என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
சமையல்
Published:Updated:

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின் பியூட்டி டிப்ஸ்

பியூட்டி டிப்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பியூட்டி டிப்ஸ்

#Lifestyle

ஏ.எஸ்.

``உலகத்திலேயே சரும அழகுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்கள் கொரிய பெண்கள். அரிசி, கடல்பாசி, கிரீன் டீ போன்ற எளிமையான சமையலறைப் பொருள்கள்தான் அவர்களது அழகின் ரகசியம்.
ரீட்டு குணா
ரீட்டு குணா

இவற்றைத் தவிர தென்கொரியாவிலிருக்கிற ஜேஜூ தீவின் எரிமலை மண்ணும் நத்தை சுரக்கும் நீரும் கொரிய பெண்களின் ஸ்பெஷல் அழகுக் குறிப்புகள்’’ என்கிற அழகுக்கலை நிபுணர் ரீட்டு குணா, கடந்த 10 வருடங்களாகக் கொரிய மக்களின் லைஃப்ஸ்டைல் மற்றும் அழகுக் குறிப்புகள் பற்றி ரிசர்ச் செய்து வருகிறார். வீட்டிலேயே செய்து கொள்ளக்கூடிய கொரிய அழகுக் குறிப்புகள் பற்றிச் சொல்லித் தருகிறார் இங்கே.

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின்  பியூட்டி டிப்ஸ்

நிறம் கூட்டும் அரிசி பேக்!

பாலிஷ் செய்யாத அரை கப் அரிசியை 20 நிமிடங்கள் ஊறவைத்து வேக வைக்கவும். வெந்த அரிசியை, வேகவைத்த நீருடனே சேர்த்து அரைக்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும். முகத்தைக் கழுவிவிட்டு, தயாராக இருக்கிற அரிசி பேக்கை முகத்தில் அப்ளை செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகத்தில் இருக்கிற அழுக்கும் கிருமிகளும் நீங்கும்.

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின்  பியூட்டி டிப்ஸ்

முகத்துவாரங்களை மூடும் அரிசி வாட்டர்!

பாலிஷ் செய்யாத இரண்டு டீஸ்பூன் அரிசியை நீரில் கழுவி, அதை ஒரு கப் நீரில் 20 நிமிடங்கள் ஊற விடவும். இந்தத் தண்ணீரால் தினமும் முகம் கழுவினால், முகத்திலிருக்கிற துவாரங்கள் மூடி சருமம் இறுக்கமாகும். வியர்க்குரு மறையும். சருமம் பளிச்சிடும். இந்த நீரை ஃபிரெஷ்ஷாகப் பயன்படுத்தினால்தான் பலன் கிடைக்கும். ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது.

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின்  பியூட்டி டிப்ஸ்

கரும்புள்ளிகளை நீக்கும் அரிசி ஸ்கிரப்!

பாலிஷ் செய்யாத இரண்டு டீஸ்பூன் அரிசியை ரவைபோல அரைத்து, தண்ணீர்விட்டு பேஸ்ட் போல குழைத்துக்கொள்ளவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, பிறகு ஆள்காட்டி விரலால் வட்டமாகத் தேய்த்துக் கழுவவும். இப்படிச் செய்தால் சருமத்தின் இறந்த செல்கள் உதிர்வதோடு, கரும்புள்ளிகள் மறையும்.

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின்  பியூட்டி டிப்ஸ்

ஆன்டி ஏஜிங் பச்சை தேயிலை!

ரண்டு டீஸ்பூன் பச்சை தேயிலைத்தூளை இரண்டு டீஸ்பூன் நீரில் கலந்து ஐஸ் டிரேயில் ஊற்றி வையுங்கள். இந்த ஐஸ்கியூபை முகத்தில் தடவி வந்தால் முகத்திலிருக்கிற கட்டிகள், சிவப்புத் திட்டுகள் மறையும். முகப்பரு குறையும். சருமம் முதிர்ச்சியடைவது தள்ளிப்போகும்.

பேக் முதல் டோனர் வரை... அரிசியில் இருக்கு அழகு! - கொரிய பெண்களின்  பியூட்டி டிப்ஸ்

சுருக்கங்கள் போக்கும் கடல்பாசி பேக்!

தேவையான அளவுக்கு கடல் பாசித்தூளை நீருடன் கெட்டியாகக் கலக்கவும். இதை முகம் மற்றும் கழுத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இதனால் முகத்திலும் கழுத் திலும் இருக்கிற கோடுகள், சுருக்கங்கள் குறைவதோடு சருமத்தின் ஈரப்பதமும் அதிகரிக்கும். இதிலிருக்கிற வைட்டமின் சி, கொலாஜென் உற்பத்தியைத் தூண்டுவதால், சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, இளமையாக ஜொலிக்கும் முகம்.