அன்னையர் தினத்தைக் கொண்டாடும் வகையில் Poorvika Appliances வழங்கும் அவள் விகடனின் `அம்மாவும் நானும்!' - அன்னையர் தின கொண்டாட்டம் சென்னையில் மே 8-ம் தேதி நடைபெறுகிறது. சென்னை, அண்ணாநகர் வெஸ்ட் எக்ஸ்டென்ஷனில் அமைந்துள்ள KAY-EM ராயல் மஹாலில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்ச்சி நடைபெறும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், மாநில சட்ட கமிஷனின் உறுப்பினருமான விமலா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பங்கேற்கும் அன்னையர் தின சிறப்புரை இடம்பெறும். பிரபல சமையல்கலை நிபுணர் மல்லிகா பத்ரிநாத் கலந்துகொண்டு சமையல் போட்டியில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்.
தமிழும் சரஸ்வதியும் சீரியல் கதாநாயகன் நடிகர் தீபக் கலந்துகொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க உள்ளார். இதுதவிர, Mentalist கோபால் பங்கேற்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல மேஜிக்குகளை நிகழ்த்தவிருக்கிறார்.

முன்பதிவு!
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் நேரடியாகப் பெயரைப் பதிவுசெய்து நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். முன்பதிவு நடைமுறைகளில் பங்கேற்பதற்கு வசதியாக நிகழ்ச்சி தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பே அரங்கத்துக்கு வந்துவிட வேண்டும். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் ஆண்களுக்கு அனுமதி இல்லை. 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளுக்கு அனுமதி உண்டு.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சமையல் போட்டி!
சமையல் போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் கட்டாயம் ஆன்லைனில் பெயரைப் பதிவுசெய்து, அதற்கான விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். சமையல் போட்டிக்கு பெயரைப் பதிவு செய்பவர்கள் ஒரே ஒரு ரெசிபியை மட்டும் ஆன்லைனில் அனுப்ப வேண்டும். ரெசிபியின் பெயர், தேவையான பொருள்கள், அவற்றின் அளவு, செய்முறை ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சிறந்த ரெசிபிக்கள் அவள் விகடன் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் சமையல் போட்டியில் பங்கேற்க முடியும்.

முழுக்க முழுக்க பெண்கள் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியில் அறிவுக்கும் திறமைக்கும் சாவல்விடும் On the spot போட்டிகள், அம்மா - பிள்ளைகள் இணைந்து பங்கேற்கும் Fun Games, சமையல் போட்டி, குழந்தைகளுக்கான ஓவியப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய விஷயங்கள் இடம்பெறவுள்ளன. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஆச்சர்யப் பரிசுகள் காத்திருக்கின்றன. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு உண்டு. நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க மற்றும் சமையல் போட்டிக்குப் பெயர் பதிவு செய்ய இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.