து எடுக்கவும். பிறகு, வெல்லத்தைச் சிறிதளவு தண்ணீரில் கரைய வைத்து வடிகட்டவும். ஒரு கனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலை ஊற்றி, லேசாகக் கொதிக்கவைத்து அதனுடன் தயாராக இருக்கும் ஏலக்காய்த்தூள், நெய், கோதுமைக் குருணை, பயத்தம் பருப்பு நான்கையும் சேர்த்து நன்கு கிளறி வேகவைத்து எடுத்து, ‘கோதுமைக் குருணை இனிப்பு பொங்கல்’ மீது வறுத்த முந்திரியைச் சேர்த்துப் பரிமாறவும்.

பசு நெய்யில் சமைத்து பரிசுகளை அள்ளிய வாசகிகள்! - களைகட்டிய  சமையல் போட்டி

இந்தக் கோலாகலமான மெகா சமையல் போட்டியில் ஃபைனலிஸ்ட்டுகள் கலந்துகொண்ட நிகழ்ச்சி யின் லைவ் ஷோ `விகடன்', `அவள் விகடன்' மற்றும் `அவள் கிச்சன் ஃபேஸ் புக்' பக்கங்களில் ஒளிபரப்பப்பட்டது. இந்த QR code-ஐ பயன்படுத்தி நீங்களும் அதைக் கண்டுகளிக்கலாம்.

பரிசு பெற்றவர்களைத் தவிர, இறுதிச் சுற்றுக்குத் தேர்வான ஏழு பேர்

சாந்தி கார்த்திகேயன், சென்னை - 78.

லலிதா ராமசாமி, சென்னை - 20.

வனஜா, சென்னை - 87.

மஹாலக்ஷ்மி, சின்னமனூர்

காயத்ரி விஸ்வநாதன், சென்னை - 70.

பவானி ஆறுமுகம், சென்னை - 37.

நித்திக்ஷா, சேலம்