Published:Updated:

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 8: பரிசு ரூ.5,000

புதிர்ப் போட்டி கொண்டாட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
புதிர்ப் போட்டி கொண்டாட்டம்

- லத்திகா சுகுமார்

மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்ட இருக்கின்றன. அந்த வரிசையில் இதோ... இன்னொரு போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், லாக்டௌன் நமக்கு நிறைய நேரத்தை மட்டுமல்ல; பாடங்களையும் தந்தது. அப்படி நீங்கள் கற்றுக்கொண்ட லாக்டௌன் பாடங்கள் பற்றி ‘நச்’சென இரண்டே வரிகளில் சொல்லுங்கள். சரியான விடையுடன் லாக்டௌன் பற்றிய நச் வரிகளையும் எழுதும் 10 பேருக்கு தலா 500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.

1. அவள் ஓர் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறாள். தீவிரமாக முயற்சி செய்து, ரேஸில் இரண்டாவதாக ஓடிக்கொண்டிருப்பவரைத் தாண்டி விட்டாள். இப்போது அவள் எந்த இடத்தில் இருப்பாள்?

2. அடுத்த ரேஸில் கடைசியாக ஓடிக்கொண்டிருக்கும் நபரை அவள் முந்தி விடுகிறாள். இப்போது அவள் எந்த இடத்தில் இருப்பாள்?

அவள் விகடன் புதிர்ப் போட்டி கொண்டாட்டம்  - 8: பரிசு ரூ.5,000

கடைசித் தேதி: 16.3.2021

அனுப்ப வேண்டிய முகவரி:

அவள் விகடன், புதிர்ப் போட்டி - 7, 757, அண்ணா சாலை, சென்னை - 600 002.

மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com

புதிர்ப்போட்டி - 6 முடிவுகள்

புல்லாங்குழல் யாருக்கு? சரியான பதில்...

புல்லாங்குழலைச் செய்த ரேவதி, இதுவரை எந்த விளையாட்டுப் பொருளையும் அனுபவிக்காத சுமதி, புல்லாங்குழலை வாசிக்கத் தெரிந்த மாலதி... யாருக்கு அந்தப் புல்லாங்குழல் போய்ச் சேர வேண்டும்? இதுதான் 16.2.2021 இதழில் நாம் அளித்திருந்த புதிர்.

பொருளாதார வல்லுநர் அமர்த்யா சென்னின் புகழ்பெற்ற புதிர் இது. நீங்கள் யாருக்குப் புல்லாங்குழலை வழங்கினாலும் அதற்கென்று ஒரு நியாயம் இருக்கவே செய்யும். அதை யாராலும் மறுக்கவே முடியாது.

வாசிக்கத் தெரியாத ரேவதியிடமும் சுமதியிடமும் புல்லாங்குழல் இருப்பதைவிட, வாசிக்கத் தெரிந்த மாலதியிடம் புல்லாங்குழலைக் கொடுத்தால், பயன்படும் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் சரியே.

வாழ்க்கையில் ஒரு விளையாட்டுப் பொருளைக்கூட வாங்க வசதியில்லாத சுமதி, புல்லாங்குழல் மீது ஆசைப்பட்டாள். அந்தக் குழந்தைக்கும் ஒரு சந்தோஷம் கிடைக்கட்டும் என்று நீங்கள் நினைத்துக் கொடுத்தால், அதுவும் சரியே.

வாசிக்கத் தெரியவில்லை என்றாலும் கஷ்டப்பட்டு அந்தப் புல்லாங்குழலைச் செய்தவள் ரேவதி. எனவே அவளுக்கே அந்தப் புல்லாங்குழலை வழங்குவதுதான் சரி என்று நீங்கள் நினைத்தால், அதுவும் சரியே.

மாலதி, ரேவதி, சுமதி ஆகிய மூவரில் யாரிடம் புல்லாங்குழலைக் கொடுத்தாலும் அதற்கென்று ஒரு நியாயம் இருக்கும் என்று ஏற்கெனவே சொல்லிவிட்டோம். யாரைத் தேர்ந்தெடுத்தாலும் பாராட்டுகள். ஆனால், அதிகபட்ச நியாயம் என்று ஒன்று இருக்கும் அல்லவா?

அது, ரேவதியிடம் புல்லாங்குழலைக் கொடுப்பதுதான். ஏனென்றால், மாலதியிடமோ, சுமதியிடமோ அந்தப் புல்லாங்குழலைப் பெறுவதற்கான தார்மிகக் காரணங்களே இருக்கின்றன. ஆனால், ’உழைப்பு’ என்ற ஒற்றைக் காரணம் ரேவதியிடம்தான் இருக்கிறது. அதனால் புல்லாங்குழலை வைத்துக்கொள்ள ரேவதியே சரியானவள்!

500 பரிசு பெறும் 10 வாசகிகள்

1. அனுராதா மணவாளன், துடியலூர், கோவை

அலுவலகம், வீடு, குடும்பம் என்று சுழலும் எனக்கு அவள் அருமையான ஆறுதல்.

2. எஸ்.ஹெச், ராஷிதா ஃபர்ஹத்,திருநெல்வேலி.

என் அவளே... என்னவளே... உன்னுள் என் இதயத்தைத் தொலைத்து விட்டேன்.

3. சுப்புலட்சுமி சந்திரமெளலி, சென்னை-91

அவள் என்றால்... நானும் அவளும்!

4. பா.செளமியா, வந்தவாசி

அவள்.... என் எண்ணங்களின் வடிகால்.

5. ஆர். தர்ஷினி, கோவை-6

நான் - அம்மா மற்றும் அவள்... இதுவே எங்கள் குடும்பம்.

6. விஜயலக்ஷ்மி, மதுரை-9

அவள்.... என்றும் என்னவள்....பெண் களின் நலனிலும் முன்னேற்றத்திலும் உடன் நிற்பவள்.

7. ஜி.ஷோபனா, சென்னை-53

அவள் விகடனின் கருத்துகள்... என் முன்னேற்றத்துக்கான வெற்றிப்படிகள்.

8. பி. ஜீவரேகா, சென்னை-34

பெண்களின் தோட்டத்தில் மாதமிருமுறை மலர்பவள் அவள்.

9. இரா.ஜயலட்சுமி, சென்னை 125

தசாவதாரத்தில் ராம அவதாரம் போன்றது பத்திரிகை உலகில் அவளின் அவதாரம்.

10. கே.ஆர். சாந்தி, மதுரை-1

சிப்பிக்குள் முத்து... என் மனதுக்குள் அவள் சொத்து.