Published:Updated:

வருகிறாள் ஜாஸ்மின் பாண்ட்!

ஜாஸ்மின் பாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜாஸ்மின் பாண்ட்

சிரிக்கலாம் சிந்திக்கலாம்

வருகிறாள் ஜாஸ்மின் பாண்ட்!

சிரிக்கலாம் சிந்திக்கலாம்

Published:Updated:
ஜாஸ்மின் பாண்ட்
பிரீமியம் ஸ்டோரி
ஜாஸ்மின் பாண்ட்

ஜேம்ஸ் பாண்ட் சாகசங்களை ஏன் ஆண்கள் மட்டுமே செய்ய வேண்டும்? பெண் ஜேம்ஸ் பாண்ட்கள் செய்யக்கூடாதா? `Why should boys have all the fun?' என ஹாலிவுட்டில் கொந்தளிக்கத் தொடங்கிவிட்டார்கள். இதற்கான தூண்டுதலையும் முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் பிராஸ்னன் அளித்துவிட்டார். ஸோ, பெண் ஜேம்ஸ் பாண்ட் செய்யும் சாகசங்களை நாம் காணவிருக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதனால், அந்தப் படம் எப்படியெல்லாம் இருக்கலாம் என சிறுமூளைக்குக் கொஞ்சம் வேலை கொடுத்ததில்...

பெண் ஜேம்ஸ் பாண்டை `லேடி ஜேம்ஸ் பாண்ட்’ என அழைத்துக்கொண்டிருக்க முடியாது அல்லவா? `பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்... லேடி ஜேம்ஸ் பாண்ட்!’ எனச் சொல்லிமுடிப்பதற்குள் வில்லன் உலகத்தையே அழித்துவிடுவான். மிக முக்கியமாக, சொல்லும்போது மாஸாக இல்லாமல் தமாஷாக இருக்கிறது. அதனால், லேடி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு `ஜாஸ்மின் பாண்ட்' எனப் பெயர் வைத்துவிட்டால் என்ன? பாண்ட்... ஜாஸ்மின் பாண்ட்! `பிரிட்டிஷ் மல்லி, மணக்குது சொல்லி' என்று தமிழ் டப்பிங்கிலும் தாறுமாறு பண்ணலாமே!

வருகிறாள் ஜாஸ்மின் பாண்ட்!

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் கில்பான்ஸி சில்பான்ஸாக வரும் பாண்ட் கேர்ள்ஸைப் பார்க்க வரும் கூட்டம் மெய்யாலுமே அதிகம். ஆகவே, பாண்ட் கேர்ள்ஸைப் போல பாண்ட் பாய்ஸை இறக்கிவிடுவோம்.

`M’ கதாபாத்திரமும் ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக அந்தப் பாத்திரத்தில் நடித்துவரும் ஜுடி டென்ச்சுக்குச் சில ஊர்களில் ரசிகர் மன்றமெல்லாம் இருக்கிறது. `தாய்க் கிழவி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அவருக்குப் பதிலாக தாத்தா ஒருவரை அவசியம் நடிக்கவைக்க வேண்டும். அதேபோல, பாண்டுக்கு ஏற்றாற்போல புதுவிதமான ஆயுதங்களை உருவாக்கித்தரும் Q கதாபாத்திரத்தில் பெண்ணே நடித்தால் சிறப்பு. ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத்தானே தெரியும்!

