Published:Updated:

`அம்மாவுக்கு ஒரு கவிதை எழுதுங்கள்... பரிசுகளை அள்ளுங்கள்!' - அவள் விகடனின் ஆன்லைன் கவிதைப்போட்டி

கவிதைப் போட்டி
கவிதைப் போட்டி

அன்பு என்னும் வட்டம் முழுவதும் நிரம்பி களங்கம் இல்லாமல் கைக்கு எட்டும் தூரத்தில் தேயும் நிலாக்களே அம்மாக்கள்.

அம்மாக்களின் உலகம் எப்போது சுயநலமில்லாதது. அன்பு என்னும் வட்டம் முழுவதும் நிரம்பி களங்கம் இல்லாமல் கைக்கு எட்டும் தூரத்தில் தேயும் நிலாக்களே அம்மாக்கள். அம்மாக்களுக்கு எதிர்பார்ப்புகள் இருக்காது. அம்மா தன் குழந்தைகளிடம் சுயமரியாதையை எதிர்பார்ப்பது கிடையாது. சின்னச் சின்ன ஆசைகளையும் விட்டுக்கொடுத்து, குழந்தைகளின் பெரிய கனவுகளுக்கு துணையாய் நிற்பவளே அம்மா.

அம்மா
அம்மா

`அம்மா காபி வேணும்', `அம்மா பசிக்குது' என்று பிள்ளைகள் கேட்கும் நேரத்தில் ஒருநாள் முழுவதும் அடுப்படியில் நின்ற களைப்பைக்கூட முகத்தில் காட்டிக்கொள்ளாமல், அடுத்த நொடி இயந்திரமாய் ஓடுபவள். பிரசவத்தில் உயிர்போகும் வலியிலும்கூட, கண்ணீருடன் குழந்தைக்காகக் காத்துக்கிடந்தவள்.

அம்மாவின் உலகம் அவளுக்கான இயக்கத்தை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகியிருக்கும். அம்மாவின் ஆசைகள் கூட, குழந்தைகளைப் பற்றியதாகவோ, குழந்தைகளுக்கானதாகவோ தான் இருக்கும். குழந்தைகளின் கனவுகளைத் தனதாக்கி சுமந்து நடப்பவள். அம்மாவின் நிழலுக்குக்கூட அன்பை மட்டுமே கொடுக்கத் தெரியும்.

அன்னையர்கள்
அன்னையர்கள்

இதைப் படிக்கும்போதே, உங்களின் மூளை கொசுவத்தி வளையமாகச் சுற்றி அம்மாவின் கைகளைப் பிடித்து நடந்த குழந்தைப் பருவத்துக்கு உங்களை அழைத்துச் சென்றிருக்கும். அதே எண்ண ஓட்டத்தில் அமர்ந்து , `பெல்லா சானிட்டரி நாப்கின்ஸ்' வழங்கும் `அவள் விகடன்' அன்னையர் தின ஆன்லைன் கவிதைப்போட்டியில் கலந்துகொண்டு பரிசை வெல்லுங்கள். போட்டியின் நடுவர் நாடாளுமன்ற உறுப்பினரும் கவிஞருமான தமிழச்சி தங்கபாண்டியன்.

முதல் பரிசு ரூ. 3,000, இரண்டாம் பரிசு ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000. ஐந்து நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ. 500 வழங்கப்படும். வெற்றி பெறும் அனைவருக்கும் பெல்லா சானிட்டரி நாப்கின்ஸ் வழங்கும் ஒரு கிஃப்ட் ஹேம்பர் வழங்கப்படும்.

கவிதைப் போட்டி
கவிதைப் போட்டி

போட்டி விதிமுறைகள் :

* அம்மாவை பற்றி 200 வார்த்தைகளுக்குள் தமிழில் கவிதை எழுதி அனுப்ப வேண்டும்.
* கவிதை வந்து சேர வேண்டிய கடைசி நாள் மே 14 (வெள்ளிக்கிழமை).
* இறுதிப்போட்டி மே 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும்.
* நடுவர் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அவள் விகடன் ஆசிரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டியில் பங்கேற்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
https://bit.ly/3bkLTku

அடுத்த கட்டுரைக்கு