கோடைக்காலம் தொடங்கிவிட்டது. குளுகுளு ஆடைகளைத் தேடி அணிய ஆரம்பித்திருக்கிறோம். உடை முதல் மேக்கப் வரை கூல் டிப்ஸ் வழங்குகிறார் காஸ்டியூம் டிசைனர் நேவிஸ் கேத்தரின்.

அடர் நிறங்களைத் தவிருங்கள்...

பொதுவாக அடர்நிறங்கள் சூரிய வெளிச்சத்தை ஈர்த்து, உடலின் வெப்பநிலையை அதிகரிக்கக்கூடியவை என்பதால் கோடை நேரத்தில் அடர்நிற ஆடைகளைத் தவிர்க்கவும். பேஸ்டல், நியான் போன்ற கூல் நிறங்களில் ஆடைகளைத் தேர்வு செய்யலாம். மிக்ஸ் மேட்ச் செய்யும்போது, அடர் நிறம் மற்றும் வெளிர் நிற காம்போவில் ஆடைகளை மேட்ச் செய்கிறீர்கள் என்றால் டாப் வெளிர் நிறத்தில் இருக்கட்டும்.

மெட்டீரியல் தேர்வு...

ஸ்டோன் மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட ஆடைகளைத் தேர்வு செய்யும் போது சருமத்தை உறுத்தும். மேலும், ஆடையின் எடையும் அதிகமாக இருக்கும். எனவே, இத்தகைய ஆடைகளைக் கோடைக்காலத்தில் கூடு மானவரை தவிர்ப்பது நல்லது. செல்ஃப் டிசைன்கள் கொண்ட இக்கட், போஹோ டாட், (Boho dot ) செக்டு பேட்டர்ன் மெட்டீரியல்களைத் தேர்வு செய்யலாம். ஃப்ளோரல் டிசைன் மெட்டீரியல்கள் கூடுதல் அழகு. டெனிம் மெட்டீரியல் கனமாக இருப் பதுடன் வியர்வையை உறிஞ்சாது என்பதால் அதைத் தவிர்த்து காட்டன், லினன் மற்றும் லைட் வெயிட் மெட்டீரியல்கள் சிறந்த சாய்ஸ். விசேஷங்களுக்குச் செல்லும்போது காட்டன் ஆடைகள் சிறப்பாக இருக்காது என்று நினைக்க வேண்டாம். ஆடையின் மீது ஒரு சில்க் ஓவர் லே அணிவது, சில்க் டாப்புக்கு ஃப்ரீ பிட் பேன்ட்களைத் தேர்வு செய்வது என வித்தி யாசம் காட்டுங்கள்.

மேக்கப்...

கோடைக்காலத்தில் சருமம் அதிகம் கருமையாகும் என்பதால் கட்டாயம் சன் ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும். பகல் நேரத்தில் அதிக மேக்கப்பைத் தவிர்க்கவும். சருமத்தைப் புத்துணர்வுடன் வைத்திருக்க தினமும் க்ளென்ஸிங், டோனிங், மாய்ஸ் சரைஸிங் செய்வது அவசியம். லைட் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தவும். ஃப்ரீ ஹேர்ஸ்டைல் தவிர்த்து ஹை பன் அல்லது பிரெய்டு ஹேர் ஸ்டைல் செய்து கொள்ளலாம்.

அதிக ஆபரணங்கள் வேண்டாமே...

அதிக ஆபரணங்கள் அணியும்போது உடலில் உள்ள வியர்வைபட்டு எரிச்சல் உணர்வு ஏற்படுவதுடன் சருமத்தில் ரேஷஸ், அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அவசியம் எனில் நூலினால் செய்யப்பட்ட நகைகள், பேப்பரில் செய்யப்படும் குவில்லிங் நகைகளை அணியலாம். ஃபேப்ரிக் காலணிகள் சம்மருக்கு பெஸ்ட் சாய்ஸ். உங்கள் ஆடையின் நிறத்திலேயே மாஸ்க் மற்றும் ஸ்டோல்களை வாங்கிப் பயன்படுத்தலாம்.

ஸ்டைலிங்...

சம்மரில் ஸ்லீவ் இல்லாத ஆடைகளைத் தேர்வு செய்யலாம். சருமம் கருமையாகி விடுமே என பயப்படுபவர்கள் சன் ஸ்கிரீன் உபயோகிக்கலாம். ஸ்கர்ட், பலாசோ, ஃப்ரீ ஃபிட்டிங் பேன்ட் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். சல்வார்தான் என்னுடைய சாய்ஸ் என்பவர்கள் லெகின்ஸ், ஜெகின்ஸ் அணிவதைத் தவிர்த்து காற்றோட்டமான ஆடைகளைத் தேர்வு செய்யுங்கள். புடவை விரும்பிகள் ரஃபில் பிளவுஸ், பெல் ஸ்லீவ் பிளவுஸ் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். கூடுமானவரை பேடடு பிராக்களைத் தவிர்ப்பது நல்லது.