Published:Updated:

அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் மற்றும் பலர்...

ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்

பிரபலங்களின் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் உமா பீம்சிங்

#Lifestyle

ல மாதங்கள் மெனக்கெட்டுத் தயாரிக்கப்படும் படங்களைவிடவும், சில நாள்கள் உழைப்பில் உருவாகும் விளம்பரப் படங்கள் அதிகம் கவர்வதுண்டு.

கவிதையாகக் கவனம் ஈர்க்கும் பல விளம்பரங்களிலும் திரைப்படத்துக்கு இணையான உழைப்பும் முயற்சிகளும் இருக்கும். விளம்பரத்தின் வீச்சில் அதன் ஒவ்வோர் உழைப்பாளிக்கும் பங்குண்டு. அவர்களில் ஒருவர்தான் உமா பீம்சிங்.

என்.ஏ.சி ஜுவல்லர்ஸ், நல்லி, ஜெயச்சந்திரன், தனிஷ்க், அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல், நேச்சர்பவர், கேட்பரீஸ் எனப் பல பிரமாண்ட விளம்பரங்களில் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டாகப் பணிபுரிந்தவர் உமா பீம்சிங். பெயரின் பாதியே இவரது பாரம்பர்யம் பேசும்.

அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் மற்றும் பலர்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

யெஸ்... களத்தூர் கண்ணம்மா, பாசமலர், பாலும் பழமும், பாவ மன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா போன்ற கிளாஸிக் படங்களை இயக்கித் தயாரித்த ஏ.பீம்சிங் இவரின் மாமனார். பிரபல குணச்சித்திர நடிகை சுகுமாரி, இவரின் மாமியார்.மாமனார், மாமியாரிலிருந்தே பேட்டியைத் தொடங்கினோம்.

``1986-லதான் என் கணவரை சந்திச்சேன். ஆனால், 1976-ல மாமனார் தவறிட்டார். அவரை சந்திக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைக்கலை. அந்தக் குடும்பத்துக்குள்ளே போன பிறகுதான் பீம்சிங் என்ற பாரம்பர்யம் என் பெயருக்குப் பின்னாலும் சேர்ந்தது. மாமனார் டைரக்ட் பண்ணி தயாரிச்ச படங்களில் என் ஃபேவரைட் பாசமலர். அந்தப் படத்துல வரும் ‘வாராய் என் தோழி’ பாட்டுல நடிகையர் திலகம் சாவித்திரி அம்மாவோடு என் மாமியார் சுகுமாரியம்மாவும் நடிச்சிருப்பாங்க.

மருமகளை மகளா நடத்தினவங்க என் மாமியார். குடும்பத்தோடு ரொம்ப அட்டாச்மென்ட் உள்ள நபர். தன்னால வேலை நின்னுடக் கூடாதுனு பைபாஸ் ஆபரேஷன் நடந்த ரெண்டாவது நாளே ஷூட்டிங் போயிட்டாங்க. அந்தளவுக்கு வேலையிலும் அவங்களுடைய ஈடுபாடு பிரமிக்க வைக்கும்...’’ நினைவுகளில் நெகிழ்ந்து தொடர்கிறார் உமா.

அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் மற்றும் பலர்...

‘‘பெண்களால் சூழப்பட்ட குடும்பத்துல வளர்ந்ததால் அழகழகா டிரஸ் பண்ணிக்கிறதும், அலங்காரம் பண்ணிக்கிறதும் அந்த வயசுல ரொம்பப் பிடிக்கும். வணிகவியல் துறையில டிகிரியும், கோத்தாரி இன்ஸ்டிட்யூட்ல ஃபேஷன் டிசைனிங்கும் படிச்சிட்டு, பொட்டிக் ஆரம்பிச்சேன். கல்யாணத்துக்குப் பிறகு, குடும்ப பொறுப்புகள் பிரதானமானதால பொட்டிக் பிசினஸ்ல ஓர் இடைவெளி விழுந்தது. குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த ஊக்கத்தால மறுபடி பிசினஸைத் தொடர ஆரம்பிச்சேன்.

ஜெமினி டிவிக்காக நடிகை ஷோபனாவுக்கு டிசைன் பண்ணதுதான் முதல் அசைன்மென்ட். நான் நடத்திட்டிருந்த பொட்டிக்குக்கு நிறைய சினிமா பிரபலங்கள் வந்திருக்காங்க. அப்படி வந்த ஒரு நடிகை, தனக்கு ஒரு பாட்டுக்கு காஸ்டியூம் டிசைன் பண்ணித் தரச் சொல்லிக் கேட்டாங்க. சினிமாவில் என் என்ட்ரி அப்படித்தான் ஆரம்பிச்சது. 25 வருஷங்களைக் கடந்துட்டேன்’’

- சில்வர் ஜூபிளிக்குப் பிறகும் சக்சஸ்ஃபுல் டிசைனராகத் தொடர்பவர், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா, சிம்ரன், தமன்னா, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ், நிக்கி கல்ராணி என ஏகப்பட்ட நடிகைகளுடன் பணியாற்றியவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

உமா தன்னை ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் என்றே அடை யாளப்படுத்திக் கொள்கிறார். காஸ்டியூம் டிசைனருக்கும் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் மற்றும் பலர்...

