Published:Updated:

புடவைக்கு பெல்ட்... இதுதான் இப்போ டிரெண்ட்!

#Lifestyle
பிரீமியம் ஸ்டோரி
News
#Lifestyle

#Lifestyle

ஜீன்ஸுக்கு பெல்ட் போட்டுப் பார்த்திருப்பீங்க... ஸ்கர்ட்டுக்கு பெல்ட் அணிந்து பார்த்திருப்பீங்க... வேட்டிக்கு பெல்ட் போட்டவங்களைக்கூடப் பார்த்திருப்பீங்க... சேலைக்கு பெல்ட் போட்டுப் பார்த்திருக்கீங்களா? தெரிஞ்சுக்கிட்டா நீங்கதான் டிரெண்டிங் தமிழச்சி. புடவைக்கு மேல் பெல்ட் அணிவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட். எந்தப் புடவைக்கு எந்த மாதிரி பெல்ட் அணியலாம், எப்படிப்பட்ட ஆபரணங்களை மேட்ச் செய்யலாம்? விளக்குகிறார் ஃபேஷன் டிசைனர் இளவஞ்சி. நம்முடைய பாரம்பர்யமான ஒட்டியாணம் அணிந்துகொள்ளும் கான்செப்ட்தான் தற்போது பெல்ட்டாக மாறியுள்ளது. ஒட்டியாணம் டிரெடிஷனல் லுக் தரும். ஆனால், பெல்ட் அணியும்போது போல்டு லுக் கிடைக்கும். ஒல்லியானவர்கள், உடல் பருமனானவர்கள் என யார் வேண்டுமானலும் புடவையோடு பெல்ட் அணியலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
புடவைக்கு பெல்ட்... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஃபேப்ரிக் பெல்ட்

புடவை அல்லது பிளவுஸின் நிறம் மற்றும் துணியிலேயே வடிவமைக்கப்படுவது ஃபேப்ரிக் பெல்ட். இதை டிரெடிஷனல், டிரெண்டி, கேஷுவல் லுக் என எல்லா ஸ்டைலுக்கும் மேட்ச் செய்யலாம். டிரெடிஷனலான பட்டுப்புடவைகள் அணியும்போது பெல்ட்டில் ஜர்தோஸி அல்லது எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்துகொள்ளலாம். டிசைனர் புடவைக்கு, புடவையின் நிறத்திலேயே ஸ்டோன் அல்லது குந்தன் வேலைப்பாடுகள் செய்த பெல்ட் அணியலாம்.

மெட்டாலிக் பெல்ட்

பார்ட்டி மற்றும் மாலைநேர நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது டிசைனர் சேலை மற்றும் டிரெண்டி பிளவுஸுடன் மெட்டாலிக் பெல்ட் அணிந்தால் பொருத்தமாக இருக்கும். இவை பிங்க், பிரவுன், சில்வர், காப்பர், கோல்டன் நிறங்களில் கிடைக்கும். க்ளோஸ், போட் நெக் பிளவுஸ்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புடவைக்கு பெல்ட்... இதுதான் இப்போ டிரெண்ட்!

ஜாக்கெட் வித் பெல்ட்

புரொஃபஷனல் லுக் பிரியைகள் உங்கள் பிளவுஸை ஓவர் கோட் போன்று வடிவமைத்து அதற்கு மேட்சிங்காக பெல்ட் அணிந்து கொள்ளலாம். ப்ளேசர் அல்லது ஓவர் லே அணிந்து பெல்ட் அணியும் போது இண்டோ வெஸ்டர்ன் லுக் கிடைக்கும். பிளவுஸை இடுப்பு வரை டிசைன் செய்து ரஃபில் வைத்து தைத்தும் பெல்ட்டுடன் மேட்ச் செய்து கொள்ளலாம். தனியாக பெல்ட் அணிய விருப்பமில்லை எனில் பிளவுஸ் துணியிலேயே தைத்து அணியலாம்.

புடவைக்கு பெல்ட்... இதுதான் இப்போ டிரெண்ட்!

லெதர் பெல்ட்

லெதர் பெல்ட்டை காட்டன், கிரேப் சில்க், என எந்தப் புடவைக்கும் மேட்ச் செய்யலாம். கறுப்பு, பிரவுன் நிற பெல்ட்டுகளை எல்லா நிற புடவைகளுக்கும் அணியலாம். லெதர் பெல்ட் அணியும்போது, அதிகப்படியான ஆபரணங்கள் அணிவதைத் தவிர்க்கவும். பெல்ட்டின் நிறத்துக்கேற்ற ஹேண்ட் பேக் பயன்படுத்தலாம். லெதர் பெல்டு அணியும் போது தோத்தி ஸ்டைல், ஷோல்டர் ஸ்டைல், என வித்தியாசமான முறையில் சேலை உடுத்தலாம்.

டிப்ஸ்

கூடுமானவரை புடவையின் நிறத்திலேயே பெல்ட்டைத் தேர்வு செய்யாதீர்கள்.

பெல்ட் அணிந்து புடவை கட்டும்போது வயிற்றுப் பகுதியில் பெல்ட் அணியாமல் மார்புப் பகுதிக்குச் சற்று கீழ் இருப்பது போன்று அணிய வேண்டும்.

ஹை நெக், போட் நெக் என வித்தியாசமான டிசைன்களில் பிளவுஸ் அணிந்தால் பெல்ட்டின் அழகு தனித்துத் தெரியும்.

பருமனான பெண்கள் அகலமான பெல்ட் அணியும்போது இன்னும் பருமனாகத் தெரிவார்கள் என்பதால் மெல்லிய ஃபேப்ரிக் பெல்ட் அல்லது செயின் பெல்ட் அணியலாம்.