Published:Updated:

மென்மை... வலிமை... திறமை... பெண்களுக்கு உதவும் வாழ்க்கைக் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

மென்மை... வலிமை... திறமை... பெண்களுக்கு உதவும் வாழ்க்கைக் கலை!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
செல்ஃப் டெவலப்மென்ட்
மென்மை... வலிமை... திறமை...
பெண்களுக்கு உதவும் வாழ்க்கைக் கலை!

பெண்மையின் இயல்பு குணமான மென்மையுடனும் அதே நேரம் வலிமையுடனும் இருக்கும் கலையைச் சொல்லித் தரும் டாக்டர் ஷாஷா ஷில்கட் என்பவர் எழுதிய புத்தகமான ‘பிட்வீன் க்ரிட் அண்ட் க்ரேஸ்’ எனும் புத்தகத்தை இந்த ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு நாம் பார்ப்போம். இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான காரணத்தை ஆசிரியரே சொல்கிறார்...

புத்தகத்தின் பெயர்:
Between Grit and Grace 
ஆசிரியர்:
Dr.Sasha K.Shillcutt MD 
பதிப்பாளர்:
Health Communications Inc; 
1s t edition
புத்தகத்தின் பெயர்: Between Grit and Grace ஆசிரியர்: Dr.Sasha K.Shillcutt MD பதிப்பாளர்: Health Communications Inc; 1s t edition

நல்ல பெயர் எடுக்க நினைக்கும் பெண்கள்...

‘‘நான் பார்த்த பல பெண்கள் எப்போதுமே தாங்கள் கொண்டிருக்கும் தகுதியில் (திறமை/அறிவு/சாதுரியம் போன்றவை) இருந்து தங்களை சற்றுக் குறைந்தவர்களாகக் காட்டிக் கொண்டும், போட்டியான சூழல்கள் வருவதை/அது போன்ற சூழல்களில் செயல்படுவதை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்துக்கொண்டுமே வாழ்ந்து வருகிறனர். இது எதனால் தெரியுமா?

சுற்றியிருப்பவர்களிடம் நல்ல பெண்மணி என்ற பெயரெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கொண்டிருப்பதாலேயே தான். இப்படி நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாய் விட்டுக் கொடுத்து தங்களிடம் இருக்கும் திறன்கள் அனைத்தையுமே வெளியே காட்டாமல் கடைசியில் திறமையேதும் இல்லாத வெற்று ஆள் போன்ற தோற்றத்துடனேயே இருந்துவிடுகின்றனர். இதற்காகவே பெண்கள் தங்களுடைய ஐடியாக்களை வெளியே சொல்லாமலும், வார்த்தைகளை விழுங்கியும், அவர்களிடம் இருக்கும் அநாயாசமான திறமையை மறைத்தும், தலைமைப்பண்பை வெளிக்காட்டாமல் ஒளித்து வைத்துக் கொண்டும் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால், பெண்கள் மென்மையாகவும் அதே சமயம் வலிமையாகவும் இருக்க முடியும். முதல் நிமிடத்தில் ஒரு புரட்சியை உருவாக்கவும் அடுத்த நிமிடம் அந்தப் புரட்சியில் பங்கெடுத்துக்கொள்வதற்காக நம் பின்னே திரள்பவர்களைப் பரிவுடன் கவனித்துக் கொள்ளவும் பெண்களால் முடியும் என்பதை ஆணி அடித்தாற்போல் நான் கூறவிரும்புகிறேன்.

பெண்களே உங்களுடைய முழுத்திறனையும் இந்த உலகுக்கு பறைசாற்றி உங்களுடைய உண்மையான வாழ்க்கையை வாழ முயலுங்கள். திறமையைப் பறைசாற்ற வேண்டிய வேளையில் ஓடி ஒளிந்துகொள்ளாதீர்கள். கருணை கொண்டவளாகவும் கெட்டவளாகவும் (பணியிட கண்டிப்புகளில்) உங்களால் ஒரே நேரத்தில் இரண்டு ரூபத்தில் செயல்பட முடியும். அதில் தவறேதும் இல்லை என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியை.

முத்திரைக்கு பயந்து, சுயத்தை இழந்து...

ஆண்களைப் போலவே பெண்களும் தனித்தன்மை கொண்ட, விருப்பு வெறுப்புகள் கொண்ட, நினைத்ததை செய்து முடிக்கிற நோக்கத்துடன் திகழ்கிற, புதியவற்றைத் தெரிந்துகொண்டு எதிர்கொள்ளும் ஆர்வம் கொண்டவர்களாகவே படைக்கப்பட்டவர் கள். ஆனால், இந்தக் குணாதிசயங்களுடன் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டவர்கள். ஆண் எதை வேண்டுமென்றாலும் செய்து வெற்றி பெறலாம். பெண்ணோ இந்த உலகம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கான நியதிகளைப் பின்பற்றி மட்டுமே வெற்றி பெற வேண்டும்.

