மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். கூடவே, இந்த இதழில் வெளியாகியிருக்கும் கட்டுரைகளில் உங்களுக்குப் பிடித்த மூன்று கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து 1, 2, 3 என்று வரிசைப்படுத்துங்கள். 1, 2, 3 இடங்களைக் கொடுத்ததற்கான காரணங்களை ஓரிரு வரிகளில் எழுதுங்கள்.

சரியான விடையுடன் சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

பணம் போடும் ரோசி, பணம் எடுக்கும் ரேஷ்மா!

மேரி, விக்டர் தம்பதிக்கு ரோசி, ரேஷ்மா என இரு பெண் குழந்தைகள். இருவரின் பிறந்தநாள்களையும் சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம். அன்று ரோசியின் 10-வது பிறந்தநாள் என்பதால், மிகச் சிறப்பான விழாவை மேரியும் விக்டரும் ஏற்பாடு செய்திருந்தனர். மாலை விருந்துக்கு உறவினர்கள், ரோசியின் நண்பர்கள் என்று எல்லோரும் குழுமியிருந்தனர். அழகான தாள்களில் சுற்றப்பட்ட பரிசுப் பொருள்களைக் கொடுத்துவிட்டு, விருந்துண்டு எல்லோரும் கிளம்பினர்.

களைப்பாக இருந்தாலும் ரோசியும் ரேஷ்மாவும் பரிசுப் பொருள் களை உடனே பிரித்துப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்கள். அரை மணி நேரத்தில் அத்தனை பரிசுகளையும் வெளியில் எடுத்துவிட்டார்கள். அவற்றில் ரோசியைக் கவர்ந்தது அழகிய பன்றி வடிவ உண்டியல்.

அன்று பெரியவர்கள் கொடுத்த 250 ரூபாய் கையில் இருந்தது. உடனே உண்டியலுக்குள் அந்தப் பணத்தைப் போட்டு வைத்தாள் ரோசி. அன்று முதல் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் முதல் வேலையாக உண்டியலை எடுப்பாள் ரோசி. 250 ரூபாயைப் போடுவாள். ரோசியின் தங்கை ரேஷ்மா, ஒவ்வொரு வருடமும் தன் பிறந்தநாள் அன்று ரோசியின் உண்டியலிலிருந்து 50 ரூபாயை தன் பிறந்தநாள் பரிசாக எடுத்துக்கொள்வாள்.

வருடங்கள் சென்றன. ரோசியும் 250 ரூபாய் போடுவதை விடவில்லை. ரேஷ்மாவும் 50 ரூபாய் எடுப்பதை நிறுத்தவில்லை. ரோசிக்குத் திடீரென்று உடல்நிலை மோசமானது. 50-வது பிறந்த நாளுக்கு சில தினங்கள் முன்னதாகவே இறந்து போனார். அந்த வருடம் தன்னுடைய பிறந்தநாள் அன்று, ரோசியின் உண்டியலை எடுத்து உடைத்தார் ரேஷ்மா. அதில் 500 ரூபாய் மட்டுமே இருந்தது. எப்படி?

புதிர்ப்போட்டி - 5 முடிவுகள்

பேனாவை எடுத்தவர் யார்?

விடை: பேனாவை எடுத்தவர் நிர்மலா. ஸ்விட்சர்லாந்து நாட்டின் கொடி தலைகீழாக இருந்தாலும் நேராக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதனால் நிர்மலா, `இந்தக் கொடிகளை நேராக வைத்துக்கொண்டிருந்தேன்' என்று சமாளிப்பாகச் சொன்னதை வைத்து, எடுத்தவரைக் கண்டுபிடித்துவிட்டார் மாலா டீச்சர்!

ரூ.500 பரிசு பெறும் 10 வாசகிகள்

1. என்.ரம்யா, பெங்களூரு-40

பக்கத்துக்குப் பக்கம் பயனுள்ள தகவல்களுடன் என்னுடைய பக்கபலம் அவள்.

2. க.ரம்யா, கயத்தாறு

வெற்றி என்னும் மைல்கல்லை எளிதில் அடையச் செய்யும் கருவி, அவள்.

3. சுலைஹா பேகம், திருப்பூர்.

AVAL... அது வேற LEVEL இதழ்

4. ம.கவிதா, ஓசூர்

அவள்... மகளிருக்கான பல்கலைக்கழகம்.

5. எம்.ராஜசுதா, தாராபுரம்

மங்கையரின் மனத்திருடன், அதுவே அவள் விகடன்.

6. எம்.ஜெயந்தி முத்துக்குமரசாமி, திருச்சி-18

சாதித்தவர்களைக் காட்டி, சாதிக்கத் தூண்டும் சாதுர்யம் மிக்கவள்.

7. வி.பஞ்சகல்யாணி, தஞ்சாவூர்

தாய் வடிவில் ஒரு தோழி.

8. க.ஷாமிலி, சென்னை-110

பெண்களின் சந்தேகங்களைத் தீர்க்கும் முழுமை யான கைடு.

9. த.சா.பூமகன், ராணிப்பேட்டை

தாயாக, மகளாக, தோழியாக என்னைச் சிறந்த வளாக்குகிறவள்.

10. லக்ஷ்மிவாசன், சென்னை-33

பெண்களின் ரசனை அறிந்து பல்சுவை விருந் தளிக்கும் அட்சய பாத்திரம்.