Published:Updated:

`ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு; இப்போ மகிழ்ச்சி!' - உதவிகள் கிடைத்த மகிழ்ச்சியில் துர்கா

குழந்தைகள்

நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைக்க, தற்போது முதலாம் ஆண்டு படிப்பைத் தொடர்கிறார்.

`ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு; இப்போ மகிழ்ச்சி!' - உதவிகள் கிடைத்த மகிழ்ச்சியில் துர்கா

நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைக்க, தற்போது முதலாம் ஆண்டு படிப்பைத் தொடர்கிறார்.

Published:Updated:
குழந்தைகள்

கொங்கு மண்டலத்திலுள்ள வர்த்தக நகரைச் சேர்ந்தவர்கள் துர்கா, புவனா, கதிரவன் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). பால்ய பருவத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க வேண்டிய மூவரும், விவரம் தெரிந்த வயதிலிருந்து கஷ்டங்கள் தவிர எதையுமே அறியாதவர்கள். ஹெச்.ஐ.வி பாதிப்பால் பெற்றோர் மரணமடைய, சொந்தங்கள் முற்றிலுமாக இவர்களை ஒதுக்கிவிட்டனர். பிறர் ஆதரவும் துணையும் இன்றி, தனியாகவே வசித்துவரும் இந்தக் குழந்தைகள், உணவு, படிப்பு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்குக்கூட சிரமப்படுகின்றனர்.

குழந்தைகள்
குழந்தைகள்

இவர்களின் கஷ்ட நிலை குறித்து சமீபத்தில் விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதைப் படித்த விகடன் வாசகர்கள் பலரும், இந்தக் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நிதியுதவி செய்தனர். துர்காவின் வங்கிக் கணக்குக்கு இதுவரை மூன்றரை லட்சம் ரூபாய் வந்திருக்கிறது. அந்தத் தொகை, இவர்களின் எதிர்கால நலனுக்காக நிரந்தர வைப்பு நிதியில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. அந்தக் கட்டுரையைப் படித்ததும், கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர்கள் பூங்குழலியும் கிருத்திகாவும் துர்காவின் கல்லூரிப் படிப்புக்கு உதவும் முன்னெடுப்பை ஏற்று, அங்குள்ள 'நல்லறம்' அறக்கட்டளையிடம் உதவி செய்யுமாறு வலியுறுத்தினர். அந்த அமைப்பின் தலைவர் அன்பரசன், துர்காவின் கல்லூரிப் படிப்புச் செலவுகளை முழுவதுமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

நீட் தேர்வால் எம்.பி.பி.எஸ் கனவு நிறைவேறாத நிலையில், தான் ஆசைப்பட்டதுபோலவே துர்காவுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்தது. கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டுப் பிரிவில் இடம் கிடைக்க, தற்போது முதலாம் ஆண்டுப் படிப்பைத் தொடர்கிறார். இது குறித்து மகிழ்ச்சியுடன் பேசுகிறார் துர்கா.

உதவிய வாசகர்கள் விவரம்
உதவிய வாசகர்கள் விவரம்

"ஹெஸ்.ஐ.வி பாதிப்பால அப்பாவும் அம்மாவும் இறந்ததுமே, நிராதரவானோம். நானும் தங்கச்சியும் தம்பியும் பிறர் ஆதரவு இல்லாமலேயே வாழப் பழகினோம். வீட்டுல எந்த அடிப்படை வசதியும் இல்ல. ஆனாலும், சிரமப்பட்டு ப்ளஸ் டூ முடிச்சேன். 'எதிர்காலம் என்ன ஆகும்? காலேஜ் வரை படிக்க முடியுமா?'ன்னு நம்பிக்கையில்லாம இருந்தோம். ஒவ்வொரு நாளும் போராட்டமா இருந்துச்சு. இந்த நிலையிலதான் எங்க நிலைமை பத்தி விகடன்ல பேட்டி வெளியாச்சு. நான் காலேஜ் சேர்ந்து நல்லபடியா படிச்சுகிட்டு இருக்கிறதை இப்ப வரை என்னால நம்ப முடியல.

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு கல்விக் கட்டணம் அதிகமா இருக்கும். முதலாம் வருஷப் படிப்புக்கு ரெண்டே கால் லட்சம் ரூபாய் கட்டணம். என்னோட அஞ்சு வருஷப் படிப்புச் செலவையும் 'நல்லறம்' அமைப்பின் தலைவர் ஏத்துகிட்டார். காலேஜ் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கிறேன். தங்கச்சி ப்ளஸ் ஒன்னும், தம்பி எட்டாவதும் படிக்கிறாங்க. அவங்க ரெண்டு பேர் மட்டும் எங்க ஊர்ல தனியா இருக்காங்க. காலையில சமையல் செஞ்சு அதையே மூணு வேளைக்கும் சாப்பிட்டுக்கிறாங்க. இந்தக் கஷ்டமெல்லாம் எங்களுக்குப் பழக்கப்பட்டதுதான்.

குழந்தைகள்
குழந்தைகள்

என்னோட படிப்புக்கு இப்போ கவலையில்ல. அடுத்த வருஷம் தங்கச்சி காலேஜ் படிக்க, இப்போ கிடைச்சிருக்கிற நிதியுதவியைப் பயன்படுத்திக்கலாம்னு திட்டமிட்டிருக்கோம். நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போய் தம்பியையும் காலேஜ் வரை படிக்க வெச்சுடுவோம். தாசில்தார் சார் ஒருத்தர் தொடர்ந்து அப்பா ஸ்தானத்துல உதவுறார். சொந்தங்களே எங்களை வெறுத்து ஒதுக்கிய நிலையில, எங்க நிலையை அறிஞ்சு உடனே எங்களுக்கு உதவி செஞ்ச எல்லோருக்கும் வாழ்நாள் முழுக்க நன்றிக்கடன் பட்டிருக்கோம்" என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் துர்கா.