லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஓ... பாப்பா லாலி! #HowToPrepare

பாப்பா லாலி!
பிரீமியம் ஸ்டோரி
News
பாப்பா லாலி!

#Lifestyle

சரணி ராம்

குழந்தைகளின் சருமம் மிகவும் மிருதுவானது. நாம் பயன்படுத்தும் ஷாம்பூ, சோப்பு போன்ற பொருள்களில் உள்ள கெமிக்கல்கள் குழந்தைகளின் சருமத்தில் அலர்ஜி, அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கான இயற்கை தயாரிப்புகளை கெமிக்கல் கலப்பில்லாமல் வீட்டிலேயே தயார்செய்யக் கற்றுத் தருகிறார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ராதா பாட்டி.

ஓ... பாப்பா லாலி! #HowToPrepare

அரை கிலோ பாசிப்பயறை கழுவி இரண்டு நாள்கள் நிழலில் உலர்த்திக்கொள்ளவும். அதோடு காய வைத்த வேப்பிலை, துளசி இலை தலா 50 கிராம், காய்ந்த எலுமிச்சைத்தோல் ஒன்று, சிவப்பு சந்தனம் 50 கிராம், விரலி மஞ்சள் ஐந்து சேர்த்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து வாங்கவும். மஞ்சள் அரைக்கும் இயந்திரத்தில் அரைக்கச் சொல்லி வாங்குங்கள். சிகைக்காய் அரைக்கும் இயந்திரத்தில் அரைத்தால் குழந்தையின் கண்களில் எரிச்சல் உணர்வு வரும்.

ஓ... பாப்பா லாலி! #HowToPrepare

அரைத்த பொடியை சலித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளுங்கள். தினமும் குளியல் பொடியை எடுக்கும்போது, ஈரப்பதம் இல்லாத கரண்டியைப் பயன் படுத்த வேண்டும். இந்தப் பொடியை சோப்புக்குப் பதிலாக உபயோகிக்கவும். குழந்தையின் கண் மற்றும் வாய்ப்பகுதியில் படாமல் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள்.

பொடி தயாரிப்பில் சேர்த்துள்ள சந்தனம் வாசனைப் பொருளாகவும், வேப்பிலையும் மஞ்சளும் கிருமி நாசினியாகவும் செயல்படும். பாசிப்பயறு உடலில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையை நீக்கி குழந்தையின் சருமத்தைப் பாதுகாக்கும்.