
- லத்திகா சுகுமார்
மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, அவள் விகடன் பற்றிய தங்கள் கருத்தை ஒரே வரியில் ஸ்லோகனாக எழுதி அதற்கென கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்துக்குள் எழுதவும். சரியான தீர்வுடன், சிறந்த ஸ்லோகன் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

புல்லாங்குழல் யாருக்கு?
மாலதி, ரேவதி, சுமதி ஆகிய மூன்று சிறுமிகளுக்கும் ஒரே வயது. மாலதியின் குடும்பம் வசதியானது. நடுத்தரக் குடும்பம் ரேவதியுடையது. சுமதியின் குடும்பம் ஏழ்மையானது.
மூங்கிலை வெட்டி, ஓர் அழகான புல்லாங்குழலைச் செய்கிறாள் ரேவதி. அவளுக்கோ அதை வாசிக்கத் தெரியாது. சுமதிக்கும் புல்லாங்குழல் வாசிக்கத் தெரியாது. மாலதிக்குப் புல்லாங்குழல் வாசிக்க நன்றாகத் தெரியும்.
அழகிய புல்லாங்குழலைத் தனக்குத் தரும்படி கேட்கிறாள் மாலதி. தான் இதுவரை எந்த விளையாட்டுப் பொருளையும் விளையாடியதில்லை. இதை யாவது தனக்குத் தரும்படி சொல்கிறாள் சுமதி. வாசிக்கத் தெரியாவிட்டாலும் இந்த அழகிய புல்லாங்குழல் தனக்கே வேண்டும் என்கிறாள் ரேவதி.
இவர்கள் மூவரில் யாருக்குப் புல்லாங்குழலை வழங்குவீர்கள்? நன்றாக யோசித்து முடிவெடுங்கள். உங்கள் குடும்பத்தினரிடமும் இதைப் பற்றிப் பேசுங்கள். இறுதியில் யாருக்கு வழங்க முடிவு எடுத்தீர்களோ, அதற்கான காரணங்களையும் கூறுங்கள்!

புதிர்ப்போட்டி - 4 முடிவுகள்
ராதா என்ன செய்ய வேண்டும்... விடை எண் 5 - சரியான தீர்வு.
`அவன் தன்னிடம் வந்து பேச முயற்சி செய்யாததால், அவனிடமிருந்து ஆபத்து இல்லை. கேஷுவல் லேபர் என்பதால் விரைவிலேயே அவன் பணி முடியப் போகிறது. அவன் குடும்பம் வசதி இல்லை என்பதால், அடுத்த வேலைக்கு அவன் போக வேண்டியது அவசியம். இந்த விஷயங்களை அறிந்த ராதா, அவனை ‘ஜஸ்ட் லைக் தட்’ புறக்கணித்தாள். அவள் நினைத்தது போலவே சில நாள்கள் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தவன் ஒருநாள் வருவதை நிறுத்திக்கொண்டான்' - மனநல மருத்துவர்கள் சொல்வது இந்தத் தீர்வுதான்.
500 பரிசு பெறும் 10 வாசகிகள்
1. கே.சந்திரபிரபா, உளுந்தூர்பேட்டை.
60-க்கும் பிறகும் வாழ்க்கை உண்டு என்பதை உணர்த்திய
23 வயது மகள் அவள்.
2. உஷா சங்கரன், சென்னை-78
இதழில் இளமையும், இணைப்பில் அனுபவமும் கொண்டவள் அவள்.
3. ஜபின்பானு, திருச்சி-12
பெண்களின் புதையல்; பெருமைக்கான விடியல்.
4. எல்.ஆன்ஸிசிப்போரா, கோவை-27
அவள் – ‘சுட்டு’ப்பெயராயினும் மகுடம் ‘சூட்டும்’ பெயராக விளங்குபவள்.
5. ஆர்.ராஜேஸ்வரி, முஷ்ணம்.
என் குடும்பத்துக்கு மட்டுமல்ல; அனைத்து குடும்பங்களின் உற்ற தோழி அவள்.
6. ரா.ச.சண்முகப்பிரியா, திருப்பூர்
அவளுக்கென்று ஒரு மணம், அது மனம் நிறைந்த நறுமணம்.
7. ஆ.பாரதி, அழகர்கோவில்
அன்பையும் அறிவையும் திறக்கும் திறவுகோல் – அவள்.
8. க.காளியம்மாள், தேவகோட்டை
இல்லங்களில் அனைவர் உள்ளங்களில் வளமான வாழ்க்கைக்கு வித்திடுபவள்.
9. ச.சரண்யா, ஈரோடு-1
அவள், என் இல்லத்துக்குள் ஒருத்தி... என் மனதுக்குள் உற்ற தோழி.
10. நளினி ராமச்சந்திரன், கோவை-42
தலைமுறையையும் தாண்டி பாதுகாக்கப்பட வேண்டியவள் ‘ஆல் இன் ஒன்’ அவள்.