என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

டிரெண்டி டூத் ப்ரஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
டிரெண்டி டூத் ப்ரஷ்

வீட்டில் சாதாரணமாக உபயோகிக்கும் பொருட்களை வைத்தே ட்ரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர் செய்து அசத்திடலாம் வாங்க!

பூமாதேவி
பூமாதேவி
வீட்டிலிருக்கும் பொருள்களை வைத்தே ‘டூத் பிரஷ் ஹோல்டர்’ செய்வது எப்படி...? கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் பூமாதேவி.
டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

தேவையான பொருள்கள்: பாட்டில் கேப், கயிறு, துணி, கத்தரிக்கோல், க்ளூ கன், நூல், ஹேர் பேண்டு.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 1: உங்களுக்கு விருப்பப்பட்ட கலர் துணியை சதுர வடிவில் வெட்டி அதில் பாட்டில் மூடியை வைக்கவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 2: படத்தில் உள்ளபடி மூடியின் உள் பகுதியில் க்ளூ கன் பயன்படுத்தி துணியில் ஒட்டவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 3: சுருக்கங்கள் இல்லாத பர்ஃபெக்ட் பாட்டில் கேப் பீஸ் இப் போது ரெடி.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 4: துணியால் கவர் செய்த பாட்டில் கேப் பீஸைச் சுற்றி அதற் கேற்ற அளவில் கயிற்றை ஒட்டவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 5: 30 செ.மீ அளவில் கயிற்றை தனித்தனியாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 6: ஒவ்வொரு கயிற்றின் பீஸை வெட்டும்போதும் வெட்ட வேண்டிய இடத்தின் அருகில் நூலை இறுக்கமாக கட்டிவிடவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 7: முனைகளில் நூல் கட்டி விடுவதால் வெட்டும்போது கயிறு பிரியாமல் இருக்கும். இப்போது, நூல் கட்டியிருக்கும் பகுதியில் வெட்டி நான்கு துண்டுகளாக்கவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 8: வெட்டிவைத்திருக்கும் கயிற்றுத் துண்டை வட்டமாகச் சுற்றிவைத்து முனையில் க்ளூ தடவி ஒட்டி வைத்துக்கொள்ளவும். நான்கு கயிற்றுத் துண்டுகளையும் இதைப் போலவே செய்யவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 9: வட்ட வடிவில் இருக்கும் துண்டுகளை நீளமாகச் சேர்க்கவும். அதன் நடுப்பகுதியை இணைக்கும் படியாக சென்டரில் க்ளூ பயன்படுத்தி ஒட்டவும். இதேபோல நான்கு பீஸ் களை ‘8’ வடிவத்தில் தயார் செய்யவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 10: இரண்டு பீஸ்களை எடுத்து ஒன்றன் மேல் ஒன்று என நடுவில் இணைக்கும்படி க்ளூ தடவவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 11: பாக்கி இரண்டு பீஸ்களை ஏற்கெனவே ஒட்டி வைத்திருக்கும் பகுதியில் வலது பக்கம் ஒன்றும் இடது பக்கம் ஒன்றுமாக ஒட்டிக்கொள்ளவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 12: ஒட்டிய நான்கு பீஸ்களும் ‘பூ’ வடிவத்தில் கிடைக்கும். இந்தப் ‘பூ’ வடிவ கயிற்றில் இறுக்கமாக ஹேர் பேண்டு போட்டுவிடவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 13: இப்போது துணியால் கவர் செய்திருந்த பாட்டில் கேப் பீஸ்ஸில் ‘பூ’ வடிவ கயிறுகளை ஒவ்வோர் இதழாக ஒட்டவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 14: ஒட்டிய பாகம் தவிர்த்து மேல் பாகத்தில் உள்ள ஒவ்வோர் இதழையும் லேசாக இழுத்துவிட ‘பூ’ வடிவம் இன்னும் நேர்த்தியாகக் கிடைக்கும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 15: ஏற்கெனவே நாம் பாட்டில் கேப் பீஸை சுற்றிவைத்திருந்த கயிற்றில் பிடித்த கலர் கல்லை ஒட்டிக்கொள்ளவும்.

டிரெண்டி டூத் ப்ரஷ் ஹோல்டர்!

ஸ்டெப் 16: டிரெண்டியான டூத் ப்ரஷ் ஹோல்டர் ரெடி!