ஆயுதங்கள் எனும்போது, பாண்டின் ஆஸ்தான `ஆஸ்டன் மார்டின்’ கார்களும் நினைவுக்கு வரும். நாம் ஏன் கார்களைத் தூக்கிப்போட்டு ஸ்கூட்டிகளை முயற்சி செய்யக் கூடாது? காரும் ஓட்டலாம்தான், அதைவிட ஸ்கூட்டிகளை முயற்சி செய்து பார்க்கலாம். ஸ்கூட்டியின் சீட்டுக்கு அடியில் அபாயகரமான ஆயுதங்கள், பொத்தானை அழுத்தினால் ஸ்கூட்டி தனக்குத்தானே சென்டர் ஸ்டாண்டு போட்டுக்கொள்ளும் டெக்னாலஜி, ஹெல்மெட்டுக்குள் பொருத்தப்பட்ட துப்பட்டா, தலைக்கு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு `கவர்’ என சொன்னாலே போதும்... ஹெல்மெட்டுக்குள் இருக்கும் துப்பட்டா முகத்தை மூடி, பத்து விதமான ஸ்கின் ப்ராப்ளம்களிலிருந்து ஹீரோயினைக் காப்பாற்றும். செமல்ல..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதேபோல, மின்சாரத்தைச் செலுத்தும் லிப்ஸ்டிக், தோட்டாக்கள் உமிழும் ஐ ப்ரோ பென்சில், மயக்க மருந்து பவுடர், ரசாயன வெடிகுண்டாக வெடிக்கும் பாடி ஸ்ப்ரே என ஒரேயொரு ஹேண்ட்பேக்கில் குட்டி ஆயுதக்கிடங்கையே வைத்து கெத்துக் காட்டலாம்.

பொதுவாக, ஜேம்ஸ் பாண்ட் படங்கள் எல்லாம் ஒருமாதிரி இருட்டாகவே இருக்கும். அதை ஜாஸ்மின் பாண்ட் படங்களில் விட்டொ ழிக்கலாம். பஞ்சுமிட்டாய் கலர், மயில்கழுத்து கலர், கத்திரிப்பூ கலர் என கலர்ஃபுல்லான படமாகவும் மாற்றலாம்.

எல்லா ஜேம்ஸ் பாண்ட் வில்லன்களும் உலகை அழிக்கவே திட்டம் தீட்டுவார்கள். அழித்துவிட்டு, வேறு கிரகத்துக்கு ஓடும் திட்டமும் அவர்களிடம் இருக்காது. பின்னர், எதற்குத்தான் இந்த வேண்டாத வேலை என இன்னும் புலப்படவில்லை. சரி, அதை விடுங்கள். `என் தாய்க்கு ஒரு பிரச்னைன்னா ஆம்புலன்ஸ்ல வருவான். என் தாய்நாட்டுக்கு ஒரு பிரச்னைன்னா நானே வருவேன்' என எத்தனை நாளைக்குத்தான் ஹீரோக்களே போய் வில்லன்களை வேட்டையாடுவது? `தாய்நாட்டுக்கு ஒரு பிரச்னைன்னா, தாய்க்குலம் நானே வருவேன்' என சிங்கப்பெண்கள் சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறுவதைப் பார்க்கவும் நன்றாகத்தான் இருக்கும்.

ஜேம்ஸ் பாண்டைப் பிடித்துவைத்துக் கொண்டு, இந்த வில்லப் பயபுள்ளைகள் கொல்லவே மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஜேம்ஸ் பாண்டை எப்படி கொல்லப்போகிறோம் என வெகுளித்தனத்தால் பிளானை லீக் பண்ணிக்கொண்டிருப்பார்கள். ஜேம்ஸும் `ஓ இதுதான் உங்க பிளானா' என எளிதாக சமாளித்துவிட்டு எஸ்ஸாகிவிடுவார். அதை மட்டும் மாற்றிவிடவே வேண்டாம். எப்படியும் ஜேம்ஸ் பாண்ட் சாகமாட்டார் என எல்லோருக்கும் தெரியும். அப்படியும் படம் பதைபதைக்க வைக்கிறது இல்லையா? அதுதான் 007 சீரிஸ் மேஜிக். சரி, ஜேம்ஸ் பாண்டுக்கு 007 போல ஜாஸ்மின் பாண்டுக்கு என்ன கோடு நம்பர் கொடுக்கலாம் எனச் சரியான காரணத்தோடு யோசியுங்கள் மக்கழே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism