Published:Updated:

ஃப்ளவர் முதல் ஹாட் ஸ்டோன் வரை... பெண்களுக்குப் புத்துணர்வு தரும் மசாஜ்!

பெண்களுக்கான மசாஜ்
பெண்களுக்கான மசாஜ்

ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப ஸ்டோன் மசாஜுக்கு பயன்படுத்தும் கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது.

மசாஜ் என்பது ஆண்களுக்கானது என்ற நினைப்பு தகர்ந்துவிட்டது. பாதுகாப்பும் பிரைவசியும் கொண்ட நம்பகமான மசாஜ் சென்டர்கள் வந்துவிட்டதால், பெண்களும் மசாஜ் செய்வதின் பலன்களை அனுபவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. வீடு, குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என பொறுப்புகளைச் சுமந்துகொள்வதால், உடலளவிலும் மனத்தளவிலும் சோர்வடைந்திருக்கும் பெண்களுக்கு, உற்சாகத்தை அளிக்கிறது மசாஜ். மேலும், ரத்த ஓட்டத்தைச் சீராக்கி, சுறுசுறுப்படையச் செய்து, குடும்பப் பொறுப்பிலும் வேலையிலும் கவனத்தை குவியச்செய்கிறது. மசாஜ் பார்லர்களில் மட்டுமின்றி, வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன.

ஃபுட் மசாஜ்si

மன அழுத்தத்தை முற்றிலுமாக நீக்க உதவும் என்பதே ஃபுட் (பாதம்) மசாஜின் சிறப்பு. இந்த மசாஜின் ஆதாரமே கால்கள்தான். ஏனெனில், உடல் உறுப்புகளுக்கான நரம்பு மண்டலம், இரு கால் பாதங்களில்தான் அமைந்திருக்கிறது. பெண்கள், கால்களை அழகாக வைத்துக்கொள்ள வேண்டுமென அதிகம் விரும்புவர். , புட் மசாஜ் செய்யும் கால்கள், சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்போது மசாஜின் பயனை முழுமையாகப் பெறமுடியும். இந்த மசாஜ் முறை மிகவும் எளியது என்பதால், பெண்கள் இதைப் பெரிதும் விரும்புகின்றனர்.

புட்  மசாஜ்
புட் மசாஜ்

கால் பாதத்திலுள்ள ஒவ்வொரு உறுப்புக்கான நரம்பு மண்டலமும் கால்களின் மேல்பகுதிகளிலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மசாஜ் செய்யப்படுகிறது. இதனால், உடல் உறுப்புகள் அத்தனையும் ஒருசேர ரிலாக்ஸ் அடைகின்றன. பெண்கள் ஃபுட் மசாஜை தொடர்வதன்மூலம், நிம்மதியான தூக்கத்தையும் உடலின் சக்தியையும் பெறமுடியும். அதுமட்டுமல்லாமல் இந்த மசாஜால் நினைவாற்றல் அதிகரிக்கும். கால்களிலுள்ள நரம்புகளை ஒவ்வொன்றாகப் பிடித்து மசாஜ் செய்யும்போது, அந்தந்த உறுப்புகள் ரிலாக்ஸ் ஆவதை அப்போதே உணர முடிவது இந்த மசாஜில் மட்டும்தான்.

ஃப்ளவர் மசாஜ்

நம்பிக்கையின்மை, பயம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் ஃப்ளவர் மசாஜ் செய்துகொள்ளலாம். முக்கியமாக, அதிகமாக கோபப்படும் பெண்கள், இந்த மசாஜை எடுத்துக்கொள்வது நல்லது. பூக்கள் மற்றும் பூக்களிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெய்களால் செய்யப்படுவது என இரண்டு வகையில் இந்த மசாஜ் செய்யப்படுகிறது. நறுமணம் நிறைந்த எண்ணெய்களை உடலில் தேய்க்கும்போதும், அந்த நறுமணத்தை சுவாசிக்கும் போதும் மனம் இலகுவாகிறது.

