Published:Updated:

சுஜா வருணி பங்கேற்கும் `அம்மாவாகிய நான்!' - அவள் விகடனின் சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி #WowMom

அம்மாவாகிய நான்...
அம்மாவாகிய நான்...

மே 15-ம் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும். கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த Fun Show கட்டணமில்லா வெபினாராக நடைபெறுகிறது.

அம்மா என்பவள் அன்பால் மட்டுமே நிறைந்தவள். அன்பை மட்டுமே காட்டத்தெரிந்தவள். தேவதை வெள்ளை ஆடை அணிந்திருக்கும் என்ற கருத்தை வெறும் கதை என உணரச் செய்தவர்கள் அம்மாக்களே. அன்னையரின் அன்பை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

அன்னையர் தினம்...
அன்னையர் தினம்...

அன்னையர் தினத்தை முன்னிட்டு அவள் விகடன் சார்பில் இஃன்போசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி பங்கேற்ற சிறப்புரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து தமிழச்சி தங்கபாண்டியன் நடுவராகப் பங்கேற்கும் அன்னையர் தின ஆன்லைன் கவிதைப் போட்டியின் இறுதிச் சுற்று மே 16-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.

அந்த வரிசையில் அவள் விகடன் மற்றும் பெல்லா சானிட்டரி நாப்கின் இணைந்து, நடிகை சுஜா வருணி, அவரின் கணவர் சிவக்குமாருடன் பங்கேற்கும் `அம்மாவாகிய நான்...' என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சுஜா வருணி
சுஜா வருணி

நிகழ்ச்சியில் சிங்கிள் மதராக இருந்து சுஜாவை ஆளாக்கிய அவரின் அம்மாவைப் பற்றியும், தான் அம்மாவாக இருக்கும் அனுபவம் பற்றியும் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார். தாய்மை தொடர்பாக வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நேரடியாகப் பதில் அளிக்கிறார்.

அத்துடன் கணவன், மனைவி இருவரும் பங்கேற்கும் ஒரு சுவாரஸ்யமான கேம் ஷோ ஒன்றும் நிகழ்ச்சியில் உள்ளது. கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த Fun Show கட்டணமில்லா வெபினாராக நடைபெறும்.

அம்மாவாகிய நான்...
அம்மாவாகிய நான்...

மே 15-ம் தேதி ( சனிக்கிழமை ) மாலை 5 மணி முதல் 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.

வெபினாரில் கலந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: https://bit.ly/3vZf4RZ

அடுத்த கட்டுரைக்கு