ஏனென்றால், உலகம் பெண்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த எதிர்பார்ப்புகளைத் தாண்டி ஒரு பெண் நடக்க ஆரம்பித்தால் உடனே இந்த உலகம் இந்தப் பெண் மூடுக்கு தகுந்தாற்போல் நடப்பவள், எளிதில் உணர்ச்சிவயப்படுபவள், எளிதில் புரிந்துகொள்ள முடியாதவள் என்று முத்திரை குத்திவிடுவார்கள். ஏன் இந்த நிலை என்று சிந்தித்துப் பாருங்கள். நம்மில் (பெண்களில்) பெரும்பாலானோர் அடுத்தவர்களுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும், நம்மை நல்லவர்கள் என அவர்கள் நினைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதாலேயேதான். பெரும் பாலானோர் இப்படி நல்லவர்களாக இருப்பதற்காக முயற்சி செய்து தங்களுடைய சுயத்தை ஒளித்து வைத்துக்கொண்டு செயல்படும்போது ஒரு சிலர் தங்களுடைய சுயத்தை வெளிக்காட்டும்போது அவர்களுக்கு இது போன்ற முத்திரை குத்தப்படுகிறது. இதனாலேயே ஒரு பெண் உலக எதிர்பார்ப்பு களுக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளாமல் தன்னுடைய சுயத்துடன் செயல்படுவதற்கு நிறையவே ஊக்கம் தேவைப்படுகிறது.

மென்மை... வலிமை... திறமை...
பெண்களுக்கு உதவும் வாழ்க்கைக் கலை!

கேளுங்கள், கிடைக்கும்...

‘‘பணியிட அன்றாட வாழ்க்கை, புரமோஷன், ஏன் பணியிடம் அல்லாத தனிமனித வாழ்க்கை என எதிலும் பெண்ணுக்கென்ற ஒரு எழுதப்படாத சட்டத்தைப் பின்பற்றவேண்டிய நிர்ப்பந்தம் இருக்கவே செய்கிறது. இதை மீறி நடந்து வெற்றி பெறவேண்டும் எனில், அது கடினமான ஒன்றாக இருக்கிறது. அதற்கென அன்றாடம் தேவைப்படும் தைரியத்தின் அளவும் மிக அதிகமானதாக இருக்கிறது. இதற்கான பாதையில் பயணிக்கும் சின்னச்சின்ன முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றாலே அதற்கு தைரியம் மிக அதிக அளவு தேவைப்படும். அது மட்டுமல்ல, இதைச் செய்யப்போகிறோம் என்ற தீர்க்கமான தீர்மானத்துடன், எச்சரிக்கையுடன், மற்றும் அதீத தைரியத்துடன் இந்தப் பாதையில் ஒவ்வொரு பெண்ணும் பயணிக்க வேண்டியுள்ளது.

ஆணும் பெண்ணும் ஒரே மாதிரியான படிப்பு, ஒரே மாதிரியான பணியிட சட்ட திட்டங்கள், ஒரே மாதிரியான அனுபவம் போன்றவற்றைக் கொண்டிருந்தபோதிலும் பதவி உயர்வு என்று வரும் போது ஆணுக்கு சுலபமாக அது சென்று விடுகிறது. நான் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தேன் தெரியுமா என்று நாம் மனதினுள் புழுங்கி சாகிறோம். என்ன செய்தோம்? கஷ்டப்பட்டு உழைத்தோம். அதை யார் பார்த் தார்கள்? பார்க்க வேண்டி யவர்கள் பார்க்கட்டும் என்று காத்திருந்தோம். இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறோம். நம்மை உழைப்பை பார்த்து பதவி வரவேண்டும் என்று நினைக்கிறோம். நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறேன் எனக்கு இந்தப்பதவி தரவேண்டும் என்று நேரிடையாகக் கேட் போமா? கேட்க மாட்டோம். ஏன்? அப்படிக் கேட்டால் கிடைக்காது. சரி, கேட்காமல் இருந்ததால் கிடைத்ததா என்ன? இல்லையே...! ஒருவேளை கேட்டு கிடைக்காமல் போயிருந்தால் கூட என்னவாயிருக்கும். நம் மனப்புழுக்கம் இருந்திருக்காது. இல்லையா” என்று கிண்டலாகக் கேட்கிறார் ஆசிரியர்.