‘‘காஸ்டியூம் டிசைனிங் என்பது ஒரு கேரக்டருக்காகவோ, ஏதோ நிகழ்ச்சிக்காக ஒரு நபருக்காகவோ உடைகளை வடிவமைப்பது. படங்களுக்கு, மணமக்களுக்கு, நடனக் கலைஞர்களுக்குன்னு இதில் பலவகை இருக்கு. ஃபேஷன் ஸ்டைலிஸ்ட் என்பவர், ஒரு நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் உடைகள் மற்றும் அக்ஸஸரீஸ் எல்லாத்தையும் ஒருங்கிணைக்கிறவங்க. அது விளம்பர ஷூட்டிங்கா இருக்கலாம் அல்லது ஃபேஷன் ஷோவா இருக்கலாம். தேவையான மெட்டீரியல்களை கண்டுபிடிச்சு வாங்கறது, ரொம்ப நுணுக்கமா மேட்ச் பண்றதுன்னு அது அதிக மெனக்கெடல் தேவைப்படும் வேலை’’

- தெளிவாக விளக்குபவர், ‘மாகாடு’, ‘சாக்ஷி’ உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும், ‘மனசுக்குள் மத்தாப்பு’, `பகலில் ஓர் இரவு’, `சிங்கம் 2’, ‘போராளி’, `படிக்காதவன்' எனத் தமிழ்ப் படங்களிலும் ஸ்டைலிஸ்ட்டாகப் பணியாற்றியிருக்கிறார்.

பரபர வேலைகளுக்குப் பெயர் பெற்றது விளம்பர ஷூட்டிங். ஸ்ட்ரெஸ், சவால், போட்டிகள் எல்லாவற்றையும் சமாளித்து இந்தத் துறையில் நிற்க தனித்திறமை வேண்டும். எப்படி முடிகிறது இவரால்?

அனுஷ்கா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், நித்யா மேனன் மற்றும் பலர்...

‘‘ஒரு விஷயத்தை எவ்வளவு புரொஃபஷனலா ஹேண்டில் பண்றோம்ங்கிறதைப் பொறுத்தது ஸ்ட்ரெஸ். புரொஃபஷனலிஸம் என்ற வார்த்தையை விவரிக்கிறதே கஷ்டம். அது பல வருட ஹார்ட் வொர்க், வேலையின்மீதான டெடிகேஷனால் வருவது. என்கூட வொர்க் பண்ணின மாடல்கள், நடிகர்கள், டைரக்டர்ஸ், ஆர்ட் டைரக்டர்ஸ், மேக்கப் ஆர்ட்டிஸ்ட், ஹேர் ஸ்டைலிஸ்ட், போட்டோகிராபர்ஸ், தயாரிப்பாளர்கள்னு எல்லோருமே ரொம்ப புரொஃபஷனலானவங்க. அதனால ஸ்ட்ரெஸ் இல்லாம வேலை பார்க்க முடியுது.

திறமையான டெய்லர்கள், காஸ்டியூமர்ஸ், அக்சஸரீஸ் தயாரிப்பவங்கனு ஆட்கள் கிடைக்கிறது தான் இந்த வேலையில மிகப்பெரிய சவால்.

திடீர்னு தேவதை கேரக்டருக்கு ரெண்டு பெரிய றெக்கைகள் தயாரிக்க வேண்டிவரும். அதை எப்படி, யார்கிட்ட கோஆர்டினேட் பண்ணி வாங்க முடியும்னு யோசிக்கணும். வேகமாவும் வேலை முடியணும். குறைஞ்ச டெட்லைனும் பிசினஸ் கமிட்மென்ட்டுகளும் எப்போதுமே இந்தத் துறையில் சவால்கள்தான்.

இங்கே வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கு. யாரும் யாருக்கும் போட்டியில்லை’’

- பொறுமையாகச் சொல்கிறார் உமா. இவரின் கணவர் சுரேஷ் பீம்சிங், பார்மா கம்பெனியில் வேலைபார்த்து ஓய்வுபெற்ற டாக்டர். மகன் விக்னேஷ் கிராபிக் டிசைனர், போட்டோகிராபர். மருமகள் திவ்யா, பயோடெக்னாலஜிஸ்ட். வியட்நாம் வீடு சுந்தரம், உமாவின் அங்கிள். அவரின் மகள் அனு பார்த்தசாரதி இவருக்கு கஸின். பிரபல மேக்கப் ஆர்ட்டிஸ்ட் பானு இவரின் சகோதரி.

விளம்பரத்துறையில் அடியெடுத்து வைக்க விரும்பும் பெண்களுக்கு அவசிய ஆலோசனைகள் தருகிறார் உமா... ‘‘அடிப்படையான விஷயங்கள் லேருந்து ஆரம்பிங்க. உதாரணத்துக்கு... டிசைனராகணும்னு விரும்பினா, விஷுவல் ஆர்ட்ஸ்ல புரொஃபஷனலா படிப்பும் பயிற்சியும் இருந்தா மட்டும் போதாது. துணி தைக்கத் தெரியணும். துணிகளைப் பற்றியும் அக்சஸரீஸ் பற்றியும் ஆழமான அறிவை வளர்த்துக் கணும்.

மாடல்கள் தோற்றம், ஆரோக் கியம், முறையான பயிற்சி, விடா முயற்சினு அடிப்படையான எல்லா விஷயங்கள்லயும் கவனம் செலுத்தணும். ரொம்ப முக்கியமா தன் மேல நம்பிக்கை வைக்கணும். குடும்பத்தின் சப்போர்ட்டை பெறணும்.’’