Published:Updated:

முகத்தைப் பொலிவாக்கும் `கொலாஜென் மாஸ்க்' - தயாரிப்பது எப்படி? #Video

கொலாஜென் புரதம் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் மாஸ்கைப் பயன்படுத்தும்போது, அந்தப் புரதம் சருமத்துக்குள் சென்று முகத்துக்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.

#BeautyTips
#BeautyTips

ஆன்டி ஏஜிங் பிரச்னைகளுக்காக அழகு நிலையங்களில் 'கொலாஜென் மாஸ்க்' சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொலாஜென் என்பது ஒருவகை புரதம். "கொலாஜென் புரதம் சேர்க்கப்பட்டு உருவாக்கப்படும் மாஸ்கைப் பயன்படுத்தும்போது, அந்தப் புரதம் சருமத்துக்குள் சென்று முகத்துக்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்" என்கிறார் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.

Beautician Vasundhra
Beautician Vasundhra
கொலாஜென் மாஸ்க் பயன்படுத்துவது குறித்தும் அதன் பலன்களையும் தொடர்ந்து விளக்குகிறார்.

``45 வயதில் முகத்தில் சுருக்கங்கள் வெளியே தெரியும் நிலை மாறி, இன்று 30 வயதைக் கடந்தவர்களுக்குக்கூட முகத்தில் சுருக்கங்கள் தெரிகின்றன. சிலருக்கு 20களிலேயே கண்களைச் சுற்றி கருமை படர்ந்துவிடுகிறது. இதுபோன்ற ஆன்டி ஏஜிங் பிரச்னைகளான முகத்தில் சுருக்கம், வெயிலில் செல்வதால் முகத்தில் உள்ள சருமத்தின் நிறம் கறுப்பாக மாறுதல் போன்ற பிரச்னைகளைச் சீராக்குவதற்கு கொலாஜென் மாஸ்க் போடப்படுகிறது. கொலாஜென் மாஸ்க்கை வீட்டில் தயாரிக்க முடியாது. அழகு நிலையங்களில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடுகளில் இதைப் பயன்படுத்த விரும்புவோர் கடைகளில் விற்பனை செய்யப்படும் மாஸ்க்கை வாங்கிப் பயன்படுத்தலாம்.

கொலாஜென் மாஸ்க்கை வீட்டில் தயாரிக்க முடியாது. அழகு நிலையங்களில் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீடுகளில் இதைப் பயன்படுத்த விரும்புவோர் கடைகளில் விற்பனை செய்யப்படும் மாஸ்க்கை வாங்கிப் பயன்படுத்தலாம்.

Vikatan

கடைகளில் ஜெல் போன்ற மாஸ்க்காவும் 'டீஹைட்ரேடட் மாஸ்க் (Dehydrated Mask) 'காவும் கிடைக்கிறது. டீஹைட்ரேடட் மாஸ்க் ஒரு ஷீட் போன்று இருக்கும். தண்ணீர் பட்டதும் ஆக்டிவேட் ஆகி ஜெல் போன்ற மாஸ்க் உருவாகிவிடும்.

#BeautyTips
#BeautyTips

மாஸ்கை சிறிய அளவில் வெட்டி எடுத்து, கண்ணுக்கு அடியில், மூக்கின் மேல், கன்னங்களில், கழுத்துப் பகுதியில் எனத் தேவைப்பட்ட இடங்களில் மட்டும்கூட பயன்படுத்தலாம். வாரத்துக்கு ஒருநாள் அல்லது 15 நாள்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கைப் பயன்படுத்தி வர, முகத்தில் நல்ல மாற்றங்கள் தெரியும். முகத்தில் பொலிவு கூடும்" என்கிறார் வசுந்தரா.

பயணத்தின்போதும் பளிச் லுக்... அழகான சருமத்துக்கு அவசிய டிப்ஸ்!