பதவி உயர்வைத் தவிர்ப்பது ஏன்?

ஒரு பெண்ணாக நம்முடைய கடினமான உழைப்பும் பங்களிப்பும் அதுவாக பார்க்க வேண்டியவர்களால் பார்க்கப் படவேண்டும் என்று காத்திருக் கிறோம். அலுவலகத்தில் நம்முடைய பதவியைத் தாண்டிய அதிகாரம் தேவைப்படும் விஷயங்களைச் செய்ய நீங்கள் இதைச் செய்யுங்கள் என்று யாராவது கூறும்வரை காத்திருக் கிறோம். நம்முடைய அறிவுத் திறனை வெளிக்காட்டவும் தயங்குகிறோம். என்ன இந்தப் பெண் இப்படிப் பேசுகிறது என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் சரியான தருணம் வரும் வரை (பல தடவை அந்தத் தருணம் வரவே வராது போய் விடும்) நம்முடைய (நமக்குத் தோன்றும்) அறிவுரையை சொல்லாமல் கடந்து போய்விடுகிறோம். தோற்றுவிட்டால் வெட்கமாகிவிடுமே என்று எந்த ஒரு பதவி உயர்வுக்கான போட்டி யிலும் வெளிப்படையாகக் கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறோம். முன்னேற்றம் தடைபட இவை யெல்லாம் போதாதா என்ன என்று கேட்கிறார் ஆசிரியை.

ஹெவ்லெட்-பெக்கார்ட் (Hewlett-Packard) நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் ஒரு ஆண் ஒரு பதவிக்குத் தேவையான தகுதியில் 60 சதவிகிதத்தைக் கொண்டிருந்தாலே அந்தப் பதவி உயர்வுக்கு விண்ணப்பிக்கிறார் என்றும், அதே சமயம் ஒரு பெண் 100% தகுதிகளை அடைந்த பின்னரே விண்ணப்பிக்கிறார் என்றும் கண்டறிந்துள்ளனர். இதிலிருந்து பெண் இந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக இருப்பது யாருடைய தவறு என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது இல்லையா? என்று கேட்கிறார் ஆசிரியை.

வீட்டுப் பொறுப்பையும் அலுவலகப் பொறுப்பையும் ஒரு பெண் எப்படி சமநிலையில் நிர்வகிக்கிறாள் என்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், பிரச்னை களைத் தவிர்க்க வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி, அவர்கள் மறைவில் இருந்து பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு முன்னால் நிற்கும் ரோல்களை எப்போதுமே முழுமையாகத் தவிர்க்கின்றனர்.

ஏனென்றால், எல்லோருக்கும் நல்லவளாக இருந்தால் மட்டுமே வீடு-அலுவலக சமநிலையை சீரான நிலையில் இருக்க வைக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர் என்று கண்டறிந் துள்ளனர். இதுவே ஆண்-பெண் என்ற பேதம் பெரிய அளவில் தழைத்தோங்க வழிவகை செய்கிறது என்கிறார் ஆசிரியை.

ஒரிஜனலை வெளிக்காட்டி முன்னேறிச் செல்லுங்கள்...

‘‘பெண்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னைக்குமான அடிப்படைக் காரணம் என்ன என்பதையும், அதை எப்படி முழுமையாகக் களைவது என்பதையும் ஆசிரியை தன்னுடைய அனுபவம், ஆராய்ச்சி முடிவுகள் மற்றும் நிஜவாழ்க்கை உதாரணங்கள் மூலம் அனைத்து அத்தியாயங் களிலும் தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளார்.

இறுதியாக என்னதான் பிரச்னை இல்லாத வாழ்க்கை, அதற்குத் தேவையான பணம் எனப் பல்வேறு நல்ல விஷயங்களை நீங்கள் பெற்றிருந்தாலும் உங்களுடைய இயல்பான சுயத்தைத் தொலைத்துவிட்டு/விட்டுக் கொடுத்துவிட்டு ஊருக்காக வாழும் வாழ்க்கை முறையைக் கையில் எடுத்து வாழ ஆரம்பித்தீர்கள் எனில், அந்த வாழ்க்கை ஒரு நிம்மதியற்றதாகவே இருக்கும் என்பதால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றி உங்களுடைய ஒரிஜனலை வெளிக்காட்டி (சுயத்தை இழக்காமல்) முன்னேறிச் செல்லுங்கள்’’ என்று கூறி முடிக்கிறார் ஆசிரியை.

பணிக்குச் செல்லும் பெண்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தை அவசியம் ஒருமுறை படிக்கலாம்!