டென்ஷன் இல்லா நிலையை இந்த மசாஜ் மூலம் பெறமுடியும். கோபம், கவலை, கஷ்டம் என எல்லாவற்றையும் சுமந்துகொண்டு ஃப்ளவர் தெரப்பிக்கு வருபவர்கள், தெரப்பி முடிந்து செல்லும் போது, அவர்களின் முகம் முழுவதும் சிரிப்பும் உற்சாக்கமுமே நிறைந்திருக்கும்.

டீப்-டிஸ்யூ மசாஜ்
டீப்-டிஸ்யூ மசாஜ்

டீப்-டிஸ்யூ மசாஜ்

வேறெந்த உபகரணங்களாலும் அல்லாமல் வெறும் கைகளால் செய்யப்படுகிறது. அதிக அழுத்தமே இந்த மசாஜின் ஆதாரம். இதை எடுத்துக்கொள்ளும் பெண்கள், அழுத்தத்தைத் தாங்குபவராக இருக்கவேண்டியது அவசியம். தலை முதல் கால் வரை ஒவ்வோர் இடத்திற்கும் அழுத்தம் வித்தியாசப்படும் என்பதால், வலியும் வேதனையும் இதில் இருப்பதில்லை. மாறாக, சுகமான அனுபவம் கிடைக்கிறது.

இந்த மசாஜுக்கு எண்ணெய்கள் பயன்படுத்தப்படுவதால், இதன் பயனை நம்மால் முழுமையாகப் பெறமுடியும். தலையில் அழுத்தம்கொடுத்து மசாஜ் செய்யும்போது, பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்வதாக தெரபிஸ்ட்டுகள் சொல்கிறார்கள். இதனாலேயே இந்த மசாஜை கால்களில் தொடங்குகின்றனர். ஏனெனில், கால்களில் அழுத்தம்கொடுக்கும் போது, உடல் புத்துணர்வு பெறுவதை உணர முடியும். இதில் இறுதியாக, அவர்களுக்குக் கிடைக்கும் உறக்கமே எல்லாவற்றையும் முற்றிலுமாகக் குணப்படுத்துகிறது.

ஹாட் ஸ்டோன் மசாஜ்
ஹாட் ஸ்டோன் மசாஜ்

ஹாட் ஸ்டோன் மசாஜ்

உடல் சோர்வை நீக்கும் முதன்மையான மசாஜ் இது. ஆற்றிலிருந்து எடுத்து வரப்படும் கூழாங்கற்கள்தான் இந்த மசாஜுக்கு ஏற்றவை. இதற்கு, பெரும்பாலும் கறுப்பு நிற கற்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. மசாஜுக்கு ஏற்ப வட்டம், நீள் வட்டம், உருளை என கற்களின் வடிவம் மாறும். ஒவ்வொருமுறையும் அந்தக் கற்களை நீரில் போட்டு சூடுபடுத்தி, மசாஜுக்குப் பயன்படுத்துகின்றனர்.

ஆண்களைவிட பெண்களின் சருமம் மிகவும் மென்மையானது என்பதால், அவரவர்களின் தாங்கும் தன்மைக்கு ஏற்ப கற்களின் சூடு வித்தியாசப்படுகிறது. கற்களின் சூடு மெல்லிய அளவில் பரவுவதால், தோல்கள் ரிலாக்ஸாகின்றன. இதனால் கவலையான மனநிலை முற்றிலுமாக மாறி, புத்துணர்ச்சி கிடைக்கிறது. நேரடியாக கற்களின் சூட்டைத் தாங்க முடியாதவர்களுக்கு, துணிகளைச்சுற்றி சூட்டை உடலுக்குள் செலுத்துவது ஏற்றதாகவும், ஆண்களைவிட பெண்களுக்கே இந்த முறை பொருத்தமானதாகவும் இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு