Published:Updated:

“வேலை கொடுக்குறாங்க... கூடவே, படிக்கவும் வைக்கிறாங்க!” - பெண்களைப் போற்றும் ஒரு தொழிற்சாலை

பெண்களைப் போற்றும் ஒரு தொழிற்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
பெண்களைப் போற்றும் ஒரு தொழிற்சாலை

பாதுகாப்பும் பராமரிப்பும்

“எங்க மில்லுல வேலைபார்க்கும் பெண்களுக்கு பகுதி நேரமா கல்வி கொடுத்து, பட்டதாரிகளாக்கி, அந்தப் படிப்புக்கு ஏத்த வேலையையும் வாங்கிக்கொடுத்து வாழ்த்தி எங்களை அனுப்பி வைக்கிற நிறுவனம் இது’’ - உற்சாகத்துடன் சொல்கிறார்கள் கோவை கே.பி.ஆர் மில்லில் பணிபுரியும் பெண்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கார்மென்ட்ஸ் தொழில் வேலைகள் நடக்கும் கே.பி.ஆர் மில்ஸ் வளாகம். தேனீக்களைப்போல சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டிருந்தனர் பெண்கள். ‘`பெண் ஊழியர்களை எங்க நிறுவனம் படிக்கவைக்கிறது மட்டுமே எழுத வேண்டிய செய்தியில்லை. கொரோனா தாக்கங்களால நம் நாட்டுல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியை இழந்து, பணியில இருக்கிறவங்களும் ஊதியம் குறைக்கப்பட்டு, அதிக வேலைப்பளுன்னு இருக்காங்க. இப்படி உலகமே ஸ்தம்பிச்ச ஊரடங்குக் காலத்திலும், எங்க நிறுவன ஊழியர்கள் கிட்டத்தட்ட 22,000 பேருக்கு தங்கும் இடம், உணவுன்னு சகல வசதிகளையும் செய்துகொடுத்து, முழு ஊதியத்தையும் கொடுத்திருக்கு எங்க நிறுவனம். எங்க ஊழியர்கள்ல பெரும் பாலானவங்க பெண்கள்தான்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார்கள்.

 கே.பி.ராமசாமி
கே.பி.ராமசாமி

“என் சொந்த ஊர் திருவண்ணா மலை’’ என்று பேச ஆரம்பித்தார் பரணி ராஜேந்திரன்... ‘`நான் யு.ஜி முடிச்சப்போ, எங்க ஊர்ப் பெண் ஒருத்தவங்க, இங்கே படிச்சுட்டே வேலை பார்த்துட்டு இருந்தாங்க. நானும் அதே மாதிரி படிச்சுக்கிட்டே வேலைசெய்யலாமேனு இங்கே வந்து வேலைக்குச் சேர்ந்து மூணு வருஷம் ஆகுது. வேலைபார்க்கிறவங்க வளாக விடுதியிலேயே தங்கிக்கலாம். எட்டு மணிநேரம் வேலை. அதுபோக எட்டு மணிநேரத்தில் படிப்பு, பர்சனல்னு வேலைகளைப் பார்த்துக்கலாம். ஷிஃப்ட் நேரத்துக்கு ஏற்றாற்போல வகுப்புகள், ஆசிரியர்கள்னு விடுதி வளாகத்திலேயே ஏற்பாடு செஞ்சு கொடுத்துடுவாங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டு, இப்போ நான்

எம்.பி.ஏ ஹெச்.ஆர் முடிச்சுட்டேன். உள்ளேயே ஹெல்த் கேர் இருக்கு. மேலும், தேவைப்பட்டா நர்ஸ் நம்ம ரூமுக்கு வந்து அட்டண்ட் பண்ணு வாங்க.

 பரணி ராஜேந்திரன்
பரணி ராஜேந்திரன்

லாக்டெளன்ல காலத்துல முழு சம்பளம் கொடுத்து, எங்களை எல்லாம் பாதுகாப்பா இங்கேயே தங்க வெச்சுக்கிட்டாங்க. காலையில வாக்கிங் கூட்டிட்டுப் போவாங்க. நல்ல சாப்பாடு. விளையாட்டு, டான்ஸ், உள்ளேயே தியேட்டர் செட்அப்னு பல பொழுதுபோக்கு ஏற்பாடுகள். எங்க வீட்டிலும் பயமில்லாம இருந்தாங்க. வேலைபார்த்துகிட்டே படிக்கிறதால, படிப்புச் செலவை நானே பார்த்துக்கிறேன். வீட்டுக்கும் சப்போர்ட் பண்ண முடியுது. இப்படி ஒவ்வொரு பணியாளரின் சுய முன்னேற்றம், ஆரோக்கியம், மனநலம்னு எல்லாத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறதாலதான், எங்க சொந்த நிறுவனம்போல எல்லாரும் அர்ப் பணிப்போட இங்கே உழைக்கிறோம்’’ என்றார்.

ராஜபாளையத்தைச் சேர்ந்த இச்சா சக்தி, ‘`இங்கே மூணு வருஷமா சூப்பர்வைஸரா இருக்கேன். லாக்டௌன்ல ஒன்றரை மாசம் சுத்தமா வேலையில்லாம இருந்தப்போ சம்பளம் பிடிச்சிடுவாங்களா, சம்பளம் கொடுப்பாங்களானு கவலையா இருந்தது. ஆனா, எங்க சேர்மன் முழு சம்பளமும் கொடுத்துட்டாரு. அதவெச்சுதான் இந்த லாக்டௌன் கோரத்திலிருந்து எங்க குடும்பம் தப்பிச்சது. ஒரு நிறுவனம் வேலைகொடுத்து, தன் பணியாளர்களை படிக்கவும் வெக்கிறதை இதுக்கு முன்னாடி நான் கேள்விப்பட்டதே இல்ல. அதனாலதான் எங்க சேர்மனை நாங்க எல்லாரும் அப்பானு கூப்பிடறோம்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

வளாக தியான ஹாலில் இருந்த பெண்கள், ``ஒவ்வொரு ஷிஃப்டுக்குப் போறதுக்கு முன்னாடியும் இங்கே அஞ்சு நிமிஷம் பிரேயர் நடக்கும். முன்னாடி, பொண்ணுங்களுக்கு எல்லாம் வாரத்துக்கு ஒருநாள் முட்டை, ஒருநாள் சிக்கன் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இப்ப நோய் எதிர்ப்பு சக்திக்காக மூணு நாள் முட்டை, ரெண்டு நாள் நான்-வெஜ் கொடுக்குறாங்க.

எங்க சேர்மன்வரை எல்லாருக்கும் இதே சாப்பாடுதான் எனும் அளவுக்கு தரமா இருக்கும். கபசுர குடிநீர், வைட்டமின் மாத்திரைகள், ஊழியர்களின் மன அழுத்தம் குறைய யோகா, தியானப் பயிற்சிகள்னு எல்லாம் வழங்கி கொரோனாவை எதிர்கொண்டது எங்க நிறுவனம்’’ என்றவர்கள், தியானத்துக்கு அமர்ந்தனர்.

“வேலை கொடுக்குறாங்க... கூடவே, படிக்கவும் வைக்கிறாங்க!” - பெண்களைப் போற்றும் ஒரு தொழிற்சாலை

கே.பி.ஆர் குழும சேர்மன் கே.பி.ராமசாமி யிடம் பேசினோம்... “மதுரை, தேனினு தென்மாவட்டங்கள் மட்டுமல்லாம ஒடிசா, பீகார், அருணாசலப் பிரதேசம்னு இந்தியா முழுக்கவிருந்து வந்து எங்க நிறுவனத்துல வேலை பார்க்கிறாங்க. போக்குவரத்து முடங்கினப்போ, அவங்களுக்கெல்லாம் நாங்கதானே பொறுப்புன்னு இங்கேயே எல்லா வசதியும் செஞ்சுகொடுத்து தங்க வெச்சுட்டோம். வருஷம் முழுக்க நமக்கு உழைச்சுக்கொடுக்கிறவங்களுக்கு, லாக்டௌன் கணக்குப் பார்க்கக் கூடாதுனு முழு சம்பளமும் கொடுத்துட்டோம். சம்பளம், தங்கும் வசதி, உணவுன்னு இதுக்கெல்லாம் சுமார் ரூ.30 கோடி செலவாச்சு. இப்பவரை, ஒருத்தருக்குக்கூட கொரோனா பாசிட்டிவ் ஆகலை. எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும், எங்க ஊழியர்களை கைவிடமாட்டோம்

18 ப்ளஸ் ஊழியர்களைத்தான் வேலைக்கு எடுப்போம். வேலைக்குப் போயே ஆகணும் என்ற பொருளாதார அழுத்தத்துல இருக்கிற, மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமா படிக்க முடியாமப்போன 16 ப்ளஸ் வயதினரும் இங்கே வர்றாங்க. அவங்களை பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ பரீட்சை எழுத வைக்க படிக்க வைக்கிறோம். 14 வயதுக்குக் கீழ குழந்தை தொழிலாளர்களை எடுக்க மாட்டோம்’’ என்றவரிடம், பொதுவாக மில்களில் வேலை செய்யும் பெண்களுக்கு ஏற்படுவதாகச் சொல்லப்படும் ஆரோக்கியப் பிரச்னைகள் குறித்துக் கேட்டோம்.

 இச்சா சக்தி
இச்சா சக்தி

‘`எங்க நிறுவனத்தைப் பொறுத்தவரைக்கும் எட்டு மணி நேரம் மட்டுமே ஷிஃப்ட் வேலை, இங்கேயே ஹெல்த் கேர், நல்ல சாப்பாடு, மனநலம்வரை எங்க பெண் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்றோம். குக்கிராமத்துல இருந்து இங்க வர்ற பொண்ணுங்களுக்கும் அடிப்படை பயிற்சி கொடுத்து எடுத்துக்

கறோம். மேலும் படிப்பைக் கொடுத்து, ஸ்கில் டெவலப்மென்ட் பயிற்சியளித்து, பிளேஸ்மென்ட்வரை வாங்கிக்கொடுக்கிறோம். இங்கே வேலைபார்த்து படிச்சு, தனியார் நிறுவனங்கள் முதல் கவர்ன்மென்ட் வேலை வரை கிடைச்சவங்களும் இருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஒவ்வொரு குடும்பத் தலைவியும் நல்லாருந்தா, நாடே நல்லாருக்கும்’’ என்றார்.

வாழ்த்துகள் கே.பி.ஆர்!