Election bannerElection banner
Published:Updated:

`5-க்கும் பாதுகாப்பில்லை, 55-க்கும் பாதுகாப்பில்லை!'- எப்படி இருக்கிறார் `லேடி' முகமது அலி?

Boxer Thulasi Helen
Boxer Thulasi Helen

``பெண் குழந்தைங்க மட்டுமல்ல, ஆண் குழந்தைங்களுக்கும் இவை அவசியம். குற்றங்கள் அதிகமாகிட்டு வர இந்தக் காலத்துல, தற்காப்புக் கலைகள் கத்துக்கிறது காலத்தின் கட்டாயம்..."

``இப்போ ஆட்டோ ஓட்டித்தான் என் பயிற்சிக்கான செலவுகளை சமாளிச்சிட்டு வர்றேன்'' - இந்தக் கையறு நிலை வார்த்தைகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டவர், இந்தியாவின் 'லேடி முகமது அலி' என்று கொண்டாடப்பட்ட குத்துச்சண்டை வீராங்கனை 'துளசி ஹெலன்.' என்னவாயிற்று துளசிக்கு ?

Martial Arts
Martial Arts

சென்னையைச் சேர்ந்த துளசி ஹெலன், மாநில மற்றும் தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர். ஒரே அடியில் எதிராளியை மண்ணைக் கவ்வ வைக்கும் நாக் அவுட்டில் கைதேர்ந்தவர். சில ஆண்டுகளுக்கு முன், தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை எதிர்த்துப் புகார் அளித்ததால், விளையாட்டிலிருந்தே முடக்கப்பட்டவர். தற்போது பகுதி நேர ஆட்டோ ஓட்டுநராகவும், மற்ற நேரங்களில் பாக்ஸிங், பாடி பில்டிங் டிரெய்னராகவும் இருப்பவரை நேரில் சந்தித்தோம்.

"வாழ்க்கை ஒரே மாதிரி இருந்திடாது. குடும்பச் சூழ்நிலை காரணமா, இப்ப ஆட்டோ ஓட்டித்தான் என்னோட பயிற்சிக்கான செலவுகளைச் சமாளிச்சிட்டு வர்றேன். ராத்திரி, பகல்னு பார்க்காம பார்ட் டைம் வேலை, பிராக்டிஸ்னு சுத்திக்கிட்டிருக்கிறதால, உடல் சோர்வு பிரச்னை மட்டுமல்லாம, பாலியல் பிரச்னைகளையும் சந்திச்சிருக்கேன். யாருமே உதவிக்கு வராத அந்த மாதிரி நேரங்கள்லேயும், நான் கத்துக்கிட்ட பாக்ஸிங்தான் என்னைக் காப்பாத்துச்சு.

Boxer Thulasi Helen
Boxer Thulasi Helen

இந்தச் சமூகம் சொல்ற மாதிரி இரவு நேரங்களும் பெண்கள் போட்டுக்கிட்டிருக்க டிரெஸ்ஸும் பாலியல் தொல்லைகளுக்குக் காரணமே கிடையாது. 5 வயசு குழந்தைக்கும் பாதுகாப்பில்ல; 55 வயசு பெண்மணிக்கும் பாதுகாப்பில்ல... தெரிஞ்சவன், தெரியாதவன்னு யாரையுமே நம்ப முடியலைங்கிறது எவ்வளவு மோசமான நிலைமை'' என்று வருத்தப்பட்டவர், பெற்றோர்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார்.

''பெண் குழந்தைகளுக்கு தற்காப்புப் பயிற்சி ரொம்ப அவசியம். பாட்டு, நடனம்னு எந்தப் பயிற்சியில வேணும்னாலும் சேர்த்துவிடுங்க. ஆனா, கூடவே ஒரு தற்காப்புக் கலையையும் சொல்லிக்கொடுக்க மறந்துடாதீங்க. கராத்தே, ஜூடோ, பாக்ஸிங், டேக்வோண்டோனு நிறைய தற்காப்பு கலைகள் இருக்கு. பெண் குழந்தைங்க மட்டுமல்ல, ஆண் குழந்தைங்களுக்கும் இவை அவசியம். குற்றங்கள் அதிகமாகிட்டு வர இந்தக் காலத்துல, தற்காப்புக் கலைகள் கத்துக்கிறது காலத்தின் கட்டாயம்'' என்றார் துளசி ஹெலன்.

`உங்களை நம்பமாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!’ -  ஐ.நா-வில் கர்ஜித்த சிறுமி கிரேட்டா தன்பெர்க்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு